தொங்கு நாடாளுமன்றம் பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் அத்வானி !
தொங்கு நாடாளுமன்றம் பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் அத்வானி
புதுடெல்ல: இந்த மக்களவை பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற கணிப்புகள் உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை.
தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுவரையில் இல்லாத அளவுக்கு பா.ஜ. கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். தவறான நிர்வாகம், ஊழல் ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணயில் மலிந்துள்ளன என்று குற்றஞ்சாட்டிய அத்வானி, சுதந்திர இந்தியாவில் இதுவரையில் எந்த ஒரு தேசிய கட்சியும் பெறாத அளவுக்கு அதிக தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று கூறப்பபடுவதை நிராகரித்தார்.
நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, நாடு முழுவதும் பா.ஜ.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இந்த அளவுக்கு இதற்கு முன்பு கட்சிக்கு ஆதரவை இருந்ததை தான் பார்க்கவில்லை என்றும் அத்வானி குறிப்பிட்டார். பா.ஜ.வுக்கு ஆதரவான அலையும் காங்கிரசுக்கு எதிரான மோசமான நிலைமையும் உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். இதற்கு முன்பு அது இந்த அளவுக்கு தோற்றது இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் தோல்வி இருக்கும். இது வரலாற்றிலும் இடம்பெறும்.
தவறான நிர்வாகம், பெருமளவில் ஊழல், அரசின் பிற்போக்கான கொள்கைகள் ஆகியவையே இந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியை கொண்டு சென்றுள்ளது என்றார். டெல்லியில் பா.ஜ. கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு அத்வானி பேட்டியளித்தார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜிம் உடன் இருந் தார்.
See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=150#sthash.s1Gw7HSC.dpuf
No comments:
Post a Comment