Saturday, January 15, 2011

கருணாநிதியின் நாளைய வரலாறு

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஒரு ஓவியர் வடிவேலுவை படம் வரைந்து கொண்டிருப்பார். வடிவேலுவின் தலையும், இன்னொருவருடைய உடலையும் சேர்த்து, ஏதோ புஜ பல பராக்கிரமசாலியை போல ஓவியம் அருமையாக வரையப்பட்டிருக்கும். பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.

அப்போது, வடிவேலுவிடம் அமைச்சர் மங்குணி பாண்டியன் (அமைச்சர் அன்பழகன் மாதிரி) கேட்பார். எதற்காக அரசே இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று. அதற்கு வடிவேலு சொல்லுவார், இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் மாங்கா மடையர்களுக்கு என்ன தெரியப் போகிறது. அவர்கள் அனைவரும் மாமன்னர் 23-ம் புலிகேசி ஒரு மாவீரச் சக்கரவர்த்தி என்று நினைப்பார்கள். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்று சொல்லுவார்.

அப்படித்தான் இன்று தமிழ்நாட்டிலும் வரலாறு மிக முக்கியம் என்று ஒரு புலிகேசி செய்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை. நமது தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதிதான்.


தி.மு.க. என்று ஒரு பெரிய கொள்ளை கும்பலை அண்ணாத்துரை ஆரம்பித்தார். இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் அந்த கொள்ளை கும்பலை கருணாநிதி எப்படி கைப்பற்றினார் என்பது கருணாநிதிக்கு மட்டுமே தெரிந்த வரலாறு.

தமிழகத்தை விஞ்ஞானப்பூர்வமாக கொள்ளையடித்து சொத்துக்களை குவித்து விட்டார். ஆனால் வரலாற்றை பொறுத்த வரையில் இலவச திட்டங்கள், 1 ரூபாய் அரிசி என்று மக்களை ஏமாற்றி, தன்னை ஒரு கொடை வள்ளல் போலவே காட்டிக் கொள்கிறார்.

தி.மு.க. கொள்ளை கூட்ட தலைவர் அண்ணா இறந்தபொழுது, அவருக்கு அடுத்தபடியாக நெடுஞ்செழியன் தான் அந்த கொள்ளை கூட்டத்தில், முதல் அமைச்சர் பொறுப்புக்கு தகுதியானவராக இருந்தார். தற்காலிக முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றார். அந்த காலத்தில், கட்சியில் அண்ணாவுக்கு அடுத்தபடியாக இருந்த ஐம்பெரும் தலைவர்களில் கூட கருணாநிதியின் பெயர் கிடையாது. இன்று அந்த கட்சியின் பெரும் தலைவர்கள் பட்டியலில் இவருடைய குடும்பத்தினரை தவிர வேறு யாருமே கிடையாது.

கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்த எம்.ஜி.ஆரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெடுஞ்செழியனை ஏமாற்றி விட்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தார். இப்போது, அதைப்பற்றி கேட்டால், ஆட்சிக்கு வரவேண்டும் என்று தனக்கு விருப்பமே கிடையாது என்று வாய்கூசாமல் பொய் சொல்லுவார். நான் ஆட்சிக்க வரவேண்டும் என்று பெரியார் விரும்பினார், நெடுஞ்செழியன் விரும்பினார், எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று தனது பட்டியலை நீட்டிக்கொண்டே போவார். இந்த தகவல் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்து விடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார்.




இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருந்தபோது, இவர் இங்கிருந்து கடிதம் எழுதிக் கொண்டு இருந்தார். எதற்காக, பிற்காலத்தில் நான் இலங்கை தமிழர்களுக்காக இத்தனை கடிதம் எழுதினேன் என்று எடுத்துக் காட்டுவதற்காகத் தான். பேச்சுகள் நாளடைவில் மறைந்து விடும். ஆனால் கடிதங்கள் ஒரு அத்தாட்சியாக எப்பொழுதும் பயன்படும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.

இதைவிட கொடுமை என்னவென்றால், இலங்கையில் இறுதிகட்ட போரின்போது, காலை சாப்பாட்டுக்கும் மதியசாப்பாட்டுக்கும் இடையில் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை அருமையாக நடத்தினார்.

அந்த போராட்டத்தைக் கூட, உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி இருந்தால் அவரை பாராட்டுவதில் தவறில்லை. 86 வயது முதியவர், சுடுகாட்டுக்கு போகும் வயதில், தள்ளுவண்டியில் வந்து உண்ணாவிரதம் இருந்தார் என்றால் ஆச்சரியப்படக் கூடியது தான். பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் தனது அரசியல் லாபத்துக்காக அந்த நாடகத்தை நடத்தினார். இதுகூட உண்மையா என்பது சந்தேகமே.

வீட்டில் நடந்த பிரச்சினைக்காக தனது பொண்டாட்டி, பிள்ளைகளிடம் சண்டை போட்டுக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க வந்ததாக கூட ஒரு செய்தி உண்டு. எது எப்படியோ? அப்போதைக்கு அவருடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை தமிழர்கள் கிடைத்து விட்டனர். அதை வைத்து அரசியலும் நடத்தி விட்டார்.

மொத்தத்தில், தனது வீட்டு பிரச்சினைக்காக, உண்ணாவிரதம் என்ற பெயரில் அருமையான நாடகம் ஒன்றை நடத்தி ஒட்டு மொத்த தமிழ் மக்களையும், முட்டாள் ஆக்கி விட்டார்.


யாராவது இவரை குறை சொல்லி விட்டால், நான் அந்த காலத்தில் இலங்கை தமிழர்களுக்காக எப்படி எல்லாம் போராடினேன் என்று புராணம் பாட ஆரம்பித்து விடுவார். அதற்கு உதாரணமாக முரசொலியில் வெளிவந்த ஏதாவது ஒரு செய்தியின் பழைய பேப்பர் கட்டிங்கை எடுத்து காட்டி, முழு பக்கத்துக்கு அறிக்கை கொடுக்க ஆரம்பித்து விடுவார்.


அந்த காலத்தில், மத்திய அரசு இவருடைய ஆட்சியை கலைத்ததற்கு காரணம், இவர் விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்கிறார் என்று நீதிபதி சர்க்காரியா கமிஷன் கொடுத்த அறிக்கைதான். ஆனால் அதைக்கூட இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ததால் தான் ஆட்சி போனது என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டார். அதைப் பற்றி இன்றுவரை சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

இதேபோல, சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இவர் பேசியபோது, நேருவைப் பற்றி தான் அந்த காலத்திலேயே எழுதி வைத்த கவிதையை பக்கம் பக்கமாக வாசித்தார். நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்னார்.

ஆனால், மதுரையில் நேருவுக்கு கறுப்பு கொடி காட்டி, செருப்பை விட்டெறிந்ததை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டார்.

அவசர நிலைக்காலத்துக்குப் பின்னர் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தலைவி இந்திராகாந்தி, மதுரைக்கு வந்தபோது மதுரை தெற்குவாசலில் அவரைக் கொல்ல முயற்சித்த கொடுமையையும் இவர் சொல்லவில்லை. இவற்றையும் சொல்லி இருந்தால் தெரிந்திருக்கும் கருணாநிதிக்கும் நேரு குடும்பத்துக்கும் உள்ள உறவு.

இந்திராவின் உயிரைக் காப்பாற்றிய பழ.நெடுமாறனும், என்.எஸ்.வி. சித்தனும் நல்ல சில காங்கிரஸ்காரர்களும் இன்றும் அதற்குச் சாட்சியாக உள்ளனர். ஆனால், இந்த சம்பவம் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு தெரியாது.

ஒன்றும் வேண்டாம், கடந்த ஆண்டு சட்டசபை பொன்விழா மலர் வெளியிடப் பட்டது. அந்த பொன் விழா மலரில், சட்டசபையில் இவர் ஆற்றிய உரைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இல்லையென்றால், இவரை பாராட்டி யாராவது புகழ்ந்து பேசியிருந்த உரைகளும் இடம் பெற்றிருந்தன. ஆனால் எதிர்கட்சி தலைவர்கள் யாருடைய உரைகளும் அந்த மலரில் வெளியிடப்படவில்லை.

இவருடைய 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர். பேசிய உரைகள் கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அனைவருடைய பேச்சுக்களும் இருந்தால்தானே, வருங்கால தலைமுறைகளுக்கு உண்மை தெரியும். அதனால்தான் திட்டமிட்டே தனக்கு துதி பாடியவர்கள் தவிர மற்ற அனைவருடைய பேச்சுகளையும் நீக்கி விட்டார். அந்த அளவிற்கு அந்த காலத்திலிருந்தே வரலாறு மிக முக்கியம் என்று திருத்திக் கொண்டே வருகிறார். பச்சை நிறம் தான் இல்லையே ஒழிய பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணங்களும் இவருக்கு உண்டு.


ஆக, வரலாற்றை முற்றிலுமாக திருத்தி எழுதி தன்னை ஒரு புஜ பல பராக்கிரமசாலியை போல காட்டிக் கொள்ள முயன்று விட்டார் என்பது மட்டுமே தெளிவான உண்மை. பிற்காலத்தில் வரப்போகும் மாங்கா மடையர்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று வடிவேலு சொன்னதைப் போலவே, நடக்கப்போகிறது.

கருணாநிதிக்கு வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு நீண்ட காலம் கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய 5 முறை முதல் அமைச்சராகி விட்டார். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது, நிர்வாகத்தை சரியாக நடத்துகிறாரோ, இல்லையோ, வரலாற்றை மட்டும் நேர்த்தியாக திருத்திக் கொண்டிருக்கிறார்.

இதுவரையில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேலாக வரலாற்றை திருத்தி எழுதி விட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் மிச்சம் உள்ளதையும் முடித்து விடுவார்.

உதாரணமாக இவர்களுடைய கொள்ளை கம்பெனியின், அதிகாரப்பூர்வ செய்தித் தாளான முரசொலியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய செய்தி நாளைய வரலாறு. இதுதான் இவங்க கம்பெனியோட கொள்கை. இதிலிருந்தே, இவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எது எப்படி இருந்தாலும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

http://kingsolomonraja.blogspot.com/2010/10/blog-post_28.html


No comments:

Post a Comment