சோனியாவிற்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறதா?
இந்தியாவில் துரதிருஷ்டவசமாக யார்-யாரோ, எதைப் பற்றியல்லாமோ பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஏற்கெனெவே, விபச்சாரிகள் கற்பைப் பற்றியும், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அளக்கிறார்கள், குடித்து-கூத்தடிக்கும் பெண்கள் கல்லூரிகளில், பள்ளிகளில் பல நிகழ்ச்சிகளுக்கு வரவழைக்கப் பட்டு மாணவ-மாணவியர்களுக்கு அறிவுரை கூற வைக்கிறார்கள், சமீபத்தில் கூட கேவலமாக. குழந்தைகளுக்கான ஒரு “தரும” நிகழ்ச்சிற்கு, ஒரு கேடுகெட்ட நிர்வாண நடிகையைக் கூப்பிட்டு விழா நடத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், தன்னிலையை, கடந்தகால இல்வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, அரசியல், வியாபாரம்…..முதலிய எல்லாவற்றையும் மறந்து, சோனியா ஊழலைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.
பீஹாரில் அடிவாங்கியதிலிருந்து ஊழல் என்றதும் மிகவும் பயந்துதான் போயிருக்கிறாறர் சோனியா: “பீஹாரில் ஊழல் மலிந்து கிடக்கிறது, நாங்கள் கொடுத்த பணம் எல்லாம் எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை”, என்று சோனியாவும், ஏன், அந்த மௌனி மன்மோஹனே அளவிற்கு அதிகமாகவே பேசியதைக் கண்டு மக்கள் கொதித்துவிட்டனர். ஓட்டு போட்டு விரட்டிவிட்டனர். ஆனால், காங்கிரஸ்காரர்களோ விடுவதாக இல்லை. 2ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஸ ஊழல் என்று தொடர ஆரம்பித்தவுடம், திசைதிருப்ப பல தேவையற்ற விஷயங்களைப் பேச ஆரம்பித்து விட்டது. உதாரணத்திற்கு திக் விக்ஜய சிங்.
ஊழலைப் பொறுத்தவரைக்கும், எங்களைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்: சோனியா இப்படி சொன்னதும், முதலில் விஷயம் தெரிந்தவர்களுக்கு சிரிப்பாகி விட்டது. என்ன, ஒருவேளை “மாமியார் வேலை செய்யவேண்டும்”[1], கணவனைப் போல அள்ளி அயல்நாட்டு வங்கிகளில் போடவேண்டும்[2] என்கிறாரா அல்லது இவரே புதுவழியை ஆரம்பித்து வைக்கப் போகிறாரா[3] என்று கூட யோசிக்க ஆரம்பித்தனர். “ஊழலைப் பொறுத்தவரைக்கும், எங்களைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும். நாங்கள் எப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று பார்த்து அவர்கள் தெரிந்து கொள்ள்வேண்டும்”, என்று முன்னமே கூறியுள்ளார்.
ஊழலைப் பொறுத்தவரைக்கும், எங்களைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்: ஊழலைப் பற்றி குறிப்பிடும்போது, என்.டி.ஏ ஆட்சியில் நடந்த ஊழல்களை ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். கர்நாடகத்தைக் குறிப்பிட்டு பிறகு லெஹல்கா, பங்காரு லக்ஷ்மண் முதலிய நிகழ்சிகளை எடுத்துக் காட்டினார்[4]. ஊழல் குற்றச்சாட்டு என்றவுடனே, எதுவும் மெய்ப்பிக்கப்படுவதற்கு நடவடிக்கை முன்னமே எடுக்கப்பட்டுவிட்டது (சசிதரூர், சவான், ராஜா விலக்கப்பட்டுவிட்டனர்). “கர்நாடகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறதே, அங்கு பிஜேபி இந்த மாதிரியான கோரிக்கை வைக்கமுடியுமா? என்.டி.ஏ ஆட்சியில் ரசணுவ ஊழலை எடித்துக் காட்டியபோது, ஒரு அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டியிருந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்”
2ஜியைப் பொறுத்தவரையிலும், “அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது: 2ஜியைப் பொறுத்தவரையிலும், “அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே அரசு எதையோ மறைக்கிறது, இல்லை விசாரணைக்குப் பயப்படுகிறது என்று சொல்வதில் அர்த்தமேயில்லை. இ.பி.ஐ, பி.ஏ.சி, ஒரு நீதிபதி கமிஷன் என அதை விசாரிக்க உள்ளன” (அதாவது ஜே.பி.சி தேவையில்லை என்கிறார்[5])
“2004ல் பிஜேபி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து இத்தகைய உருப்படியற்ற வேலையை செய்து வருகிறது”. ஆனால், சூஸ்மா சுவராஜ் அனைவற்றையும் மறுத்து பதிலளித்தார்.
வேதபிரகாஷ்
http://corruptioninindia.wordpress.com/tag/
No comments:
Post a Comment