சோனியாவின் மருமகன் குத்ரோட்சியென்றால் இராஜீவ் காந்திக்கு சோனியா...........?
இந்தியாவின் வல்லரசுக்கனவு ஆற்றில் மிதந்த குந்தியின் மகன் தானா?இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சியை பிடிக்க மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டதாக, மத்திய அரசு கைவிரித்துள்ளது. அதனால், அவருக்கு எதிரான போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை வாபஸ் பெறுவதாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அரசு தெரிவித்தது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்க, 1986ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், 64 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்துஜா சகோதரர்கள், இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி உட்பட எட்டு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில், மூன்று பேர் மரணம் அடைந்து விட்டனர். இந்த வழக்கை, 1990ம் ஆண்டுக்குப் பின் சி.பி.ஐ., விசாரித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குட்ரோச்சி, பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருந்தார். ஆனால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியதும் தன் மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பி விட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அர்ஜென்டினாவில் சிக்கினார். அவரை நாடு கடத்திக் கொண்டுவர சி.பி.ஐ., எவ்வளவோ முயற்சித் தது; இருந்தும் பலனில்லை. இதற்கிடையில், 2003ம் ஆண்டில், குட்ரோச்சி மற்றும் அவரின் மனைவி பெயரில், லண்டன் வங்கிகளில் இரண்டு கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கணக்குகளில் ஏராளமான பணம் இருப்பதும் தெரிந்தது.உடன் இந்தக் கணக்குகளை முடக்கி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், இந்த கணக்குகளின் முடக்கத்தை ரத்து செய்யும்படி, 2006ம் ஆண்டில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனால், கணக்கில் இருந்த பணத்தை குட்ரோச்சி உடனே எடுத்து விட்டார்.
அதேநேரத்தில், 2005ல், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தீர்ப்பளித்த டில்லி ஐகோர்ட், "இந்துஜா சகோதரர்கள் இரண்டு பேர், ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த்' ஆகிய நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என, தீர்ப்பளித்தது.இந்த வழக்கில் ஊழல் நடந்ததற்கு சிறு ஆதாரங்கள் கூட இல்லை என, தெரிவித்தது. இதனால், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என, அட்டர்னி ஜெனரல் ஆலோசனை வழங்கினார். அதனால், சி.பி.ஐ., அப்பீல் செய்யவில்லை.இதையடுத்து, வக்கீல் அஜய் அகர்வால் என்பவர், 2005 மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், டில்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு சட்ட விரோதம் எனக் கூறியிருந்தார். இதன்பின், குட்ரோச்சியின் லண்டன் வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய மத்திய அரசும், சி.பி.ஐ.,யும் பரிந்துரை செய்ததை எதிர்த்து 2006ல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஊழல் இல்லை: இந்நிலையில், அஜய் அகர்வால் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கூறியதாவது: போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குட்ரோச்சியை பிடித்துக் கொண்டுவர, மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து விட்டன. அதனால், குட்ரோச்சிக்கு எதிரான வழக்கை முடித்துவிட சி.பி.ஐ., தீர்மானித்துள்ளது. போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பையும், வழக்கின் வேறு பல அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.சர்வதேச போலீஸ் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தும், குட்ரோச்சியை பிடிக்க சி.பி.ஐ., தீவிரமாக முயன்றது. ஆனால், முடியவில்லை.
அகர்வால் தாக்கல் செய்த மனுவால் எந்த பயனும் ஏற்படவில்லை.போபர்ஸ் பீரங்கி பேரம் 1986ல் நிகழ்ந்தது. இதற்கான கடைசி பணம் 1990ம் ஆண்டில் வழக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கு செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என, சுப்ரீம் கோர்ட்டே முன்னர் கேள்வி எழுப்பியுள்ளது. குட்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவது என, சி.பி.ஐ., எடுத்த முடிவுக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு கோபால் சுப்பிரமணியம் கூறினார். ஆனால், மத்திய அரசின் இந்த நிலைக்கு வக்கீல் அஜய் அகர்வால் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்த நாட்டின், "மருமகனை'ப் போல குட்ரோச்சியை மத்திய அரசு நடத்துகிறது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், குட்ரோச்சி மட்டுமே குற்றவாளி.ஆனால், சி.பி.ஐ.,யும், மத்திய அரசும் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளன. குட்ரோச்சியை காப்பாற்ற அரசு முற்படுகிறது. அவரை பிடித்துக் கொண்டு வருவதில் சி.பி.ஐ., அக்கறை காட்டவில்லை. என்னுடைய மனுவை கோர்ட் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அஜய் கூறினார்.ஆனால், "மருமகன்' என்ற விமர்சனத்தை அரசு வக்கீல் ஆட்சேபித்தார். இத்தீர்ப்பு மூலம் இனி இவ்வழக்கில் தொடர்பு சிறிதும் இல்லாத மனிதராக குட்ரோச்சி சுதந்திரமாக உலா வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
http://thurkai.blogspot.com/2009/09/blog-post_9784.html
No comments:
Post a Comment