Monday, January 10, 2011

தனியார் மருத்துவமனைகளுக்கும் வருமானம் கலைஞர் டிவிக்கும் வருமானம்!


சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம்:

கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ. 23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது.

கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?

பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினமணி 9-1-2011

கலைஞர் காப்பீடு திட்டம் போல தனியார் மருத்துவமனைகள் கள்ளா கட்ட சிறப்பான சேவை செய்வது 108 ஆம்புலன்ஸ் சேவை. எல்லா இடத்திலேயும் நிரம்பி விட்ட தனியார் மருத்துவமனைக்கு நம்ம பணத்திலேயே மருத்துவம் செய்ய காப்பீடு திட்டம் அதற்கு உங்களை அழைத்து செல்ல 108 சேவை. இதற்கெல்லாம் முதலாளிகளிடம் இருந்து பங்கு வாங்குவது பத்தாது என்று 108 ஆம்புலன்ஸ் சேவை விளம்பரத்தில மக்கள் பையில் இருந்து ஒரு கோடி ரூபாயும் கொள்ளையடித்து விட்டார் கலைஞர்.

http://athikalai.wordpress.com/2011/01/10/108ambulance/


No comments:

Post a Comment