
புதுடில்லி : டில்லியில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் உரையாற்றினார். அவர் தனது உரையில், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம் சோனியா, ஊழலுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்துள்ளார். ஊழலால் பெமாது மக்கள் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்பது தடைபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்களுடன் துண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மூத்த தலைவர்கள் சந்திக்க வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அடித்தட்டு மக்களுக்கும் சேர வேண்டும் என்று பேசினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=148971
No comments:
Post a Comment