Sunday, December 19, 2010

ராஜாவும் கூஜாவும்.

வியாழக்கிழமை, 02 டிசம்பர் 2010 23:38

ராஜாவைப் பற்றி நன்கு தெரியும். ஊரே ராஜாவை உரித்து உப்புக் கண்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது யாரு கூஜா ? வேற யாரு …. கோபாலபுரம் கூஜாதான். இப்புவும் புரியலையா… ?

நம்ப ஜாபர் சேட் தான் வேற யாரு. “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறானாம். “ என்ற பழமொழியை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? இது ஜாபர் சேட்டுக்கு நன்றாகப் பொருந்தும். எப்படி என்று விளக்குகிறேன்.

கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை ஜாபர் சேட், ஆ.ராசா, கருணாநிதி மற்றும் கனிமொழியிடம் சொல்லி விட்டு, டெல்லி சென்றார். என்ன சொல்லி விட்டு சென்றார் தெரியுமா ?

“சிஏஜி ரிப்போர்ட்டில் ராஜா மீது சுமத்தியிருக்கக் கூடிய குற்றச் சாட்டுகளுக்கெல்லாம் பதில் தயார் செய்து விட்டேன். டெல்லி சென்று, மீடியாவுக்கெல்லாம் இதைக் கொடுத்து, ராஜா பெயரை சரி செய்து விட்டு வருகிறேன்“ என்பதுதான் அது.

Jaffar_Sait_2

சவுக்கு வாசகர்கள் இதைப் படித்து விட்டு சிரிப்பது நன்றாக தெரிகிறது. ஆனால், இதுதான் உண்மையில் நடந்தது தோழர்களே…

நம்ப ஜாபர் சேட் குடுக்குற பில்டப் இருக்குதே…. அப்பிடி ஒரு பில்டப். என்னைக் கேக்காம டெல்லில காக்கா கூட கக்கூஸ் போகாது என்கிற ரேஞ்சுக்கு, பில்டப் கொடுப்பார். ஜாபரை நன்கு அறிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு இவர் ஒரு டம்மி பீசு என்பது தெரிந்தாலும், ஆ.ராசாவும், கருணாநிதியும், கனிமொழியும், இவரை இன்னும் நம்புவதுதான் வேதனையிலும் வேதனை. இவர் கொடுத்த பில்டப்பை பார்த்து நம்பிய ஆ.ராசா, ”ஜாபர், 500 கோடியானாலும் குடுத்துடலாம்” (இவன் அப்பன் சம்மாரிச்ச துட்டு இல்ல… ?) ”எந்த கேசும் வராம பாத்துக்கங்க” என்று கூறியிருக்கிறார். ராசாவிடமே, 500 கோடி இருக்கிறதென்றால், தொழில் அதிபரிடமும், பெண் சிங்கம் இயக்குநரிடமும் எவ்வளவு இருக்கும்

இது மட்டுமல்லாமல், கருணாநிதியிடம் என்னென்ன புளுகியிருக்கிறார் தெரியுமா ? நீரா ராடியா உரையாடல்களில் பலவற்றில் சந்தேகம் இருக்கிறது. எடிட்டிங் செய்யப் பட்டிருக்கிறது. அதையும் விசாரித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

கருணாநிதியும் இதை நம்புகிறார். ஏன் நம்புகிறார் ? பல பேராட போனை ஒட்டு கேட்டு, நம்ப கிட்ட டேப் போட்டு காட்டுனவனாச்சே.. இவனுக்கு டேப் விஷயத்துல நல்ல அனுபவம் இருக்கும். இவன் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று கருணாநிதி நம்புகிறார். இது பழைய கருணாநிதி அல்ல. முதுமையில் பழைய செயல்பாடுகள் போல இப்போது செயல்பட முடியாத கருணாநிதி. பழைய கருணாநிதியாக இருந்தால், ஜாபரை இந்நேரம் சட்டையை கழற்றி, ஏடிஎம் சென்டர் வாட்ச்மேனாக்கியிருப்பார். இத்தனை முதுமையிலும், கருணாநிதியுடைய அதிகார வெறி, இது போன்ற நபர்களை நம்பி ஏமாற வைக்கிறது.

டெல்லி சென்ற ஜாபர் சேட், அஷோகா இன்டர்நேஷனல் ஒட்டலில் தங்கினார். முதல் நாள், உள் துறையில் சில அதிகாரிகளை சந்தித்தார். மாலை மீண்டும் அறைக்குத் திரும்பியவுடன், வேறு என்ன “சரக்கு வெச்சுருக்கேன். எறக்கி வச்சுருக்கேன்… கருத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சுருக்கேன்“ இதே போல அடுத்த இரண்டு நாட்களையும் கழித்த ஜாபர் சேட், வெள்ளியன்று சென்னை திரும்புகிறார்.

சென்னை திரும்பிய ஜாபர் சேட்டை வந்து சந்திக்குமாறு கருணாநிதி உத்தரவிடுகிறார். வெள்ளியன்று மாலை கருணாநிதியை சந்திக்க சிஐடி காலனி செல்கிறார் ஜாபர் சேட். உள்ளே நுழைந்த ஜாபர் சேட்டை வெராண்டாவிலேயே நிறுத்துகிறார் தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள்.

ராஜாத்தி அம்மாள், ஜாபர் சேட்டை திட்டிய வார்த்தைகளில் பதிவேற்றம் செய்ய முடிந்ததை மட்டும் சவுக்கு உங்களுக்குத் தருகிறது.


r1

குடி கெடுத்த பயலே

எங்கடா வந்த

இன்னும் யாரு குடிய கெடுக்கடா வந்த

உன்னால என் பொண்ணு எவ்வளவு கஷ்டப் பட்றா பாருடா

நான் எவ்வளவு கஷ்டப் படுகிறேன் தெரியுமா ?

உனக்கு நாங்க என்னடா துரோகம் செஞ்சோம்

ஏன்டா எங்க குடும்பத்த இப்படி சந்தி சிரிக்க வச்ச

சந்தி சிரிக்குதேடா எங்க குடும்பம்

வெளில தலக்காட்ட முடியலையேடா

அந்த …………………….. (குஷ்பூ) நீ கொண்டு வந்து விட்டதுலேர்ந்து எங்க வீட்டுல தரித்திரம் புடிச்சு ஆட்டுதேடா

அவ கால வச்சதுலேர்ந்து எங்க குடும்பம் விளங்காம போயிடுச்சேடா

நீ நல்லா இருப்பியாடா… ?

என் போனையே டேப் பண்ணி என் குடும்பத்த கெடுத்தவன் தானேடா நீ ?

எந்த மூஞ்ச வச்சுகிட்டுடா இங்க வந்த ?

தொழில் அதிபர் பயன்படுத்திய மற்ற வார்த்தைகளையும் பதிவேற்ற ஆசையாகத் தான் இருக்கிறது என்றாலும், மூத்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கடும் கண்டனத்துக்கு அஞ்சி, சவுக்கு அதைத் தவிர்க்கிறது.

மேலே சொன்ன அர்ச்சனைகளே இவ்வளவு சிறப்பாக இருக்கிறதென்றால், எழுதாமல் விட்ட அர்ச்சனைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை சவுக்கு வாசகர்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

jafer_2

கருணாநிதி முதல் மாடியில் இருக்கிறார். ஜாபர் சேட் உள்ளே நுழைந்ததும், ஜாபருக்கு வணக்கம் வைத்து கண்டுகிடலாம் என்று வராண்டா அருகில் வந்த ட்ராலி பாய்ஸ் மூன்று பேரும், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட்டம் எடுத்திருக்கிறார்கள்.

இதன் பிறகு ஜாபரை சந்தித்த கனிமொழி, “ஜாபர்.. டூ சம்திங் ஜாபர். எவ்ரி டே லிவ்விங் ஈஸ் எ ஹெல் ஃபார் மி ஜாபர். ஐயாம் நாட் ஏபிள் டு பிக்கப் மை கால்ஸ் பார் தி பாஸ்ட் டென் டேஸ் ஜாபர். தி மீடியா ஈஸ் டார்கெட்டிங் மீ, பொலிடிஷியன்ஸ் ஆர் டார்கெட்டிங் மீ. ப்ளீஸ் டு சம்திங் ஜாபர்“ என்று கூறியிருக்கிறார்.

06_KANIMOZHI_MP_VG_6721f

ஜாபர் “டோன்ட் ஒர்ரி.. ஐ வில் டேக் கேர். “ என்று ஆதரவு கூறியிருக்கிறார்.

நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஜாபர் கனிமொழிக்கு உத்தரவாதம் கொடுக்கிறாரே…. …. ஜாபர் என்ன சோனியா காந்தியா, ராகுல் காந்தியா, மன்மோகன் சிங்கா ? மன்மோகன் சிங்கையே, உச்ச நீதிமன்றம், பின்னி எடுக்கிறது. சோனியா காந்தியால், அவர்கள் கட்சிக் காரரான சுரேஷ் கல்மாடியையே காப்பாற்ற முடியவில்லை. உச்ச நீதிமன்றம் போடும் கிடுக்கிப் பிடியில் சிக்கிக் கொண்டு சோனியாவும், மன்மோகன் சிங்கும் ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில், ஐ வில் டேக் கேர் என்று புருடா விடுகிறாரே… ஜாபர்…. ? (ஜாபர் சேட்.. உங்கள இன்னுமா இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு ?)

இதையடுத்து ஜாபர் கருணாநிதியை பார்க்க முதல் மாடிக்கு சென்று விட்டார். சென்றவுடன் கனிமொழி ராசாத்தியைப் பார்த்து “அம்மா ஜாபர திட்டாதம்மா.. ஜாபர் நமக்கு ஹெல்ப் பண்ணுவாரும்மா” என்று சொன்னதும், தொழில் அதிபர் தலையில் அடித்துக் கொண்டு, இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார்.


15IN_KANIMOZHI_287754e

”அவன நம்பாதடி”

அவன் எப்படிடி நமக்கு ஹெல்ப் பண்ணுவான் ?

இவன் பண்ண வேலையிலதானேடி அண்ணன் தம்பி ஒன்னு சேந்துக்கிட்டானுங்க ?

ஏற்கனவே இந்த பரதேசிப் பய நம்ப குடும்பத்த நாறடிச்சது போதாதாடி… ?

இவனும் அந்த காமராஜ் பயலும் சேந்துதானேடி நம்ப குடும்பத்த இந்த நெலமைக்கு கொண்டு வந்து விட்ருக்கானுங்க

இன்னுமாடி அவன நம்பற

இந்தப் பிரச்சனை ஆரம்பச்சதுலேர்ந்து அவன் எங்கடி போனான் ?

பத்து நாளா இந்தப் பக்கம் வந்தானாடி ?

இத்தனை நாள் கழிச்சு வந்ததுலேர்ந்தே அவன் பவுசு உனக்கு புரியலையாடி ?

அவன நம்புனா உன்ன நடுத்தெருவுல நிறுத்திருவாண்டி.. அவன நம்பாதடி” என்று தலையில் அடித்துக் கொண்டு கத்தியுள்ளார்.

இந்தத் தகவல், மெல்ல மெல்ல காவல்துறை வட்டாரங்களில் கசிந்து கசிந்து வெளி வர ஆரம்பித்ததும், உயர் அதிகாரிகள், ”மத்தவுங்ககிட்டயெல்லாம் என்னா சவுண்டு விட்றான். ? அந்த பொம்பளை கிட்ட கத்த வேண்டியதுதானே… ” என்று ராசாத்தி அம்மாள் ஜாபருக்கு செய்த அர்ச்சனையை பற்றி மகிழ்ச்சியாக விவாதித்து வருகின்றனர்.

இந்த அர்ச்சனை நடக்கும் போது, ஜாபர் சேட், அட்டேன்ஷனில், ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார் என்று தெரிகிறது.

இதைச் சொல்லி சொல்லி சிரித்து மகிழ்கிறது ஐபிஎஸ் வட்டாரம். அந்தப் பழமொழி ஜாபருக்குப் பொருந்தும் தானே ?

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=196:2010-12-02-18-18-10&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

No comments:

Post a Comment