Thursday, December 16, 2010

கொள்ளையடிக்கும் கவுன்சிலர்களின் நாற்காலிச் சண்டை, ரகளை, அடிதடி!

கொள்ளையடிக்கும் கவுன்சிலர்களின் நாற்காலிச் சண்டை, ரகளை, அடிதடி!

செம்மொழியில் எழுதப் பட்டுள்ள சங்க இலக்கியத்தின் படி, “கழகம்” என்பது, திருடர்கள், கொள்ளைக்காரர்கள் கூடும் இடம்.

செம்மொழி மாநாடே கோடிகளில் புரண்டு, ஊழலில் மிதக்கும் இந்நேரத்தில் அருமை கவுன்சிலர்கள் தமது வீரத்தை காட்டி, போர்களத்தில் இறங்கிவிட்டனர்.

அன்று சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வளவு ஒற்றுமையாக சண்டை போட்டுக் கொண்டனரோ, அதே மாதிரி, இந்த கழகங்களின் வீரர்கள் ஆயுதங்களுடன் போராடியது மெய்சிலிர்க்க வைத்தது.

இனி கருணாநிதி, இதைப்பற்றியும் கவிதைகள் எழுதலாம், கதைகள் எழுதலாம்,

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

பல்கலை துனைவேந்தர்கள் முதலியோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம், பாராட்டு விழாக்கள் நடத்தலாம், பட்டங்கள் கொடுக்கலாம்……….

திருச்சி ஊராட்சி கவுன்சில் கூட்டத்தில் ரகளை : தே.மு.தி.க., புகாரை வாங்க போலீசார் மறுப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=10767

திருச்சி : திருச்சி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், தி.மு.க., – தே.மு.தி.க., – ம.தி.மு.க., கவுன்சிலர்கள் மோதிக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் சம்பவம் குறித்து, தே.மு.தி.க., கவுன்சிலர் கொடுத்த புகாரை, போலீசார் ஏற்க மறுத்து விட்டனர்.

வெட்கமேயில்லாத கவுன்சிலர்கள்: திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் சங்கீதா(தி.மு.க.,) தலைமை வகித்தார். துணைத் தலைவர் சகுந்தலா சின்னையன் (காங்கிரஸ்) மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கடந்த முறை நடந்த கூட்டத்தின் போது, தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜ், மின்வெட்டை கண்டிக்கும் வகையில் கையில் லாந்தர் விளக்கு, மின்விசிறி, குழாய் மாலை அணிந்து வந்தார். அப்போது, பேசிய ம.தி.மு.க., கவுன்சிலர் சேரன் ஆவேசமடைந்து, லாந்தர் விளக்கை தூக்கி போட்டு உடைத்தார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க., கவுன்சிலர் சிங்காரம், தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜை தாக்க முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த படத்தை போஸ்டர் அடித்த, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், திருச்சி முழுதும் ஒட்டினர். நேற்று நடந்த கூட்டத்தில், அந்த போஸ்டரை காட்டி சிங்காரம் பேசுகையில், “”சங்கீதாவின் சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த போஸ்டரில், கடந்த கூட்டத்தில், கவுன்சிலர்கள் ம.தி.மு.க., சேரன், தே.மு.தி.க., கனகராஜ் ஆகியோரை நான் தாக்கியது போல் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்றார்.

கவுன்சிலர்களின்.நாற்காலி.சண்டை

கவுன்சிலர்களின்.நாற்காலி.சண்டை

கழகங்களின் உண்மையான உருவம்: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நெடுமாறன், “”கடந்த கூட்டத்துக்கு நான் வரவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்த நிலையிலும், எங்கள் சம்மதத்துடன் தான் தீர்மானம் நிறைவேறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது; இதை கண்டிக்கிறேன்,” என்றார். “”போஸ்டர் ஒட்டியதற்கு முதலில் எதிர்க்கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு பிறகு மற்ற பொருள் பற்றி பேசலாம்,” என்று, தலைவர் கூறினார். இதைத் தொடர்ந்து தி.மு.க., – அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிங்காரம், தனக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த சேரன், கனகராஜ் ஆகிய இருவரையும் தாக்கினார். அப்போது அவர்களது மேஜை, நாற்காலிகள் கீழே விழுந்தன. அடி பலமாக விழுந்ததால், அலறிய சேரன், கூட்டத்தை விட்டு வெளியேறினார். கனகராஜின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. பின், தான் கொண்டு வந்த, “ஹெல்மெட்’டை தலையில் மாட்டிக் கொண்டார். சபியுல்லா என்ற கவுன்சிலரும் சேர்ந்து கொண்டு தாக்கத் துவங்கினார்.

திராவிடத்தின்-அருமை-பெருமை

திராவிடத்தின்-அருமை-பெருமை

கலெக்டரிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் புகாரை பெறமுடியும்: கவுன்சிலரிடையே மோதல் முற்றியதில் மேஜை, நாற்காலிகள் பறந்தன. மற்ற கவுன்சிலர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். மோதல் முற்றியதால், தலைவர் சங்கீதா, வெளியே பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை உள்ளே அழைத்தார். போலீஸ் உதவி கமிஷனர்கள் ராஜசேகரன், பழனிசாமி மற்றும் கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில், போலீசார் உள்ளே சென்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நெடுமாறன், ராஜ்மோகன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து தாக்கப்பட்ட தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜ் திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தெரிவிக்கச் சென்றார். ஆனால், போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். “கலெக்டரிடம் அனுமதி வாங்கி வந்தால் தான் புகாரை பெறமுடியும்’ எனக் கூறி, அவர்களை திருப்பியனுப்பினர்.

கலெக்டரின் மழுப்பல்: கலெக்டர் சவுண்டையாவை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சந்தித்த பிறகு ம.தி.மு.க., கவுன்சிலர் சேரன் கூறியதாவது: கவுன்சில் கூட்டத்தில் நடந்த மோதல் சம்பவம் குறித்து கலெக்டரிடம் முறையிட்டோம். “அவர்கள் மீது தவறு இருப்பது நன்றாக தெரிகிறது. இதில், நான் எதுவும் செய்ய முடியாது. தலைவர் தான் முடிவெடுக்க முடியும். இதுபற்றி தலைவரிடம் பேசுகிறேன்’ என்று கூறினார். தொடர்ந்து கட்சித் தலைமையைக் கேட்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்க உள்ளோம். இவ்வாறு சேரன் கூறினார்.

http://corruptioninindia.wordpress.com/

No comments:

Post a Comment