Sunday, February 23, 2014

நல்லா கேட்டுக்கோங்க ...நான் தான் ஒரிஜினல் டீ கடைக்காரன் - புண்ணாக்கின் பிதற்றல் !


மோடிக்கு போட்டியாக டீக்கடைகளை திறந்த லாலு

பாட்னா: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியின், டீக்கடை விவாதங்களுக்கு போட்டியாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத்தும், பீகாரின் பல நகரங்களில், டீக்கடைகளை துவக்கியுள்ளார்.

நரேந்திர மோடி, துவக்கத்தில், டீக்கடை வைத்திருந்தார். அதை, காங்கிரஸ் ஏளனமாக கூறியதால், அதையே தங்கள் பிரசார ஆயுதமாக, பா.ஜ., மாற்றியது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான டீக்கடைகள், நரேந்திர மோடி பெயரில் துவக்கப்பட்டுள்ளன. 'சாய் பே சர்ச்சா' என்ற பெயரில், டீக்கடை விவாதங்களை, மோடி நடத்தி வருகிறார். இதனால், அவருக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

இதை அறிந்த லாலு பிரசாத், 'மோடி, தன்னை டீக்கடைக்காரர் என சொல்வது பொய். நான் தான் உண்மையான, டீக்கடைக்காரன். சிறு வயதில், பாட்னாவில், டீக்கடை நடத்தியுள்ளேன்' என்றார். மேலும், 'லாலு சாய் துகான்' என்ற பெயரில், பீகாரின் சில நகரங்களில், டீக்கடைகளை, அவரின் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இந்த தற்காலிக டீக்கடைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக டீ கொடுக்கப்படுகிறது. கூடவே, பிஸ்கட்டும் தரப்படுகிறது. அத்துடன், லாலு தான், உண்மையான டீக்கடைக்காரர் என, அவர் கட்சியினர், பொதுமக்களிடம் எடுத்துரைக்கின்றனர்.

இதற்கான பொறுப்புகளை ஏற்று நடத்தி வரும், லாலு கட்சி பிரமுகர், இக்பால் ஷாமி கூறும் போது, 
''முதற்கட்டமாக, மிதிலாஞ்சல், சமஸ்திபூர் போன்ற இடங்களில், டீக்கடைகள் துவக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில், பல கிராமங்களிலும், லாலு டீக்கடை துவக்கப்படும். இந்த கடைகள், மோடி, பீகாருக்கு, தேர்தல் பிரசாரத்திற்கு வரும், மார்ச், 3ம் தேதி வரை நடத்தப்படும்,'' என்றார். 


இதை, பீகார் மாநில, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான, சுஷில்குமார் மோடி கிண்டலடித்துள்ளார். ''மோடிக்கு எதிரான லாலுவின் இந்த கோமாளித்தனத்தை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,'' என, அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment