Sunday, December 19, 2010

எங்கேயோ கேட்ட குரல் - சினிமா இல்லைங்க ... படிங்க மொதல்ல ...சுவாரசியமா இருக்கும்....

ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 12:06

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள். ரஜினி சிறப்பாக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. அந்தப் படம் இன்று ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ரிலீஸ் செய்யப் படுகிறது.

1_11600

உடனே இது ரஜினி நடித்த படம் என்று நினைத்து விடாதீர்கள். இது ரஜினி நடித்த படம் அல்ல. தமிழகத்தின் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பூங்கோதை நடித்த படம்.

Poongothai

மே 2008ல், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி ஒரு உரையாடல் அடங்கிய சிடியை வெளியிட்டார். அந்த உரையாடலில் அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை ஆலடி அருணா, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசுகிறார்.

அந்த உறவினரின் பெயர் ஜவகர். மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜவகர், 50,000 ரூபாய் லஞ்சம் வாங்குகையில் கையும் களவுமாக பிடிபட்டவர். இவரை அந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, பூங்கோதை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம் கேட்டுக் கொண்ட உரையாடலைத் தான் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டார்.

விவேக் ஒரு படத்தில் சொல்வாரே…. காமாட்சி சொல்லிட்டா, எனக்கு தண்ணியில கண்டம் என்று.. அது போல பூங்கோதைக்கு போனில் கண்டம். பாத்துப் பேசக் கூடாதா ? அதுவும் சும்மா இல்லாமல், மு.க.அழகிரி, நம்பவைத்து கழுத்தறுக்கும் அரசியல்வாதி என்று வேறு சொல்லுகிறார். சரி, தமிழ் ஊடகத்தில் முதன் முறையாக அமைச்சர் பூங்கோதை நீரா ராடியா உரையாடலை சவுக்கு தனது வாசகர்களுக்காக மொழி பெயர்த்துத் தருகிறது.

சரி போன முறை ராஜினாமா செய்தது போல, இந்த முறை செய்வாரா ?

Niira_Radia-320023

இதோ அந்த உரையாடல்

பூங்கோதை: அது நீராவா ?

நீரா : ஹாய். எப்படி இருக்கிறாய் ?

பூங்கோதை : நான் நன்றாக இருக்கிறேன். அப்புறம் எல்லாம் எப்படி நடக்கிறது.

நீரா : ம் ம். நன்றாக இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன். ஸ்டாலின் துணை முதல்வர் ஆகி விட்டாரா ?

பூங்கோதை : எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது ? எனது கவனத்தை கவர்ந்த விஷயம் என்னவென்றால், அவள் (கனிமொழி) என்னை முழுமையாக நம்பும் வரை அது நடக்காது என்றார்.

நீரா : ஆமாம்.

பூங்கோதை : அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அநேகமாக அது செப்டம்பரில் தான் இருக்கும் என்று கூறினார். அதை நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை.

நீரா : ஆமாம். ஆமாம். அவர் அதை சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் ஒரு விஷயம் பாருங்கள். கனி… …. நான் குதிரையை தண்ணீர் அருகில் தான் கொண்டு செல்ல முடியும். அதை குடிக்க வைக்க முடியாது. ஜோதிடம் நீங்கள் என்ன செய்யலாம், என்ன செய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்தும் இல்லையா ? உங்களுக்கென்று ஒரு வழி இருக்கிறது இல்லையா ? அந்தப் பாதையை நீங்கள் தானே தேர்ந்தெடுக்க வேண்டும் ? ஆனால் அவர் (கனிமொழி) அந்தப் பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. நான் அவரிடம் நீங்கள் எம்ஓஎஸ் (துணை அமைச்சர்) பதவியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றே சொல்லி வந்திருக்கிறேன்.

பூங்கோதை : ம் ம்.

நீரா : ஆனால் கனிமொழிக்கென்று ஒரு போக்கு இருக்கிறது. கனிமொழி தன்னைப் பார்த்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பூங்கோதை : (சிரிப்பு)

நீரா : அவர் மற்ற எல்லோரையும் பார்த்துக் கொள்கிறார்.

பூங்கோதை : ஆமாம். ஆமாம். நாங்கள் அனைவருமே ஒரு காலத்தில் அவருக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தோம். இதனால் அவர் மனவருத்தம் அடைந்தார்.

நீரா : (சிரிப்பு)

பூங்கோதை : நானும் இதையேதான் அவருக்குச் சொன்னேன். நாங்கள் டெல்லிக்கு வருவதற்கு முன்பே. நான் சொன்னேன், உன் வாழ்க்கையில் முதல் முறையாக உன்னைப் பார்த்துக் கொள். மற்ற அனைவருக்கும் அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தெரியும். இது அரசியல் இல்லையா ?

நீரா : கரெக்ட். கரெக்ட்

பூங்கோதை : அரசியலில் நம்ப வைத்து கழுத்தறுப்பார்கள். உனக்கு யாரும் நண்பரும் கிடையாது. உனக்கு யாரும் எதிரிகளும் கிடையாது. இல்லையா ?

நீரா : கரெக்ட். கரெக்ட்.

பூங்கோதை : கனி என்ன சொன்னார் ?

நீரா : ம் எனக்குத் தெரியவில்லை அவர்… அநேகமாக… தவறு செய்து விட்டோமென்று நினைக்கிறாரா…. நாம் அனைவரும் அவரிடம் பேசலாம் அல்லவா ?

பூங்கோதை : நாங்கள் அனைவரும் ஒரு முறை டெல்லி வருகிறோம். அப்போது நாம் அனைவரும் அமர்ந்து பேசலாம்.

நீரா : அவர் அடுத்த வாரம் டெல்லி வருகிறார் இல்லையா ?

பூங்கோதை : ஆமாம். முன்பு நான் வெறும் எம்.எல்.ஏ தான். இப்போது நான் டெல்லி வருவதென்றால் அவர் (கருணாநிதி) அனுமதியை பெற வேண்டும்.

நீரா : ஆமாம் ஆமாம்.

பூங்கோதை : ஆமாம். என்னுடைய துறை வேறு இப்போது தகவல் தொழில் நுட்பம் என்பதால், முக்கியமானது என்பதால் நான் வேலை செய்ய வேண்டும். அடுத்த வாரம் ஒரு ரோட் ஷோ வேறு வைத்திருக்கிறேன். மேலும்.. சரி சச்சின் எப்படி இருக்கிறார்.. ? ஓகே வா ?

நீரா : நன்றாக இருக்கிறார். நன்றாக இருக்கிறார்.

பூங்கோதை : நான் முதலில் சச்சினுக்கும், எனது அமைச்சருக்கும் எழுதுகிறேன். எழுதி விட்டு, மின்னணு நிர்வாக ஒப்பந்தத்தை அவருக்கு கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நீரா : நன்று. நன்று. நீங்கள் அதைச் செய்ய வேண்டும்.

பூங்கோதை : உங்களது நண்பரை அவர் (கனிமொழி) சந்திக்க ஒப்புக் கொண்ட ஒரே காரணம் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது தான். திடீரென்று அவர் ஏதோ ஒன்று நடக்கும் என்று சொன்னார். என்னவென்று சொல்லவில்லை

நீரா : அவர் என்னுடைய நெருங்கிய உறவினர்.

பூங்கோதை : அவர் என்னிடம், எதையும் விட்டு விட வேண்டாம். நீங்கள் வங்கிக்கு வர வேண்டி இருக்கும் என்று கூறினார். அது என்னுடைய நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது. அதற்குப் பிறகு ஒரு மாற்றம் வந்தது. எனக்கு சிறிது கவலையாக இருக்கிறது. நாம் அவருக்கு (கனிமொழி) என்ன செய்ய முடியும், இதைத் தவிர என்று .. ….

நீரா : அவர் திங்களன்று டெல்லி வரட்டும். நான் அவரிடம் பேசுகிறேன். அவர் திங்களன்று வருகிறார். நீங்களும் அவரிடம் பேசுங்கள். நானும் பேசுகிறேன்.

பூங்கோதை : (சரியாக புரியவில்லை) இது போதுமென்று நினைக்கிறேன்.

நீரா : நான் திங்களன்று அவரிடம் பேசுகிறேன். அவர் என்னிடம் தவறு செய்துவிட்டேன் என்பதை கோடிட்டுக் காட்டி விட்டார். அவரிடம் பேசி விட்டு என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம். இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.

பூங்கோதை : நான் என்ன நினைக்கிறேன் என்றால், எனக்கு முதல்வரைத் தெரிந்த வரைக்கும் கனியை அவர் விட்டு விடமாட்டார். பழைய படி மீண்டும் நடக்கும் என்று நினைக்கிறேன்.

நீரா : எனக்குத் தெரிந்த வரை, அவர் அழகிரியோடு நட்பாக பழகவேண்டும் என்று நினைக்கிறேன். அவர் இதைச் செய்வதற்கு நீங்கள் அவரை ஊக்கப் படுத்த வேண்டும். ஏனென்றால், அழகிரியால் டெல்லியில் ரொம்ப நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.

பூங்கோதை : அப்படியா நினைக்கிறீர்கள் ?

நீரா : அவருக்கு அதற்கான தகுதிகள் இல்லையென்றே நினைக்கிறேன்.

பூங்கோதை. : இல்லை. இல்லை. நீங்கள் அவரை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.

நீரா : யோசித்துப் பாருங்களேன்….

பூங்கோதை : அவர்களெல்லாம் நம்பவைத்து கழுத்தை அறுக்கக் கூடிய அரசியல்வாதிகள்.

நீரா : எனக்குப் புரிகிறது. புரிகிறது. அதனால்தான் அவர் தமிழ்நாட்டில் இருப்பதைத் தானே விரும்புவார். எதற்கு இங்கே இருக்க வேண்டும் ?

பூங்கோதை : அவருக்கு ஏற்கனவே மதுரையை விட்டு இருக்க பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக வேண்டும், திரும்பிப் போக வேண்டும் என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறார்.

நீரா : நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவரை (கனிமொழி) அவரோடு (அழகிரி) நட்பாக இருக்கச் சொல்லுங்கள். என்னை நம்புங்கள். சொல்வதை நம்புங்கள்.

பூங்கோதை : ம்.ம். நான் பேசுகிறேன். நான் அங்கு வருகிறேன். இந்த வார இறுதியிலோ, அடுத்த வார தொடக்கத்திலோ நான் அங்கு வருவேன்.

நீரா : நல்லது. நல்லது. நான் இங்கேதான் இருப்பேன்.

பூங்கோதை : சந்திக்க விரும்புகிறேன்.

நீரா : நல்லது

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=236:2010-12-12-06-46-26&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

No comments:

Post a Comment