நான் தான் உண்மையான டீ வியாபாரி :சொல்கிறார் லாலு
பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும், 300 நகரங்களில் ஆயிரம் டீக்கடையில் டி.விக்களை அமைத்து பொதுமக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக உரையாடும் பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளார். இது குறித்து, ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
நான் சிறுவயதில் கால்நடைக் கல்லூரியில் இருந்த போலீஸ் குடியிருப்பில் எனது மூத்த சகோதரருடன் சேர்ந்து டீ விற்பனை செய்துள்ளேன். மேலும், படிக்கும் காலங்களில் பிஸ்கட்களையும், டீயும் விற்பனை செய்துள்ளேன். நான்தான் உண்மையான டீ வியாபாரி. எப்போதும் எனது சிறுவயது நாட்களை வெளிப்படுத்த விரும்புவதில்லை’ என்று கூறினார். மேலும், மோடி எப்படி டீ விற்பனை செய்ய முடியும். ரத்தங்களையும், கலவரங்களையும்தான் விற்பனை செய்ய முடியும் என்று கடுமையாக தாக்கினார்.
கலவரம் நடந்த முஷாபர் நகரில் மார்ச் 3ம் தேதி நடைபெறும் நரேந்திர மோடியின் பேரணிக்கு இணையாக ராஷ்டீரிய ஜனதா தளமும் பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நமோ டீ கடை பிரசாரம் மூலம் வாக்காளர்களை கவர்ந்து வரும் பா.ஜ.வைப் பார்த்து மற்ற கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை எப்படி நடத்துவது என்று இப்போது ஆலோசித்து வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=124#sthash.s2kgG9QD.dpuf
No comments:
Post a Comment