Saturday, December 18, 2010

Raja is Dalit.... If so, who is Umashankar, I.A.S....?


ஃகார்ட்டூன்
அடக்க முடியாதா!

ஒரு வோட்டுக்கு நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாய்

தினமலரில் ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக வந்த ஒரு கட்டுரையில் இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று கூறியுள்ளனர்.

இதில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியிருந்தனர். அது சத்தியமா தமிழ்நாட்டை திருத்துவதற்க்கோ இல்லை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்க்கோ இல்லை. இருந்தாலும் அது தமிழ்நாட்டின் சொத்தான ஓட்டுக்கு பணமே. அவர்கள் சொல்லிருந்த விஷயமாவது

"தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை."

இந்த விஷயம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது எப்படினாலும் நாம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த போவதில்லை. அதனால் நான் உங்களை பணம் வாங்காதிங்கனு சொல்ல போறதில்லை. கம்மியா வாங்கிடாதிங்கனு தான் சொல்றேன். உங்களுடைய ஒரு ஓட்டுக்கு நாற்பத்திரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கிறது.( அது நம்ம பணம்ங்க. அப்புறம் நாம தானே இன்கம் டாக்ஸ் எல்லாம் செலுத்துறோம். அரசியல்வாதிகளா ஒழுங்கா செலுத்துரானுங்க?) இந்த பணத்தை அடித்தது நம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களே என்று சொல்லபடுகிறது. அப்படியானால் நமக்கு தானே முதலுரிமை. நம்ம ஊர்காரங்க பணம் அடிச்சதெல்லாம் எதுக்காக? நாம பாட்டுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம்னு ஆரம்பிச்சு திருமங்கலத்துல இருபத்தி ஐந்தாயிரம் வரைன்னு போயிட்டோம். யாருக்காக இருந்தாலும் நமக்கு ஓட்டுக்கு பணம் குடுக்கனும்னா கண்டிப்பாக இப்படி மாபெரும் ஊழல் செஞ்சு தானே ஆகணும்.இல்லையா இப்பவெல்லாம் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு கம்மியா எங்க தொகுதியில நாங்க வாங்குரதில்லைங்க ( நானும் திருமங்கலத்திருக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவன்).

ஆனால் இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயம். இப்போ வருடங்களும் அதிகமாகிடுச்சு. ஊழலும் அதிகமாகிடுச்சு. நம்ம விலையும் அதிகமாகிடுச்சு. நாம தான் அதை ஒழுங்கா வசூல் செய்யணும். பொருள் நம்முடையது. அவங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு தினமலர் சொல்லிருச்சு.( ப்ரோக்கர் கமிசன் கிடையாதுங்க ) இனி நாம என்ன செய்யனும்னா ஒழுங்கா உட்காந்து யோசிச்சு நல்ல விலையா பேசணும்.

என்னை கேட்டால் ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் கேட்கலாம்னு சொல்லுவேன். அவங்களால நாற்பத்திரண்டு கொடுக்க முடிந்தாலும் அங்கே பணம் பட்டுவாடா செய்பவருக்கும் ஒரு நல்ல தொகை கிடைக்க வேண்டுமே.( அது தனி பதிவாக போடுறேன். பணம் பட்டுவாடா செய்பவர்கள் தயவு செய்து பின்னர் என்னை சந்திக்கவும்.) அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கும் வேணாம் அவர்களுக்கும் வேணாம். நாற்பதாயிரம் ரூபாய் கேளுங்கள் என்கிறேன். ஆனால் பணம் வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணத்திற்கு நான் ஜவாப்தாரி இல்லை. நல்ல ப்ரோக்கர்களை தேடி கேளுங்கள். நாற்பதாயிரம் ரூபாய் ஓட்டு உங்களுக்கு இல்லையென்றால் எதிர்கட்சிக்கு என்று கூறிவிடுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன். ஏமாந்து விடாதிர்கள். ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் ரூபாய் என்றால் நான்கு பேருக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் லட்சாதிபதியாவதற்க்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு இது. ஏமாறுபவர்கள் பின்னர் யாரிடமும் கேட்க முடியாது. இது ஒரு முறையே கிடைக்கும் வாய்ப்பு.

( அய்யா நான் யாரையும் குறை சொல்ல வரலைங்க. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் வாங்கிய வீடு பத்து வருஷங்களுக்கு முன்னர் ஒரு கோடி என்றால் இப்போதும் அதே விலையிலே அவர் விற்பார். தயவு செய்து வீடு வாங்க ராசாவை அணுகவும்)

http://pagalavantamil.blogspot.com/2010/11/blog-post_22.html

Friday, December 17, 2010

நீரா ராடியா டேப் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி

நீரா ராடியா டேப் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி

சென்னை, நவ.24,2010

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நீரா ராடியா - ராசா, நீரா ராடியா - கனிமொழி உரையாடல்கள் குறித்து முதல்வர் கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்காதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

பகுத்தறிவு...

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தஞ்சை பெரிய கோயிலின் பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் பின்பக்க வாசல் வழியாக கோயிலுக்குள் சென்றவர், கருணாநிதி.

அப்போது பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக கோயிலுக்குள் சென்று ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடியதை கண்டு களித்த கருணாநிதி; ஜோதிடரின் சொல்லுக்கு இணங்க மஞ்சள் துண்டை அணிந்து கொள்ளும் கருணாநிதி; பெரியார் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், குடும்பத்துடன் திருக்குவளை கிராமத்திற்குச் சென்று குடும்ப குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தது; கோயில் குடமுழுக்கு விழாக்களில் தன் மனைவி, துணைவி, மகள்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்வது; வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால் தன் குடும்ப உறுப்பினர்கள் சுற்றித் திரிவது - இவற்றை எல்லாம் மறந்து, பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

"பணத்தால் இயங்க வேண்டிய நிலையிலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகி விடும். அங்கே தியாகமும், தொண்டுணர்வும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லாளர்களும், தன்னலங்களும் தலைமையேற்று விடுவர்" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க-வை பணக்கார இயக்கமாக மட்டுமல்லாமல், குடும்ப இயக்கமாகவே மாற்றிய பெருமை கருணாநிதியையே சாரும்.

"அரசியல் இயக்கம் பொதுப்பணி உணர்வோடு கூடிய கூட்டமாக அமையாவிடில், பதவியைப் பெறும் வாயிலென்றும், உடமையாளன் தன் உடமையைக் காக்கும் பீடம் என்றும் கருதும் மனப்போக்கு உருவாகிவிடும்" என்றார் பேரறிஞர் அண்ணா. இன்று தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியைப் பெறுவதற்கும், சொத்துகளை குவிப்பதற்கும் தானே தி.மு.க. என்கிற கட்சியை கருணாநிதி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்? கருணாநிதியிடம் பொதுப்பணி எங்கு இருக்கிறது? அவரிடம் இருப்பதெல்லாம் குடும்பப் பணி ஒன்று தான்.

"ஜனநாயகம் பின்னோக்கிச் செல்லும் நிலை கூடாது. சிறந்த ஜனநாயக சூழ்நிலை வளர அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், ஜனநாயகத்தை வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இப்படிப்பட்ட கருணாநிதிக்கு, தந்தை பெரியார் கொள்கை மற்றும் பேரறிஞர் அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? திமுக-வை குடும்ப நிறுவனம் ஆக்கிவிட்டார் கருணாநிதி என்று உலகப் புகழ்பெற்ற "THE NEW YORK TIMES" அமெரிக்க நாளிதழ் கூட விமர்சனம் செய்திருக்கிறது.

அறிக்கைகள்...

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், "யாரோ எழுதுகிறார்கள் - யாரோ தட்டச்சு செய்து அதனை "பேக்ஸ்" மூலம் அனுப்புகிறார்கள். சில நாட்கள் அதைப் படித்து அம்மையார் கையெழுத்து போடுகிறார். சில நாட்களில் அவருக்கு அதற்கே நேரம் கிடைப்பதில்லை. எனவே அதையும் தட்டச்சு செய்தே அனுப்பி விடுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கருணாநிதி தன்னைப் போலவே அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்! எனது அறிக்கைகள் அனைத்தும் என்னால் எழுதப்பட்டு, தட்டச்சு செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, என்னுடைய கையெழுத்துடன் தான் தினமும் வெளியிடப்படுகின்றன என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நேரடியாகவும், "பேக்ஸ்" மூலமும் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கைகளில் என்னுடைய கையெழுத்து நிச்சயம் இருக்கும்.

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் வசதிக்காக மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் போது என்னுடைய கையெழுத்து அதில் இருக்காது. அதற்கு அவசியமும் இல்லை. வங்கிகள், பொதுத் துறை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர் கணக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்படும் போது இந்த முறை தான் பின்பற்றப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்திய அரசின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தன்னுடைய அமைச்சர் மூலம் சுருட்டிக் கொள்ளும் கருணாநிதிக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை அறிந்து கொள்ள நேரமில்லை போலும்! அந்த அளவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது!

"உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்" என்ற அடிப்படையில் செயல்படக் கூடியவர் கருணாநிதி என்று நான் தெரிவித்த கருத்திற்கு நீண்ட விளக்கம் அளித்து இருக்கிறார் கருணாநிதி.

இந்திரா...

முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி மதுரை வந்த போது அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு, அந்தத் தாக்குதலில் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தை, பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் வகையில் கொச்சைபடுத்திவிட்டு, பின்னர் "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக" என்று கூறியதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதையும்; விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கு அன்னை இந்திரா காந்தி விண்ணப்பித்தால் அதை பரிசீலிக்கத் தயார் என்று தி.மு.க. அறிவித்ததை யாரும் மறக்கவில்லை என்பதையும்;

பெருந்தலைவர் காமராஜ், தியாகி கக்கன்ஜி, மூதறிஞர் ராஜாஜி என அனைத்துத் தலைவர்களையும் கருணாநிதி வசைபாடியதும்; ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் நிழல் கருணாநிதியின் மீது படிந்திருக்கிறது என்று ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியதும் மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதையும் கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிபிஐ அதிகாரி மாற்றம்...

அடுத்தபடியாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டதற்கு தான் காரணமல்ல என்றும், இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இதற்கு பின்னணியில் கருணாநிதியும், அவரது குடும்பமும் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், இந்த மாறுதலில் கருணாநிதியின் தலையீடோ அல்லது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக-வின் தலையீடோ நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்காது. சூழ்நிலைச் சான்று (Circumstantial evidence) தான் இதற்கு ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மத்திய கண்காணிப்பு ஆடையர் நியமனம் குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது. ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய தொலைதொடர்புத் துறை செயலாளர் எப்படி மத்திய கண்காணிப்பு ஆடையராக நியமனம் செய்யப்பட்டார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இதிலும் கருணாநிதியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் தற்போது பரவலாக ஏற்பட்டுள்ளது. இதற்கும் சூழ்நிலைச் சான்று தான் ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நீரா ராடியா...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முதலில் பேட்டி அளித்த கருணாநிதி, முந்தைய அமைச்சர்கள் பின்பற்றியதைத் தான் ராசா பின்பற்றினார் என்றும், அதில் தவறு ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறினார். இதனை அடுத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழுவுக்கு (Empowered Group of Ministers) மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு 2006-ஆம் ஆண்டே கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன்.
இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயிப்பதில் தி.மு.க. குறியாக இருந்தது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இது போன்று ஆதாரங்கள் வந்து கொண்டுள்ள நிலையில், ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு கருணாநிதி அறிக்கை வெளியிடுவது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.

நீரா ராடியா - ராசா, நீரா ராடியா - கனிமொழி உரையாடல்கள் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்கவில்லை.

இதே போன்று, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் கட்சித் தலைவரை அவரது இல்லத்தில் ரகசியமாக சந்தித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதன் மர்மம் என்ன என்பது குறித்து கருணாநிதி இதுவரை விளக்கவில்லை.

எது எப்படியோ, உலக மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குட்டு வெளிப்படும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டு இருக்கிறது," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

http://vikatan.com/news.php?page=5&nid=63

அய்யாவின் துணைவியார்

எக்ஸ்ட்ரா பிட்டிங்:
*************************

பெருமாளுக்கு மட்டுமா பூ? பொதுமக்களான தமிழர்களுக்கும் தான்.

ராசா என்பார்! எந்திரி என்பார்!ராஜ்ஜியம் இல்லை ஆள? திமுகவின் தில்லாலங்கடி அறிக்கை


பார்லிமென்ட்டின் ஜனநாயக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவும், நாட்டு மக்களுக்கு தேவையான பிரச்னைகள் விவாதித்து முடிவெடுக்கப்பட வழிவகுத்திடும் வகையில், ராஜா அமைசசர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்று தி.மு.க., முடிவெடுத்து அவருக்கு அறிவுறுத்தியுள்ளது,என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.ஆகா, என்ன ஒரு விளக்கம் பாருங்கள். என்ன ஒரு வார்த்தை ஜாலம் பாருங்கள். இப்படி பேசி பேசியே எவ்வளவு நாள் மக்களை ஏமாத்த போறீங்க?.

சொந்தமாகஒருசின்னகடைவைத்திருபவனுக்கே எப்படி விற்றால் லாபம் வரும்னு தெரியும் போது ஒரு மத்திய அமைச்சர் இப்படி ஒரு கேவலமான காரணம் சொல்லும்போது இன்னும் இது போல எத்தனை துறை இப்படி இயங்குகிறதுன்னு தெரியலை. கடவுள் தான் மக்களை காப்பாத்தனும்.

இந்தியாவில் நடந்த ஊழல்களில் மிகப் பெரியதான ஊழல் இது தான். இது வெளிப் பட்டதுமே ராசா ராஜினாமா செய்திருந்தால் திமுகவிற்குக் கொஞ்சமாவது கவுரவம் மிஞ்சி இருக்கும். ஏன் உச்சநீதிமன்றமே இந்த நபர் (ராசா)இன்னும் பதவியில் இருப்பது ஏன் எனகூறியும், அத்தனை எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் வெளி‌யேற்றப் படவேண்டும் என்று தீவீரமாக எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரசும் கடைசி நிமிடத்தில் ராஜா வெளியேறிவிட வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டதாலேயே ராஜினாமாவைச் சமர்ப்பித்திருக்கிறார். திமுகவிற்கு இது பேரிடியாகவே இருக்கும். எதிர் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து எங்கே காங்கிரஸ் ராஜாவை பதவி நீக்கம் செய்தால், திமுக தன்மானத்தை தக்கவைத்து கொள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டிய சூழல் ஏற்படும்,அதனால் வளம் கொழிக்கும் இலாக்கா பறிபோகும்,கொள்ளை அடிக்க முடியாது,கனிமொழியை எப்படி மத்திய அமைச்சர் ஆக்குவது, அதனால் நாமே ராஜாவை விலக்கிவிட்டால், ஜெயலலிதாவின் ஆதரவை அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்று கணக்கு போட்டு செய்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. ஜெயலலிதா மட்டும் இந்நேரம் ஆதரவு தருகிறேன் என்று கூறாமல் இருந்திருந்தால் ராஜா ராஜினாமா செய்திருக்கவே மாட்டார், திமுக தலைவர் கருணாநிதி யும் ஒத்துக்கொண்டிருக்கமாட்டார். எல்லாம் கூட்டணி பயம் தான் ராசா ராஜினாமா இந்திய லெவலில் எத்தனையோ கட்சிகள் ஆட்டி பார்த்த போதும் நடக்காத காரியம் ஜெயலலிதா அவர்கள் கொளுத்தி போட்ட சரவெடியால் உடனே காரியம் முடிஞ்சுடிச்சி.

நினைவிருக்கிறதா! எல்லா வேலைகளையும் விட்டு விட்டு டெல்லியில் சக்கர வண்டியில் திமுக,தலைவர் கருணாநிதி இந்த மந்திரி பதவிக்கு தானே குறி வைத்து அலைந்தார்.தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தயாநிதிபேரனுக்கு கிடைக்க வேண்டிய தகவல் தொடர்பு துறையை மாற்றி ஜவுளித்துறையை கொடுத்துவிட்டு, ராஜாவுக்கு தகவல் தொடர்பு துறை கொடுத்து 'வேண்டியதை' (1.7லட்சம் கோடிகள்)எடுத்துக்கொண்டு பிரச்சனை வரும் பொழுது ராசாவை பலியாக்கி விட்டார். கைதேர்ந்த திருட்டு கூட்டம். இவ்வளவு ஆணித்தரமாக நிரூபித்த பிறகும் கழுத்தை பிடித்து தள்ள வேண்டி இருக்கிறது. மந்திரி பதவியில் இருந்து வெளியே தள்ளினால் மட்டும் போதுமா ? அந்த களவு போன பணம் எங்கு,இருக்கிறது யார் யார் இந்த கூட்டு கொள்ளையில் பயன் அடைந்தவர்கள், பினாமிகள் யார் என்று கண்டு பிடித்து அவர்களை "சட்டம் என்று ஒன்று இருந்தால்" அதன் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தர வேண்டும். சிபிஐ மற்றும் உச்ச நீதி மன்றம் எந்த வித பாரபட்சமும் இன்றி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கிட வேண்டும்.

http://nagainthu.blogspot.com/2010/11/blog-post_15.html

"ராஜராஜன் 1000" கருணாநிதி அவமரியாதை


"நீர் உயர நெல் உயரும் நெல் உயர மக்கள் உயர்வார்கள் மக்கள் உயர மன்னன் உயர்வான்" என்ற பழமொழி இன்று இந்த தி மு க ஆட்சியில் மக்கள் உயராமல், மன்னன் மட்டும் உயரும் காலமாக தமிழகம் மாறிவிட்டது.

இந்த சூழலில் ராஜராஜன் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி அவர்கள் ,

தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நல்ல உற்பத்தித் திறன் கொண்டது. எனவே, செம்மை நெல்லுக்கு ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், "ராஜராஜன் 1000' என்று பெயரிடுகிறேன் என்று அறிவிப்பு செய்து பேசியுள்ளார்கருணாநிதி. ஒரு மாநில முதல்வர், மூத்த அரசியல் வாதி, இந்திய அரசியலுக்கே ஆலோசனை சொல்பவர், முத்தமிழ் வித்தகர் என பல பெருமைகளை தாங்கியவர் இப்படியா பேசுவது .

உங்களுக்கு என்னையா ஆச்சு? செம்மை நெல் என்பது நெல் ரகம் அல்ல. அது நெல் சாகுபடி செய்யும் முறைக்குபெயர்தான் செம்மைநெல் சாகுபடியே தவிர அது ஒரு நெல்லின் பெயர் அல்ல என்பதே உண்மை ஆகும்.

இது கூட இந்த கரிகால் சோழ மன்னர் கலைஞர் கருணாநிதிக்கு தெரிய வில்லையா?நெல் ரகத்திற்கு பெயர் வைத்தால் கூட பரவாஇல்லை. சாகுபடி முறைக்கா ஒரு புகழ் பெற்ற மாமன்னன் ராஜராஜன் பெயரை சூட்டுவாங்க?. அதெல்லாம் கூட இருக்கட்டும், மக்களிடம் அதிகமாக சென்றடையும் ஜனரஞ்சகமாக இருக்கும் திட்டத்திற்கு எல்லாம் கலைஞர் கருணாநிதி என உங்கள் பெயர். பரிச்சயம் இல்லாத மக்களுக்கு தெரியாத ஒரு சாகுபடி முறை நெல் ரகத்திற்கு ராஜராஜன் பெயரா?.

வாழ்க உங்கள் பழந் தமிழரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் தமிழ்த்தொண்டு !!
!

http://nagainthu.blogspot.com/2010/09/1000.html

கருணாநிதியின் அரசியல் பண்பாடு

சென்னை: ஜூலை 12,2010,எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,'' என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.

எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

கலைஞரின்தமிழ்பண்பாடுசிலகேள்விகள்???

காமராஜரை கேவலமா பேச தமிழா சொல்லி குடுத்துச்சு
அந்த பண்பாட்டை கற்றுக்கொடுத்ததும் தமிழ்தானே?... ?

ஹிந்து என்றால் திருடன் என்று பேசிய தமிழ் பண்பாடு எங்கே கற்றது...

M.G.R பற்றி மலையாளி என்று கூப்பிடத் தூண்டியது? இவரது தமிழ் பண்பாடு.அந்த பண்பாட்டை கற்றுக்கொடுத்ததும் தமிழ்தானே?...

உ வே சுவாமிநாத ஐயர் மற்றும் பாரதியின் தமிழ்த்தொண்டினைப் பற்றி பேசாத இவரது தமிழ் பண்பாடு

தமிழ் பண்பாடு பற்றிபேசும் இவர் பார்பனர்களைப் பற்றியும்,
இந்து மதத்தைப் பற்றியும் எவ்வளவு தரக்குறைவாகப் பேசியிருப்பார்?

செல்வி ஜெயலலிதாவைப் பற்றி அசிங்கமாக எழுதியது அசிங்கமாக பேசியது எல்லாம் தமிழ் பண்பாடா?

கல்யாண வீட்டில் அரசியல் பேசும்போது தமிழ் இவருக்கு பண்பாட்டை கத்துதரவில்லையா?

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபொழுது தமிழர்கள் சோத்தால் அடித்த பிண்டங்கள் எனபேசியது எல்லாம் தமிழ் பண்பாடா?

வயதுக்கு பொருத்தமிலாத விமர்சனங்கள், பழிவாங்கும் குணம் எல்லாம் தமிழ் பண்பாடா?

மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் இலவச பணம் மற்றும் பொருள் விநியோகம், எல்லாம் தமிழ் பண்பாடா?

அரசு கஜானாவை காலிஆகிவிட்டு கடன் வாங்கும் குணம் எல்லாம் தமிழ் பண்பாடா?

வயதானாலும் பதவி ஆசையை விடாத குணம், இதெல்லாம் தமிழ் பண்பாடா?.
.கலைஞரே ! தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது அப்படினு சொல்லி தமிழை கேவலப்டுத்தாதீர்கள்.

http://nagainthu.blogspot.com/2010/07/122010.html

புரட்சித் தலைவர்… நெஞ்சில் அழியாத நினைவுகள்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு மக்கள் சூட்டிய பட்டங்கள் ஒன்றல்ல இரண்டல்ல… நாடறியும் இந்த உண்மையை. இன்றைய தலைமுறையினர் ரொம்பப் பேருக்கு தெரியாத ஒரு விஷயம்.. மத்திய அரசு கொடுக்க விரும்பிய ஒரு உயர்ந்த விருதை மக்கள் திலகம் மறுத்துவிட்டது.

1960-ம் ஆண்டு எம்ஜிஆருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க முடிவு செய்து, அவரிடம் தெரிவித்தது மத்திய அரசு.

ஆனால் பொன்மனச் செம்மல் அதை மறுத்துவிட்டார்.

காரணம் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்:

‘நான் ஒரு தமிழன். தமிழ் மொழியின் உரிமைக்காக குரல் கொடுப்பவன். ஆனால் இந்தி மொழியில் தரப்படும் பத்மஸ்ரீ என்ற விருது எனக்கு வேண்டாம்’ என்றார். மீண்டும் மத்திய அரசு அதிகாரிகள் எம்ஜிஆரிடம் தொடர்பு கொண்டபோதும், தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை அவர்.

திரைப்படத் துறையில் தான் இருந்த காலம் வரை பிறமொழிப் படங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார் எம்ஜிஆர். எத்தனையோ பிற மொழிப் பட வாய்ப்புகள் வந்தும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இன்னொரு பக்கம், அவர் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில், இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

அதே நேரம் அவரது படங்களுக்கு அண்டை மாநிலங்களிலும், ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர், முக்கியமாக இலங்கையில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. தமிழகத்துக்கு இணையாக, இலங்கையிலும் அவரது படங்கள் 100வது நாள் விழா கொண்டாடின.

தனக்கு அறிமுகமில்லாத மனிதர்களிடம் பழக நேரும் போதெல்லாம், சட்டென்று கையை நீட்டி, “நான் எம்ஜி ராமச்சந்திரன், சினிமா நடிகர்” என்று ஆரம்ப காலங்களில் அறிமுகம் செய்து கொள்வாராம்.

ஆனால் அதன் பிறகு நடந்தது வரலாறு. அவர் பெயரைக் கூட சொல்ல வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.

புரட்சித் தலைவர் என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை உருவானது.

தாய் சொல்லைத் தட்டாதவர் என்ற வார்த்தைக்கு சரியான இலக்கணம் மக்கள் திலகம்தான். தன் தாய் சொன்ன ஒரே காரணத்துக்காக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளவில்லை அவர். அம்மா சொன்னால் அர்த்தமிருக்கும் என்ற அதீத அன்பு அவருக்கு.

அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே என்பதை அன்றே தனது செயலால் காட்டியவர் பொன்மனச் செம்மல். தாய்க்காக கோயில் கட்டி, தினமும் கோட்டைக்கு கிளம்புமுன் அம்மாவின் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டுவிட்டுத்தான் கிளம்புவார்.

தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களில் மாணவர்களுக்கும், முதியோர் – தாய்மார்களுக்கும் எப்போதும் முதலிடம் தருவார் மக்கள் திலகம். கோட்டையில் அவர் இருந்தாரென்றால் எந்த நேரத்திலும் தாமதமின்றி அவரைப் பார்த்து உதவி பெற முடியும். பாதுகாப்பு கெடுபிடி எதுவும் இருக்காது. நமக்கும் அப்படி இரண்டு நேரடி அனுபவங்கள் உண்டு!

தினமும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் ராமாவரம் தோட்டத்துக்குப் போய் அவரைப் பார்ப்பதற்கென்றே எப்போதும் பெரும் கூட்டம் காத்திருக்கும். இவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி கட்டாயம் உண்டு, தோட்டத்தில்.

இசைஞானி இளையராஜா பொதுவாக யார் காலிலும் விழுந்து ஆசி பெற்றதில்லை. “என் அம்மாவுக்குப் பிறகு நான் காலில் விழுந்து ஆசி பெற்றது மக்கள் திலகம் எம்ஜிஆரிடம்தான். அதுவும் இரண்டு முறை” என்கிறார் இளையராஜா.

தான் போகிற இடமெல்லாம் மக்களுக்கு தன் சொந்த பணத்தை கணக்கு பார்க்காமல் அள்ளித் தருவது எம்ஜிஆர் வழக்கம். இதற்கு எம்ஜிஆர் அளித்துள்ள விளக்கம்: “என்னை தங்கள் சொந்தக்காரனாக இந்த மக்கள் பார்க்கிறார்கள். சொந்தக்காரன் வீட்டுக்கு வரும்போது வெறுங்கையோடு வருவது நன்றாக இருக்குமா… இருக்காதே..!” என்று பதில் கூறியுள்ளார் ஒரு பேட்டியில்.

http://www.envazhi.com/?p=14736

MGR ஒரு சகாப்தம் - 20 ஆம் நூற்றாண்டு கண்ட ஒப்பற்ற தலைவன்


முதல் போராட்டம்

1967 ஆம் ஆண்டில், தமிழக்த்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.

அப்போது கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலக்த்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.

தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.
அதிக வாக்கு யாரால் கிட்டியது?

அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.

ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.

தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.
தலைவரின் தவறான கணிப்பு!

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 – இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத்த் தலைவராக உயர்ந்தார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்குப் பெருகியது. ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.
ஆட்சியின் சரிவுக்கு அடித்தளங்கள்

இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜ.ஆருக்கு வேதனை அளப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன.கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.

நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்ள். புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நடவடிக்கைகள் புரட்சித் தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.

அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருசணாநிதி அறிவித்தார்.

மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது.
அந்த அக்டோபர் 10 – ஆம் நாள்!

இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் த்த்தமது சொத்துக்கணக்குகளைஞ்ச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப்பணியாய் இருக்கும்.

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”
கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?

எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் பலைவருக்குக் கட்டுபட்டவர்கள் தாம. இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.

இனி, அந்த அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.

புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.
நெஞ்சில் எழுந்த நினைவலைகள்

சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

முதன்மதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது;
இக்கட்டான சூழ்நிலையில் கலைஞரை முதல்வராக்கியது

கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அருமை நண்பர்கள் எங்கே?

வழ்க்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி. ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.

ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடுகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.
நானகாம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.
அலை கடல் எழுந்ததோ?

ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும் பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலக்த்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.

காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம்,கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.

”எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். ”புரட்சித் தலைவர் இங்கே இல்லை!’ என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.

”தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு!” என்று பெரும் முழக்கமிட்டது.

உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.

”இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன்.

செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.

புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் ”புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க!” என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.

புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.
அன்பு வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்!

அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னேறிச செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.

எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மகள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.
நாங்கள் உங்கள் பின் இருப்போம்!

அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.

அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.
கருத்தறியும் சுற்றுப்பயணம்

எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.

அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு மு.க்கமிட்ட மக்கள கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.

அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காக்க் கண்விழித்துக் காத்திருந்தது.
காஞ்சியில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம்

நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.

அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.

மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சம்மாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சித்தலைவர்.

உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள்.

காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கறார்கள் என்படை அறந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.

காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர் ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.

காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.

இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேளவியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயந்தான்.

மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்.
எம்.ஜி.ஆர் இல்லாமல் ஒரு கட்சியா?

இதற்கிடையில் 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் தி.மு.க. செயற்குழு கூடியது. தலைவர் கருணாநிதியும், பொதுச்செயலாளர் நாவலரும் எம்.ஜி. ஆர். விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. அக்டோபர் 14 ஆம் தேதியன்று கூடிய தி.மு.க. பொதுக்கழு எம்.ஜி.ஆரைத் தி.மு.க.விலிருந்து நிரந்தரமாய் நீக்கிவிடுவது என்னும் தலைமையின் முடிவை ஆதரித்தது.

எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்!

திராவிட இயக்கத்தின் தந்தையாக விளங்கிய பெரியார் தலையிட்டு இரு தரப்பார்க்கும் இடையில் சமரசம் செய்து வைக்க முயன்றார். ஆனால், அவர் முயற்சி வெற்றி பெறவில்லை.

எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து நிரந்தரமாகவே நீக்கி விட்டார்கள் என்னும் செய்தி வெளிவந்ததும், ஏற்கெனவே கொதிப்புற்றிருந்த தொண்டர்கள் மேலும் ஆவேசத்தோடு போராடத்தொடங்கினார்கள். எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட மதுரை மாநகர மக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர். தி.மு.கழக்க் கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. கழகச் சார்பு மன்றங்கள் கலைக்கப்பட்டன. தலைவர்கள் சிலரின் படங்கள் கொளுத்தப்பபட்டன. தி.மு.கழக்க் கொடிகள் தமிழக அரசின் செய்திப் படங்கள் திரையிடாமல் தடுக்கப்பட்டன.

மேற்குறித்த போராட்டம் அக்டோபர் 15- ஆம் தேதியன்று நெல்லை, திருச்சி, தஞ்சை, கோவை, சேலம் முதலிய நகரங்களுக்கும் பரவியது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், தொழிலாளர்களும் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்றனர். பஸ்கள் ஓடவில்லை, ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தன.

எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கியதைக் கேள்விப் பட்டு இளைஞர்கள் பலர் தீக்குளித்தனர்.!

அப்படித் தீக்குளித்து மாண்ட இளைஞர்களுள் ஒருவர், இஸ்மாயில்!

அவர் அக்டோபர் 16 ஆம் தேதியன்று காலையில் ஒரு டின் மண்ணெண்ணெயைத் தம் உடலில் ஊற்றினார். அடுத்து அவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை அங்கிருந்தோர் அனுமானிக்கும் முன்பே ஒரு தீக்குச்சியைக் கிழித்து தம் மீது வைத்தார்!

”எம்.ஜி.ஆர். வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க!” என்னும் முழக்கம் அவரிடமிருந்து எழுந்தது.

மற்றவர்கள் அவரை நெருங்கிச் சென்று தடுப்பதற்குள் தீ நாக்குகள் ஆளுயரத்திற்கு எழுந்தன. உட்கார்ந்த நிலையிலேயே இஸ்மாயில் தீக்கோளமானார்.

அதைக்கண்டு சுற்றி நின்ற மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

மேற்சொன்ன தீக்குளிப்புச் செய்தி மறுநாள் தமிழகம் முழுவதும் பரவியது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அப்பொழுதுதான் ஒரு முடிவுக்கு வந்தார்.

தமிழகம் முழுவதிலும் போலீஸாரின் அடக்கு முறைக்கு ஆளாகும் தம் தொண்டர்களையும், மன்ற மறவர்களையும் காப்பாற்ற வேண்டும். அவர்கள் அநாதைகளாகி விடக் கூடாது. அதற்காக புதுக்கட்சி ஒன்றைத் தொடங்கியே ஆகவேண்டும் என்பதுதான் அந்த முடிவு.

MGR என்னும் மாமனிதன்


சட்டசபைப் புரட்சி

திராவிட இயக்கத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கே. ஏ. மதியழகன். அவர் அப்பொழுது (1972) தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தார். “தி.மு.க.வில் கருணாநிதியின் கை ஓங்குவதையும் தி.மு.க ஆட்சியில் தவறுகள் பெருகிக் கொண்டிருப்பதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

சபாநாயகர் பதவி வகிக்கும் மதியழகனும் புரட்சித் தலைவரின் இயக்கத்தை ஆதரிக்கத் தொடங்கினால், தம் நிலைமை மிகவும் பலவீனமாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதி அஞ்சினார். ஆகவே அவர், தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் எம். பி. யை சபாநாயகர் மதியழகனிடம் அனுப்பி அவரைச் சரிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், எஸ். டி. எஸ். அவர்களையே சரிக்கட்டி புரட்சித்தலைவரோடு சேரும்படி செய்துவிட்டார், மதியழகன்.

இதை தனதுநூல் ஒன்றில் கருணாநிதி வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்.
ஊழல் ஒழிப்புப் பேரணி

இந்நிலையில், 1974-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியன்று புரட்சித்தலைவரும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களும் இணைந்து ‘ஊழல் ஒழிப்புப் பேரணி’ நடத்தினர்.

அந்த ஊர்வலத்தை சபாநாயகர் மதியழகன் அண்ணாசாலையில் ஓரிடத்திலிருந்து பார்வையிட்டார்.

அதை அறிந்து பதை பதைப்புற்றார், முதல்வர் கருணாநிதி, நவம்பர் 13 ஆம் தேதியன்று கூட இருக்கும் தமிழக சட்டமன்றத்தில், சபாநாயகர் மதியழகன் எப்படி நடந்து கொள்வாரோ என்று கவலைப் பட்டார்.

நவம்பர் 13 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடியது.
சபாநாயகர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்

ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சபாநாயகர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை 30-10-72 அன்று அளித்திருந்தது. ஆனால், அதைச் சட்டசபைச் செயலாளர் 7-11-72 அன்றுதான் தமக்குத் தெரிவித்தார் என்றும், அது முறைகேடான ஒரு செயல் என்றும், சபாநாயகர் கூறினார். பின்பு எதிர்க்கட்சியினர் அமைச்சரவைமீது நம்பிக்கை இல்லை என்று கூறி, சட்டசபையைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்கு நிற்கத் தயாரா என்று ஆளுங்கட்சி முதல்வருக்குச் சவால் விட்டனர். அச்சவாலை ஏற்கலாம் என்று சபாநாயகரே முதல்வருக்கு யோசனை கூறினார்; அடுத்து அவர் அதைப்பற்றி யோசிக்க அவகாசம் அளித்து, 22 நாட்களுக்குச் சபையை ஒத்திவைத்தார்.

ஆனால், அன்று (13-11-72) மாலையில் தி. மு. க. தன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, சபாநாயகரின் மேல் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்னும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஒரு கடிதம் மூலம் ஆளுநருக்குத் தெரிவித்தது.

இவ்வாறு சபாநாயகர்மீது நம்பிக்கை இல்லையென்று சபைக்கு வெளியில் கூட்டம் நடத்தி ஆளுநருக்கு மனுக் கொடுத்தது, இந்திய வரலாற்றிலே முதல் முறையாகும்.
மரபுக்கு மாறாகக் கூட்டப்பட்ட சட்டசபை

சட்டமன்றத்தை ஒத்தி வைத்தால் அதனை மீண்டும் கூட்டுகின்ற அதிகாரம் சபாநாயகரிடமே இருக்கும்.

அம்மரபிற்கு மாறாக, முதல்வர் கருணாநிதியின் ஆலோசனைப்படி 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று தமிழகச சட்டமன்றத்தை ஆளுநர் கூட்டினார்.

சபாநாயகர் மதியழகன் சபையை டிசம்பர் 5 – ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். முதல்வர் கருணாநிதியோ கவர்னரிடம் எடுத்துக்கூறி மெத்த சிரம்ப்பட்டு அதை டிசம்பர் 2 – ஆம் தேதிக்கு மாற்றினார்.!

டிசம்பர் 2 ஆம் தேதிக்கும் 5 ஆம் தேதிக்கும் இடையில் இருந்தது இரண்டே தினங்கள்தாம். அந்த இரண்டு நாள்கள் பொறத்திருப்பதால் எந்தப் பிரளயமும் நடந்து விடப்போவதில்லை! இருந்தாலும் முதல்வர் கருணாநிதி ஏன் இப்படி நடந்து கொண்டார்? சபாநாயகரை மட்டம் தட்டவா? அது இன்று வரை யாருக்கும் புரியாத விஷயம்!
முடமான சட்டசபை

சபாநாயகர் மதியழகன் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிடவில்லை,

”சட்டசபையைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் சபாநாயகருக்கே பூரண உரிமையுண்டு. தம் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கவர்னர் கூட்டத் தொடரையே இரத்து செய்த்து (Prorogue) செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்மனு’ தாக்கல் செய்தார், சபாநாயகர் மதியழகன்.

ஆனால், உயர்நீதிமன்றம் அந்தப் பிரச்சனையில் ஒரு முடிவு சொல்வதற்கு முன்பாகவே, 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்ற ஆளுநரின் உத்தரவுப்படி கூடியது. சபாநாயகர் மதியழகன் அந்தக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

சபை கூடியதும் தி.மு.க. அரசு மீது நம்பிக்கயில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த சபாநாயகர், தீர்மானத்தின் மீது பேசும்படி புரட்சித்தலைவரை அழைத்தார்.

புரட்சித் தலைவரும் எழுந்து நின்று பேசத் தொடங்கியதும் அவரைப் பேச விடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் பலர் கூட்டலிட்டுத் தடுத்தனர்.

அப்போது அவை முன்னாள் நாவலர் எழுந்து நின்று, ”சபாநாயகர் மீது கொடுகப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானமந்தான் முதலில் விவாத்த்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதற்கு சபாநாயகர் மதியழகன், ”அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கெனவே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது” என்று கூறிப் புரட்சித் தலைவரைத் தொடர்ந்து பேச அனுமதித்தார்.
ஏக காலத்தில் இரு சபாநாயகர்கள்!

அப்பொழுது கல்வி அமைச்சரும் அவை முன்னவருமான நாவலர் எழுந்து. ”துணைச் சபாநாயகர் பெ. சீனிவாசன் தலைமை வகித்து தொடர்ந்து சபையை நடத்த வேண்டும்” என்று ஒரு திடீர்த் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுங்கட்சிக் கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆதரிப்பதாகக் குரல் எழுப்பினார்கள். உடனே துணை சபாநாயகர் பெ.சீனிவாசன் சபாநாயகர் இருக்கையை நோக்கிப்பாய்ந்து சென்றார். சபாநாயகர் மதியழகனோ தம் இருக்கையை விட்டுச் சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தார்.

உடனே தி.மு.க. உறுப்பினர் ஒருவர் ஒரு நாற்காலியைத் தூக்கி வந்து, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வைத்தார். துணைச் சபாநாயகர் பெ. சீனிவாசன் அதில் அமர்ந்து கொண்டு அவர் ஒரு பக்க சபையை நடத்தத் தொடங்கினார்.

இவ்வாறு, ஆளுங்கட்சி சபாநாயகராகத் துணை சபாநாயகரான பெ.சீனிவாசன் இருந்துகொண்டும், எதிர்க்கட்சி சபாநாயகராக மதியழகன் இருந்து கொண்டும் போட்டி சட்டசபை நடத்தினர். அதனால் கூச்சலும் குழப்பமும் எழுந்தன.

முடிவில், பிற்பகல் 2 மணிக்குச் சபாநாயகர் மதியழகன் சபையை டிசம்பர் 4 – ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு சபையை விட்டு வெளியேறினார். அவரோடு அண்ணா தி.மு.க. காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.

ஆனால், போட்டி சட்டமன்ற சபாநாயகராகச் செயல்பட்ட பெ.சீனிவாசன் தம் சட்டசபையை மேலும் அரைமணிநேரம் தொடர்ந்து நடத்தினார்.

சபையை விட்டு வெளியேறிய சபாநாயகர் மதியழகன், அவர் தம்பி கே.ஏ.கே மற்றும் புரட்சித்தலைவர் ஆகிய மூவரும் ஒரு காரில் புறப்பட்டனர். அப்போது வெளியே கூடியிருந்த உறுப்பினர்கள் அவர்களை எதிர்த்துக் கோஷமிட்டதோடு செருப்பகளையும் எடுத்து வீசினர்.

”இந்த சட்டமன்றம் முடமாகிவிட்டது. தி.மு.க. ஆட்சி நீடிக்கும் வரை இந்தச் சட்டசபைக்குள் நான் நுழையமாட்டேன்” என்று அன்றுதான் அறிவித்தார், புரட்சித் தலைவர்.

அதற்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நீடித்த மூன்றாண்டு காலமும் புரட்சித்தலைவர் தமிழ சட்டமன்றக் கூட்டங்களுக்குச் செல்லாமல் புறக்கணித்தார்.
விசாரணைக் கமிஷன் கோரிக்கை!

தமிழக அமைச்சரவை மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றம் சாட்டி புரட்சித் தலைவரும், எம். கல்யாணசுந்தரமும் நவம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதியிடம் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியலை, ஜனாதிபதி அவர்கள் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் இந்திரா காந்தி அதைப் படித்துவிட்டு, அதற்கு முதல்வர் கருணாநிதியின் பதிலைக் கோரி, அதன் நகலை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதைப்பற்றி முதல்வர் கருணாநிதியிடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, ”பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார். ஆனால், மத்திய அரசுக்கு அந்தப் பதிலையே கூற முடியுமா? அதனால், ஊழல் பட்டியலில் உள்ள ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் மிக விளக்கமான பதில் அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார், கருணாநிதி. 286 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை 1972- ஆம் ஆண்டு டிசம்பர் 14- ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்திலும் சமர்ப்பித்தார்.

டிசம்பர் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருணாநிதி அமைச்சரவையின் மீது சாட்டப்பட்ட ஊழல் புகார்களைப் பிட்டுப் பிட்டு வைத்தனர். முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு அனுப்பிய பதில் அறிக்கையின் சாராம்சத்தை சபையில் சமர்ப்பித்ததோடு, தம் அமைச்சரவை மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் ஒன்றையும் தாமே முன்மொழிந்து நிறைவேற்றச் செய்தார்.
அவர் அமைத்த விசாரணைக் கமிஷன்

தமிழக அமைச்சரவை மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை கமிஷனை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், சட்டமன்றத்தில் முதல்வர் வாதிட்டார்.

ஆனால் அனைத்து எதிர்கட்சிகளும் விசாரணைக் கமிஷன் அமைத்தே தீரவேண்டுமென்று வலியுறுத்தின.

ஆனால், அதை அலட்சியம் செய்வது போலத் தி.மு.க. அரசு ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனை நியமிக்க ஒரு மசோதா கொண்டு வந்தது.

ஊழல் செய்தவர்களைப் பாதுகாக்கவும், ஊழல் புகார் கூறவோரை அச்சுறுத்தும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை கொண்டு வந்த தி.மு.க. அரசைப் புரட்சித் தலைவரும், இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் மூதறிஞர் ராஜாஜியும், முன்னாள் முதல்வர் பக்தவத்சலமும் கடுமையாக்க கண்டித்தனர். பத்திரிகைகள் அனைத்தும் இந்த மசோதாவை சூழ்ச்சி வலை’ என்று வருணித்தன. ஆனால், தி.மு.க. அரசு எதைப் பற்றயும் கவலைப்படாமல் முறையற்ற முறையில் மசோதாவை நிறைவேற்றியது.

இந்நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில், 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாங்கம் என்னும் தி.மு.க. எம்.பி. மரணமடைந்தார். அதனால் அங்கே இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.

அப்பொழுது தமிழக அரசியல் களத்தில் அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகச் சேர்ந்திருந்தன. அதற்கு முக்கிய காரணம், 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாகியிருந்ததுதான். 1971 – இல் தி.மு.க.வோடு அணி சேர்ந்திருந்த கம்யூனிஸ்டு இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதை விட்டு விலகின; புரட்சித் தலைவரின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை உற்சாகமாக ஆதரித்தன.
பொய்ப் பிரச்சாரம்

அக் கூட்டணியை – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை – ‘குட்டி காங்கிரஸ்’ என்றும் , இந்திரா காங்கிரஸின் எடுபிடி என்று தி.மு.க. சாடியது.

பெருந்தலைவர் காமராஜரும், தந்தைப் பெரியாரும் புரட்சித்தலைவரின் அரசியல் திறமையைச் சரிவர எடையிடாமல் அவரை வெறும் நடிகர் என்னும் கண்ணோட்டத்திலேயே கணித்தனர்.

ஆனால், மூதறிஞர் இராஜாஜியும், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சினரும் புரட்சித் தலைவரின் சக்தியை மிகவும் சரியாகக் கணித்து அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை நல்கினர்.

தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்ட்பிளாக், முஸ்லிம் லீக் தமிழரசுக் கழகம் ஆகிய கட்சிகள் ஓரணியில் இருந்தன.

பொதுவாக இந்திரா காங்கிரஸ் புரட்சித தலைவரை ஆதரித்தாலும், அதில் ஒரு பகுதியினர் புரட்சித்தலைவரின் அரசியல் சக்தியைப் புரிந்து கொள்ளாமல் இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் திண்டுக்கல் இடைத் தேர்தல் நடைப்பெற்றது. அதில் இந்திரா காங்கிரஸ் போட்டியிட விரும்பியது. மேலும் அக் கட்சியின் மேலிடம் அ.தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் தம் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று விரும்பியது.

ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பொழுது அரசியலில் ஏழு மாதக் குழந்தையாகவே இருந்தாலும், தமிழக அரசியலில் தன் முத்திரையைப் பதிக்க விரும்பும் ஓர் இயக்கமாக இருந்தது.

ஆனால், இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைமை திண்டுக்கல் தொகுதியைத் தங்களுக்கே விட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்தியது.

திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதை ஆதரிப்பதும் உறுதியாகி விட்டது.

ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது. அதைச் சுதந்திரக்கட்சி ஆதரித்தது.

இந்த நிலையில் புரட்சித்தலைவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

”அண்ணா தி.மு.க. என்பது திராவிட இயக்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக இந்திரா காங்கிரஸ் தூண்டிவிட்டுத் தொடங்கி வைத்த ஓர் அமைப்புத்தான். தி.மு.க. வைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி முடித்ததும் எம்.ஜி.ஆர். தம் கட்சியை இந்திரா காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டு சினிமாவில் நடிக்கப் போய்விடுவார்” என்று முதல்வர் கருணாநிதி அடிக்கடி அப்போது கூறிக்கொண்டிருந்தார். அதனால், மக்களுள் ஒரு சாரார் புரட்சித்தலைவரின் இயக்கம் நீடித்து நடக்குமா என்று சந்தேகப்பட்டனர்.

மேற்குறித்த சந்தேகங்களையெல்லாம் போக்கும் வகையில் புரட்சித் தலைவர் ”திண்டுக்கல் தேர்தலில் தம் கட்சி போட்டியிடும்; இந்திரா காங்கிரசுக்கு அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாய் அறிவித்தார். கே. மாயத்தேவர் என்பவரை தம் கட்சி வேட்பாளராகவும் தேர்வு செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.வை ஆதரிப்பதாக அறிவித்தது.

இந்திரா காங்கிரஸ், கரு. சீமைச்சாமி என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.

தி.மு.க. சார்பில் பொன். முத்துராமலிங்கம் போட்டியிட்டார். ஸ்தாபன காங்கிரஸ் என்.எஸ்.வி. சித்தனைப் போட்டிடச் செய்தது. இந்த நான்கு வேட்பாளர்களுமே முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்திரா காங்கிரசோ மத்தியில் ஆளுங்கட்சி, அவ்விரு கட்சிகளும் தங்கள் பலம் முழுவதையும் பிரயோகித்துக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தன். தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் திண்டுக்கல்லிலேயே முகாமிட்டு கருணாநிதியும் தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்தார்.
அ.தி.மு.க. விற்கு உள்ள ஒரே பலம் எம்.ஜி.ஆர்.!

இந்திரா காங்கிரஸ் சார்பில் பிரதமர் இந்திராகாந்தியைத் தவிர எஞ்சியுள்ள மத்திய அமைச்சர்களுள் பெரும்பாலோர் திண்டுக்கல் தொகுதிக்கு வந்து பிரச்சார்ம செய்தனர். சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், ஐ.கே.குஜ்ரால், ஷா நவாஸ்கான், கே. பிரம்மானந்த ரெட்டி, கே.வி. ரகுநாத ரெட்டி, கே.ஆர்.கணேஷ், பகவத் ஜா ஆஸாத், அப்துல் கபூர், உமாசங்கர் தீட்சித் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். அனைத்து இந்திய காங்கிரஸ் தலைவர் சங்கர் தாயாள் சர்மா, பொதுச்செயலாளர் மரகதம் சந்திரசேகர் முதலியோரும் திண்டுக்கல் பிரசாரத்திற்குச் சென்றனர். திண்டுக்கல் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் இந்திரா காங்கிரஸ் மிகத் தீவிரமாகய் இருந்தது என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும்.

ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காகப் பெருந்தலைவர் காமராஜர் மிகவும் தீவிரமாய்ப் பிரச்சாரம் செய்தார். அவரோடு ஸ்தாபன காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர்களான நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய். அசோக் மேத்தா முதலியோரும் திண்டுக்கல் தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தனர்.

மேற்சொன்ன அரசியல் ஜாம்பவான்களின் கிடுக்கித் தாக்குதலை எதிர்த்து மாயத்தேரை வெற்றி பெறச் செய்யும் இமாலயப் பணியை ஆறுமாதக் குழந்தையான அண்ணா தி.மு.க. மேற்கொண்டது. அந்தக் கட்சியிலோ புரட்சித்தலைவர்தாம் மக்களை ஈர்க்கும் சக்தி கொண்ட ஒரே தலைவராய் இருந்தார். பொருளாதார பலமோ மிக மிகக் குறைவு. என்றாலும், புரட்சித்தலைவர் அந்த இமாலயப் பணியைத் தம் தோளில் சுமந்துகொண்டு இரவும் பகலும் பாடுபட்டார். அவர், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குப் பிரச்சார வேனில், வேட்பாளர் மாயத்தேவரையும் ஏற்றிக்கொண்டு புறப்படுவார்; மறுநாள் காலை 6 மணி வரை விடிய விடியத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.
சலிக்காமல் உழைத்தார்!

புரட்சித்தலைவரைக் காண்பதற்காக ஆண்களும் பெண்களும் ஒவ்வோர் ஊரிலும் சாலை ஓரத்திலேயே காத்துக் கொண்டு நிற்பார்கள். அவர் இரவில் வர நேரிட்டாலுல் அவரைக் காண்பதற்காகப் பகல் முழுக்கச் சாலை ஓரங்களிலேயே மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்! அக்கம் பக்கத்துக் கிராமத்து மக்கள் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து, நள்ளிரவு வரை காத்திருந்து, புரட்சித்தலைவரின் பேச்சைக் கேட்டார்கள்.

புரட்சித் தலைவரின் சலியாத உழைப்புக்கும் அயராத சுற்றுப்பயணத்த திட்டத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் வேட்பாளர் மாயத்தேவரே திணறினார்.

பல நள்ளிரவுக் கூட்டங்களில் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே! அவர் அருகில் நிற்கும் வேட்பாளர் மாயத்தேவர் பசி மயக்கத்தாலும், சோர்வாலும் புரட்சித் தலைவரின் தோளிலேயே சாய்ந்து விடுவார்! அவரைத் தாயன்போடு தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்வார் புரட்சித் தலைவர்!

திண்டுக்கல் தொகுதிக்குப் பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து தேர்தல் பணியாற்றினர்.
முதல் களபலி

அண்ணா தி.மு.க. கூட்டங்களில் கல்லெறிந்தனர்; அடி தடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்; அ.தி.மு.க. தொண்டர்களைக் கண்ட இடங்களில் வெட்டினர். கை கால்களை உடைத்தனர்; பிரச்சார வேன்களைக் கவிழ்த்தனர். வாக்காளர்களை அச்சுறுத்தினர்; இந்த வெறியாட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதியில் முதன்முதலில் களபலியானவர் வத்தலகுண்டு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரான ஆறுமுகம் ஆவார். இரத்த வெள்ளத்தில் பிணமாகி மிதந்த அவரைக் கண்ட பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ”பதிலுக்குப் பதில்!… பழிக்குப் பழி!” என்று கிளம்பிவிட்டனர். அந்தச் செய்தியை அறிந்ததும், எம்.ஜி.ஆர் விரைந்து சென்று, கம்பும் கழிகளும் அரிவாளும் தாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் திரண்டு விட்ட அ.தி.மு.க. தொண்டர்களை வழிமறித்ததார்.

அறிஞர் அண்ணாவின் தாரகமந்திரமான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை நெஞ்சில் சுமந்து அண்ணாவின் மேல் ஆணையிட்டு, அனைவரையும் அமைதிப் படுத்திக் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு அன்று எம்.ஜி.ஆர். செய்திருக்காவிட்டால் திண்டுக்கல் நகரம் போர்க்களமாகியிருக்கும்.!
இமாலய வெற்றி!

1973 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதியன்று தேர்தல் நடந்தது. மே 22 ஆம் தேதியன்று தேர்தல் முடிவு வெளியாயிற்று.

பொறுமையின் சின்னமாய் அண்ணாவின் இதயக்கனியாய்த் திகழ்ந்த புரட்சித் தலைவரின் பொறுமைக்கே வெற்றிக் கிட்டியது.

ஆம்; அ.தி.மு.க. வேட்பாளர் கே. மாய்த்தேவரே வெற்றி பெற்றார். பெற்ற வெற்றி சாதாரணமானதா? மொத்தம் பதிவான வாக்குகள் 5 இலட்சம். அவற்றுள் மாயத்தேவர் பெற்ற வாக்குகள் 2,60,930 ஆகும்! அதாவது பாதிக்கு மேற்பட்ட வாக்குகள்!

இரண்டாவது இடம் ஸ்தாபன காங்கிரசுக்கு (1,19,000 வாக்குகள்) கிட்டியது. மூன்றாவது இடம்தான் மாநில ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு (93,000வாக்குகள்) கிட்டியது. மத்தியில் ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுக்கோ பொறுப்புத் தொகையை (டிபாசிட்) இழந்த அவல நிலையும், நான்காவது இடமும் (11,000) வாக்குகள் கிடடின.

தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ. பாலசுப்பிரமணியமும் தம் பொறுப்புத் தொகையை இழந்தார்.

புரட்சித்தலைவரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 1,42,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

அந்த வெற்றி அ.தி.மு.க.வின் முதல் வெற்றி மட்டுமல்ல; தமிழக்த்தின் தலைவிதியையே மாற்றவிருக்கும் வெற்றிகள் பலவற்றுக்கு முன்னோடி என்பதை அதற்குப் பின்னரும் சில அரசியல் தலைவர்கள் உணரவில்லை.!

திண்டுக்கல் வெற்றிச் செய்தி வெளியானபோது தொண்டர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! பட்டாசு வெடித்தார்கள். ஆனால் அப்பொழுது தியாகராய நகரில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். ”மிக்க மகிழ்ச்சி” என்று மட்டும் கூறிவிட்டு அதற்கு மேல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

தம் தலைவருக்கு வெற்றி மாலை சூட அ.தி.மு.க. முன்னணி வீர்ர்கள் பலர் வந்தனர். அவர்களிடம், அங்கேயிருந்த ஒரு சிறிய அண்ணா சிலைக்கு மாலைகளை அணிவித்துப் போகும்படி எம்.ஜி.ஆர் கூறினார். வெற்றியைக் கண்டு கூத்தாடாமலும், தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்கம் மன்ப்பக்குவத்தைப் புரட்சித்தலைவர் எப்பொழுதோ பெற்றுவிட்டார்!

திண்டுக்கல் தேர்தலின்போது நடந்த மற்றும் ஒரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

திண்டுக்கல் தேர்தல் வாக்குப் பதிவு நாளன்று ஓச்சம்மாள் என்னும் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர், வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துவட்டு, ”எம்.ஜி. ஆருக்கே வெற்றி!” என்று ஆவேசத்தோடு முழங்கினார். மறுவினாடியே மயக்கமுற்று விழுந்தார்; மாரடைப்பால் மரணமடைந்தார்!

புரட்சித் தலைவர்மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலம் கொண்டிருந்த அன்பும் , பாசமும், நம்பிக்கையும் எந்த அளவுக்கு இருந்தது என்பதை உலகம் முழுவதற்கும் இச்சம்பவம் பறை சாற்றியது.

மாற்றுக் கட்சியினர் கூறியதுபோல புரட்சித் தலைவர் இந்திரா காங்கிரசுக்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதையும் அந்த வெற்றி பறைசாற்றியது!

http://www.puratchithalaivar.org/tamil/achievement/revolution/