Sunday, December 19, 2010

நீலச் சாயம் வெளுத்துப் போச்சு… ராசா வேஷம் கலைஞ்சு போச்சு.

புதன்கிழமை, 08 டிசம்பர் 2010 23:39

குழந்தைகளாக இருக்கையில் நம்மில் பலர் பாடியிருக்கும் பாடல் இது. இதைப் போலத்தான் இன்று ராசாவின் வேஷம் கலைந்தது. இன்று அதிகாலை பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்தியா முழுவதும் சோதனையை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஆ.ராசாவின் டெல்லி வீட்டையும் சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மாதம் முன்பாக ஆ.ராசா என்ன பேசினார் என்பதை நினைவுப் படுத்திப் பாருங்கள். There is no question of resigning. No irregularity in spectrum allocation. Everything was done with Prime Minister’s knowledge. என்னவெல்லாம் பேசினார். இன்று பேச்சு மூச்சில்லாமல், திமுகவில் இருப்போமா இருக்க மாட்டோமா என்ற வருத்தத்திலும், குழப்பத்திலும் இருக்கிறார்.

இன்று சிபிஐ வளையத்தில் ராசாவைத் தவிர, ராசாவின் செயலாளராக இருந்த ஆர்.சே.சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை செயலாளர் கே.ஸ்ரீதர், தொலைதொடர்புத் துறை அதிகாரி ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 14 இடங்களில் தொடங்கிய சோதனை இன்று மாலை வரை தொடர்ந்தது.

சென்னையில் ராசாவின் பினாமியாக கருதப் படும் க்ரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்சின் மேலாண் இயக்குநர் சாதிக் பாட்சா என்பவர் வீட்டிலும் நடந்தது.

சென்னையைத் தவிர ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரிலும், ஸ்ரீரங்கத்தில் உள்ள ராசாவின் சகோதரர் வீட்டிலும், திருவானைக்கோவிலில் உள்ள ராசாவின் சகோதரி வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

ராசாவின் செயலாளராக இருந்த சந்தோலியாவை கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விசாரணையின் போது, சந்தோலியா கிளி போல அனைத்தையும் ஒப்பித்ததாக கூறப் படுகிறது. இவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இன்றைய சோதனைகள் நடைபெற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DSC_09123

சாதிக் பாட்சா

அதிகாலை சென்னையில் உள்ள டிஎம்எஸ் பின்புறம் உள்ள சாதிக் பாட்சா வீட்டில் வந்திறங்கிய சிபிஐ அதிகாரிகள், காலை 11.30 மணிக்கு சாதிக் பாட்சாவை வெளியே அழைத்துச் சென்றனர். சாதிக் பாட்சாவின் வங்கி லாக்கர்களை திறப்பதற்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

சிபிஐ அதிகாரிகளின் சோதனை முடிந்ததும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தியாகராய நகர் க்ளோபஸ் வளாகத்தின் ஆறாவது தளத்தில் உள்ள க்ரீன் ஹவுஸ் ப்ரொமோட்டர்ஸ் என்ற அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

மாலை 6 மணியளவில் சாதிக் பாட்சாவை அவரது வீட்டில் இறக்கி விட்டு விட்டு சிபிஐ அதிகாரிகள் புறப்பட்டுச் சென்று விட்டனர். அதன் பிறகு, வருமான வரித்துறை அதிகாரிகள் சாதிக்கை எஸ்கேப் திரையரங்க வளாகத்திற்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டிலேயே விட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DSC_0895

சாதிக் வீட்டை படம் பிடிக்க குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள்

இந்த சாதிக் பாட்சா இவ்வளவு சொத்தோடு இருக்கிறாரே…. எப்படி… ரத்தன் டாட்டா போல பரம்பரை பணக்காரரா என்ற சந்தேகம் எழும்.

சாதிக்கின் வரலாற்றைப் பார்ப்போம். சாதிக் பாட்சாவின் சொந்த ஊர்,, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி. சாதிக்குக்கு 20 வயது இருக்கும் போது, பிழைப்புக்காக பெரம்பலூர் வருகிறார். பெரம்பலூருக்கு வந்ததும் சாதிக் செய்த தொழில் வீடு வீடாக சென்று புடவை ஜாக்கெட் துணி விற்பனை செய்து, தவணை முறையில் மாதந்தோறும் வசூல் செய்வது. 1984-85ல் பெரம்பலூர் மாவட்டமாக அறிவிக்கப் படுகிறது. இவ்வாறு அறிவிக்கப் பட்டதும், சாதிக் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சவுதி, துபாய், போன்ற நாடுகளில் வேலை செய்பவர்கள் மிக மிக அதிகம். சவுதிக்குப் போய் பத்து ஆண்டுகளாக திரும்பி வராமலேயே இருப்பவர்கள் அதிகம். இந்த விஷயத்தை சாதிக் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார். எப்படி என்றால், நிலம் வைத்திருப்பவர்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது. போட்டுக் கொண்டு, அந்த நிலத்தை சவுதி, துபாய், பஹ்ரெய்ன் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பெரம்பலூர்க்காரர்களை தொடர்பு கொண்டு, பெரம்பலூரில் நிலம் விலை ஏகப்பட்டடாக ஏறிப் போய் விட்டது என்று கதை விடுவார். இவர் கதையை நம்பி, வெளிநாட்டில் இருந்தபடியே நிலத்தை வாங்கிப் போடுவார்கள். இந்த விஷயத்தை சாதிக்கோடு, டெய்லர் முனவர் மற்றும் இரண்டு பேர் ஈடுபட்டனர்.

IMG_9248

காரில் சாதிக்கை ஏற்றி, வண்டியை ஓட்டப் போகும் சிபிஐ டிரைவர் மற்றும் காரில் ஏறும் சாதிக்

இவ்வாறு வெளிநாடுகளில் சாதிக் விற்ற நிலங்களுக்கு சாதிக் சூட்டிய பெயர் என்ன தெரியுமா ?

சாதிக் ரியல் எஸ்டேட்

டால்பின் சிட்டி

க்ரீன் சிட்டி

பாட்சா நகர்

என்பன. வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள், உண்மை நிலவரத்தை பார்த்தவுடன், அய்யோ, அய்யோ என்று அடித்துக் கொண்டு ஏமாந்து விட்டோமே என்று புலம்பியிருக்கிறார்கள். பலர் மண்ணை வாரி இறைத்து, சாதிக்கை சபித்திருக்கிறார்கள் என்று பெரம்பலூரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

நெருக்கடி மிகுந்ததும், ஆறு வருடங்களுக்கு முன், சாதிக் சென்னைக்கு மஞ்சள் பையோடு கிளம்புகிறார். சாதிக் சென்னை வரும் நேரத்தில் ஆ.ராசா துணை அமைச்சராக இருக்கிறார்.

ஆ.ராசாவுக்கு, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று தணியாத ஆசை. சாதிக் வந்ததும், ரியல் எஸ்டேட் தொழிலில் அனுபவம் மிக்கவர் என்று சாதிக்கை வைத்து க்ரீன் ஹவுஸ் ப்ரொமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்குகிறார்.

IMG_9250

சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள்

இந்த நிறுவனத்தில் ராசாவின் மனைவி பரமேஸ்வரி மேலாண் இயக்குநராக நியமிக்கப் படுகிறார். சிரிது காலம் கழித்து, பரமேஸ்வரி விலகிக் கொண்டு, பரமேஷ் குமார் என்ற ராசாவின் அக்காள் மகன் மேலாண் இயக்குநராக நியமிக்கப் படுகிறார்.

முதலில் ஒரு கோடி ரூபாய் வைத்து இந்நிறுவனம் தொடங்கப் படுகிறது. ஒரு கோடி ரூபாயோடு தொடங்கிய நிறுவனம், ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதும், அண்ணாமலை படத்தில் ரஜினி ஒரே பாடலில் பணக்காரராக ஆவாரே…. அதே போல க்ரீன் ஹவுஸ் நிறுவனம் 600 கோடிக்கு நிலங்களை வாங்கிப் போடுகிறது.

க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் இது வரை முடித்த திட்டங்கள் என்னவென்று பார்ப்போம்.

சவுபாக்கிய நாகர். திருவள்ளுரில் 25 ஏக்கரில் 241 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 9 லட்சம்.

ஸ்ரீ சாய் சக்தி நகர் அத்திப்பட்டில் 27 ஏக்கரில் 218 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 2.75 லட்சம்.

க்ரீன் சிட்டி. திருப்போரூரில் 8.37 ஏக்கரில் 83 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 18 லட்சம்.

IMG_9262

ஸ்ரீசாரதி நகர். திருநின்றவூரில் 30 ஏக்கரில் 306 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 11 லட்சம்.

சுபமங்களா நகர். செங்குன்றத்தில் 30 ஏக்கரில் 316 ப்ளாட்டுகள். ஒரு ப்ளாட்டின் விலை 6.25 லட்சம்.

ஆலிவ் கார்டன் மகாபலிபுரம் அருகே 105 ப்ளாட்டுகள். விலை ப்ளாட்டுக்கு தக்க மாறும்.

கடற்கரை அருகே கோவளத்தில் 6000 சதுர அடியில் 23 ப்ளாட்டுகள்.

ஸ்ரீ கிருஷ்ணா நகர். செவ்வாய்ப் பேட்டை 105 ப்ளாட்டுகள்.

பாரத் நகர். புதுப்பட்டினம் 280 ப்ளாட்டுகள்.

ஏஎன்எஸ் நகர். திருநின்றவூர். 170 ப்ளாட்டுகள்.

சஹானா திருநின்றவூர் 80 ப்ளாட்டுகள்

சந்தோஷம் நகர் கொடுவேலி 60 ப்ளாட்டுகள்.

சிங்கபெருமாள் கோவில் அருகே 40 ஏக்கர்கள்

கிருஷ்ணசாமி என்க்ளேவ். திருச்சி மாவட்டம் அபிஷேகபுரத்தில் 32 அடுக்கு மாடி வீடுகள்.

துரைப்பாக்கத்தில் அடுக்கு மாடி வீடுகள்.

போரூர் அருகே அடுக்கு மாடி வீடுகள்

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை, லால்குடி, மணச்சநல்லூர் ஆகிய இடங்களில் ப்ளாட்டுகள்

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, சமயபுரம், மற்றும் ஆர்.டி.மலை ஆகிய இடங்களில் க்ரீன் சிட்டி என்ற பெயரில் ப்ளாட்டுகள்.

ஒரு மஞ்சள் பையோடு பெரம்பலூரிலிருந்து சென்னை வந்தவர் எப்படி இத்தனை கோடிகள் பெருமானமுள்ள இடங்களை வாங்கிப் போட்டிருக்க முடியும் ?

இது தவிரவும், க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா மற்றும் துபாயில் அலுவலக கிளைகளை திறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

IMG_9266

க்ரீன் ஹவுஸ் அலுவலகத்தின் உட்புறத் தோற்றம்

இந்த க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் தொழில் நிறுவனத்தில், சாதிக்கோடு சேர்ந்து இமயவரம்பன், பச்சமுத்து மற்றும் சுப்புடு என்பவர்களும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

சிபிஐ அதிகாரிகள், இவர்களையும் விசாரிக்குமாறு சவுக்கு கேட்டுக் கொள்கிறது.

இந்த வார இறுதிக்குள் ராசா கைது செய்யப் படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது சொல்லுங்கள், ராசாவின் வேஷம் கலைந்ததா இல்லையா ?

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=222:2010-12-08-18-22-10&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

No comments:

Post a Comment