Tuesday, December 21, 2010

ஆனியன் becomes அந்நியன்

உரிக்காமலேயே கண்ணீர்: வெங்காய விலை

இன்று காலையில் சென்னை மார்க்கெட் பகுதிக்குச் சென்றவர்கள் ஒரு விஷயத்தை தவறாமல் கவனித்திருக்கலாம்.

அது, ஆண் – பெண் பேதமின்றி வெங்காயத்தையும் வெங்காயத்தை விற்றவர்களையும் கடுமையாக சாடியது!

இன்று வெங்காயத்தின் விலை அதன் உச்சத்தைத் தொட்டது. சில இடங்களில் கிலோ ரூ 55-ம், பெரிய மொத்தவிலைக் கடைகளில் சிறிய ரகம் ரூ 48-க்கும், பெரிய ரகம் ரூ 52-க்கும் விற்கப்பட்டது.

இதில், நொந்து போன நடுத்தர மக்கள்தான் தங்கள் கோபத்தை வசவுகளாக வெளிப்படுத்திச் சென்றனர்.

கடந்த மாதம் வரை கிலோ 15 ரூபாய்க்கு விற்றது வெங்காயம். இந்தியாவில் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலமாக கர்நாடகா உள்ளது. பெங்களூர், பகல்கோட், பிஜப்பூர், தால்வாட், கடாக், சித்ரதுர்கா, தேவாங்கர், கடாக் ஆகிய மாவட்டங்கில் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தியாகிறது.

கர்நாடகாவில் மட்டும் இந்த ஆண்டு 17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்பட்டு இருந்தது.

சமீபத்தில் பெய்த மழையால் வெங்காய பயிர்களில் தண்ணீர் தேங்கி பெருமளவு பயிர்கள் நாசமாகிவிட்டன. விளைந்து இருந்த வெங்காயமும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத பயிர்கள் நாசமாகிவிட்டன.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெங்காய உற்பத்தியே இல்லாத நிலை. இதன் விளைவு வரும் நாட்களில் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.60 – 70 வரை போகலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பூண்டு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெளியூர்களில் கிலோ ரூ 170 வரை விற்கப்படும் பூண்டு, சென்னையில் ரூ 200 முதல் 220 வரை விற்கப்படுகிறது. அதுவும் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

வெங்காயம் பூண்டு உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நொந்துகொண்டோ, சாபமிட்டுக்கொண்டோ மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். வேறுவழி சாப்பிட்டாக வேண்டுமே. ஆனால் வியாபாரிகளை சாபமிடுவதாலோ, திட்டுவதாலோ இது சரியாகிவிடக் கூடியதா? மழை பெய்தாலும் விலையேற்றம் அது பொய்த்தாலும் விலையேற்றம் என்றான நிலையில் அதன் பின்னணியிலிருக்கும் காரணிகளை தெரிந்துகொள்ள வேண்டாமா? எதிர்க்கட்சிகள் இதை ஆளும்கட்சிக்கு எதிராக பயன்படுத்தும், ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த விலையேற்றங்களைத் தவிர்த்துவிடுமா? ஆளும்கட்சியானாலும், எதிர்க்கட்சியானாலும்; மாநில ஆட்சியானாலும், மத்திய ஆட்சியானாலும் இவைகளைத் தவிர்க்கும் உத்தேசத்துடன் அவை ஆட்சிபுறிவதில்லை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டாமா? அவர்களின் எஜமானர்களான உலக வர்த்தகக் கழகமும், பன்னாட்டு நிதியமும் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி ஆட்சி நடத்துவதன் விளைவுதான் இந்த விலையேற்றம் தொடங்கிய அனைத்தும் என்பது உணர்ந்துகொள்ளப்பட வேண்டாமா? உணரவேண்டும், சாபங்கள் கோபங்களாக மாறவேண்டும். அவை உலகமயம், தனியார்மயம், தாரமயத்தை அடித்து வீழ்த்தும் விதமாக எழவேண்டும்.

http://nallurmuzhakkam.wordpress.com/2010/11/15/onion-price/

No comments:

Post a Comment