Sunday, January 9, 2011

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது : பா.ஜ., மாநில தலைவர் குற்றச்சாட்டு

உடுமலை : ""தமிழகத்தில், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்குமே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,'' என பா.ஜ., மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். உடுமலை அருகே பூலாங்கிணறில், பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் வீராச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தொழில் அணி பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.

மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசிய தாவது:

பா.ஜ., மதவாத கட்சியல்ல; கிறிஸ்து, முஸ்லீம் குழந்தைகளுக்கு வழங்குவது போன்று, இந்து ஏழை குழந்தைகளுக்கும் உதவ அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கோவில்களின் அர்ச்சனை கட்டணம் சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், கோவில் சொத்துக்களும், வருமானமும் எங்கே செல்கிறது என தெரியவில்லை.

காய்கறி முதல் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 8 ரூபாயாக இருந்த வெங்காயம் தற்போது 60 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது. பதுக்கல், கடத்தல், ஆன்லைன் வர்த்தகம் போன்ற காரணங்களினால், விலைவாசி உயர்ந்துள்ளது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, நெய்யாறு பாசன நீர் உரிமை காக்க நடவடிக்கையில்லை. குடிநீர் பிரச்னையை தீர்க்க நதிகளை இணைக்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டார். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நதிகளை இணைக்கமுடியவில்லை. தற்போது, ராகுல் நதிகளை இணக்க முடியாது என கூறுகிறார். ஆனால், முடியாததை முடிக்கவே பா.ஜ., ஆட்சிக்கு வரவேண்டும்.

தற்போது தமிழகத்தில், குழந்தைகளுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எனவே வரும் தேர்தலில், ஓட்டளிக்கும் போது யோசித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மாநிலத்துணைத்தலைவர் சின்ராஜ், மாநில செயலாளர் வானதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஜயராகவன், ருத்ரக்குமார், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் வடுகநாதன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங் கேற்றனர். முன்னதாக, பா.ஜ., கட்சி சார்பில், தாமரை யாத்திரை காரத்தொழுவு, கணியூர், மடத்துக்குளம், குமரலிங்கம், பள்ளபாளையம் வழியாக உடுமலை பஸ்ஸ்டாண்ட் வந்தது. தாமரை யாத்திரை வாகனத்திற்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.


எந்த கட்சியுடன் கூட்டணி? "சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த பிப்.,க்கு பின்னரே முடிவு செய்யப்படும்' என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் செய்யும் "தாமரை யாத்திரை' நேற்று பொள்ளாச்சி வந்தது. யாத்திரைக்கு தலைமை வகித்த மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதில்லை. சிறுபான்மையின மாணவர்களை போன்று தாழ்த்தப்பட்ட இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் தாமரை யாத்திரை நடக்கிறது. இதுவரை, 6,000 கி.மீ., தூரம் தாமரை யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 600 பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வரும் ஜன., 29ம் தேதி சென்னையில் நிறைவடையும் யாத்திரையையொட்டி, அன்று இரவு "சென்னை போராட்டம்' என நடக்கிறது.

கேரள மாநிலத்தை விட தமிழகத்தில், "சரக்கு' விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு வருமானம் அதிகரிக்கிறது. இதனால், ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வலிமை உள்ளது. வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தாமரை யாத்திரை நிறைவடைந்தவுடன்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

http://erodelive.com/indexnews/politicalheadlinenews.php?id=2981

No comments:

Post a Comment