Thursday, September 23, 2010

‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?

mk2

“கோவில்களுக்காகக் கருணையும் நிதியும் நிறைந்தவராக இருக்கிறார் தமிழக முதல்வர்” என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது தில்லியிலிருந்து வரும் ஆங்கில நாளிதழ் “பயனீர்”.

“தமிழக முதல்வர் ஆலய ஆதரவாளராக மாறிவிட்டார்” என்று கூறியது “டைம்ஸ் ஆஃப் இந்தியா”.

இரண்டு தினசரிகளும் கலைஞரின் கடவுள் எதிர்ப்பு கொள்கையையும், பிராம்மண துவேஷ நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனால் அந்தச் செய்திகளில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கோவில் திருப்பணிகளுக்காக ஒதுக்கியுள்ள ரூபாய் 450 கோடியை ஏதோ ஒரு பெரிய விஷயமாக பறைசாற்றியது தான்!

தமிழ் இந்து பக்தர்கள் கோவில் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை மற்றும் அவர்கள் அளிக்கும் நன்கொடைகள் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த 450 கோடி ரூபாய் என்பது வெறும் வேர்க்கடலை சமாசாரம் என்பது தெளிவு. சொல்லப்போனால், கோவில்களுக்காக என்று தமிழ் இந்து பக்தர்கள் மனமுவந்து அளிக்கும் நிதியை ஆலயங்கள் மற்றும் இந்து மத ஆன்மீக சம்பந்தமான விஷயங்களு -க்குச் செலவு செய்வது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

அவ்வாறு தமிழக அரசு இந்து மத விஷயங்களுக்காக மட்டும் செலவு செய்கிறதா; தமிழ் இந்து பக்தர்கள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ஆலய வருவாய் வேறு சமூக நலப் பணிகளுக்க்கும், சிறுபான்மையினர் நலப் பணிகளுக்கும் செலவழிக்கப் படுகிறதா; ஆலயங்கள் மற்றும் ஆலய சொத்துக்கள் மூலம் வரும் வருவாயும் அவற்றை வைத்துச் செய்யும் செலவுகளும் முறையாகத் தணிக்கை செய்யபடுகிறதா; போன்ற விவரங்க -ளை வேறு ஒரு சமயம் பார்ப்போம். தற்போது, வெளிப்படையான இந்து விரோத மற்றும் நாத்திகக் கொள்கையுடைய முதலமைச்சர் ஏதோ தன் சொந்த நிதியையோ, தன் கட்சியின் நிதியையோ கோவில்களுக்குச் செலவு செய்வதைப்போன்று பத்திரிகைகள் செய்திகள் வெளியிடுவதால், அவரின் கொள்கைப் பிடிப்பை அலசி ஆராய்வோம்.

முதல்வர், கோவில் மற்றும் கடவுள்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளதாக சில பத்திரிகை -கள் பேதைத்தனமாக ஊகித்தாலும், கழக அரசியலைத் தொடக்கத்திலிரு -ந்து கவனித்து வருபவர்களுக்கு முதல்வர் போடும் இரட்டை வேடம் நன்றாகத் தெரியும். இந்த மாதிரியான விஷயங்களில் அவருடைய தனிப்ப -ட்ட கொள்கை அரசியல் கொள்கைக்கு நேரெதிரானது என்பதும், அவர் இரட்டை வேடம் போடுபவர் என்பதும் பெரும்பான்மையான தமிழ் மக்களு -க்குத் தெரியாதது துரதிர்ஷ்டமே.

நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், எப்படி நம் தேசத்தி -ன் வரலாற்றைத் திரித்து அதன் மூலம் நம்முள் வேற்றுமை ஏற்படுத்தி நம்மை பிரித்து ஆட்சி செய்தார்களோ, அதே வழியில் தான் கலைஞரும் தன் அரசியல் தொழிலில் தன் சுயநலத்திற்காக அன்று முதல் இன்று வரை நடந்துகொண்டிருக்கிறார். தன்னுடைய அரசியல் வாழ்வில் வாய்ப்பு கிடை -க்கும் போதெல்லாம் இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும், இந்துமத தத்துவங்களையும், இந்து கலாசாரத்தையும் அவமரியாதை செய்தும், ச்மஸ் -கிருத மற்றும் ஹிந்தி மொழிகளை அவதூறு செய்தும் வந்திருக்கிறார். அதே நேரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக அவர்கள் மதங்களை -யும், கடவுள்களையும், கலாசாரத்தையும் புகந்து பேசி வந்திருக்கிறார்.

trichy

2006-ஆம் ஆண்டு கலைஞர் அரசு ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோவில் எதிரே நாத்திகவாதியும் தமிழ் மொழியையும் தமிழர்களையும் அவமானப் படுத்தியவருமான ஈ.வெ.ராவின் சிலையை வைத்ததை தமிழ் இந்துக்கள் கடுமையாக எதிர்த்தபோது, “கோவில் கோபுரங்களில் நிர்வாண உருவங் -களும், கோவிலுக்குள்ளே நிர்வாண சிலைகளும் இருக்கும்போது, கோவி -ல் எதிரே ஆடையணிந்த ஈ.வெ.ரா இருப்பதில் என்ன தவறு?” என்று கேட்டார் கலைஞர்.

2007-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது, “கணபதி வாதாபியில் பிறந்தவர். பல்லவர் காலத்தில்தான் அவரைத்தமிழகம் கொணர்ந்தனர். எனவே அவர் தமிழ் கடவுள் இல்லை” என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார் கலைஞர். அப்பேர்பட்ட அறிவுஜீவி, விநாயகர் சதுர்த்தி அன்றுதான் தன் கலைஞர் தொலைக்காட்சியை துவக்கினார் என்பது பிரமாதமான நகைமுரண்.

bridge02a

சேது சமுத்திரத்திட்டத்தில் ராமர் பாலம் இடிபடுவதை எதிர்த்த இயக்கமா -னது உச்சக்கட்டத்தை அடைந்தபோது, “17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னா -ல் ஒருவர் இருந்தாராம், அவர் பெயர் ராமராம். அவர் கட்டிய பாலத்தைத் தொடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வங்கினார்? அதற்கு ஆதாரமுண்டா?” என்று தன்னுடைய பகுத்தறிவு பட்டொளி வீசுமாறு கேட்டார் கலைஞர். பிறகு தனக்கு மிகவும் பிடித்தமான ஆரியர்-திராவிடர் கோட்பாட்டைக் கையில் எடுத்து, “ராமன் ஆரியக் கடவுள். ராவணன் திராவிட அரசன். சேது சமுத்தி -ரத் திட்டத்திற்கு எதிராக செயல்படும் மதவாத (இந்து) இயக்கங்கள் திராவி -டத் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை எதிர்க்கும் ஆரியர்கள் ஆவர்” என்று கூறி ராமாயணம் பற்றிய தன் புலமையை வெளியுலகிற்குக் காட்டினார் கலைஞர்.

அதன் பிறகு NDTVயின் ‘Walk the Talk’ நிகழ்ச்சிக்காகத் தன் வீட்டில் அமர்ந்த படியே பேட்டி கொடுத்த கலைஞர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆசிரிய -ர் சேகர் குப்தாவிடம், “துளசி தாஸர் சீதை ராமனின் சகோதரி என்றும் வால்மீகி ராமரைக் குடிகாரன் என்றும் எழுதியிருக்கிறார்கள்” என்று மேலு -ம் தன் ராமாயண ‘அறிவை’ உலகிற்கு உணர்த்தினார்.

ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில் -லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! நாள்தோறும் அலுவ -லுக்குக் கிளம்பும் முன் தன் வீட்டின் எதிரே உள்ள கிருஷ்ணர் கோவிலில் ரகசியமாக கிருஷ்ணரை வணங்குவதாகச் சொலப்படுவதுகூட காரணமாக இருக்கலாம்.

ஒரு முதல்வர் என்கிற முறையில், முஸ்லிம் மற்றும் கிறுத்துவ சமுதாயத் -தினருக்கு அவர்களின் அனைத்துப் பண்டிகைக்களுக்கும் திருநாட்களுக்கு- ம் வாழ்த்துச் சொல்லும் கலைஞர் தமிழ் இந்துக்களுக்கு மட்டும் எந்தப் பண்டிகைக்கும் திருநாளுக்கும் வாழ்த்துச் சொல்வதில்லை. நாடு முழுவது -ம், தமிழகம் உட்பட, கொண்டாடப்படும் சங்கராந்தி பண்டிகைக்கு மட்டும், அது ‘பொங்கல்’ எனப்படும் தமிழர் திருநாள் என்று வினோதமான ஒரு கார -ணத்தைக்கூறி வாழ்த்து தெரிவித்து வருகிறார் கலைஞர்.

அவருக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஞாபக மறதி உண்டு. அதாவது ஈ.வெ.ரா ஒரு கன்னடக்காரர் என்பதும் அவருடைய தாய்மொழி கன்னடம் என்பதும், தன்னுடைய பூர்வீகம் தெலுங்கு என்பதும், தன்னுடைய பாட்ட -னார் காலத்தில் தெலுங்கு தேசத்திலிருந்து வந்து தமிழகத்தில் குடியேறிய -வர்கள் என்பதும் அவருக்கு மறந்துவிடும்.

மேலும், பகுத்தறிவுப் பாசறையில் உழலும் இந்த நாத்திகர் ”மஞ்சள் துண்டு” போடும் ஒரு தெய்வீகப் பழக்கத்தைக் கொண்டுள்ளவர். அதற்காகப் பல பகுத்தறிவுக் காரணங்களைக் கூறி மக்களைத் திறமையாகக் குழப்பியவர். உண்மை என்னவென்றால், இவருடைய இயற்பெயர் ‘தக்ஷிணாமூர்த்தி’ என்பதால், தக்ஷிணாமூர்த்தி பகவானுக்கு உகந்த மஞ்சள் நிறத்தை அணிய -ச்சொல்லி இவருக்கு வேண்டிய சோதிடர்கள் ஆலோசனை வழங்கியிருப்ப -தாகச் சொல்லப்படுகிறது.

“நான் பார்ப்பனர்களுக்கு எதிரானவன் இல்லை. பார்ப்பனீயத்திற்குத்தான் எதிரானவன். எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனியத்தைப் பழகுபவர்களாக இருந்தால் அவர்களை நனும் என் கட்சி -யும் எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார் கலைஞர். இதுவும்கூட இரட்டை -வேடம் தான். தன்னைச் சுற்றி முக்கியமான பதவிகளில் பிராம்மணர்க- ளைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வதில் இவர் என்றுமே தயங்கியதில் -லை. தனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள்கூட பிராம்மணர்களாக வைத்துக்கொண்டவர். இவருடைய யோகா பயிற்சியாளர்கூட ஒரு பிராம்- மணரே. ஆனால் பிராம்மணர்களைக் கிண்டல் செய்தும் அவமதித்தும் பலமுறைப் பேசியுள்ளார் கலைஞர்.

கடந்த சிலநாட்களாக இவருடைய “முரசொலி” நாளிதழ் “கல்கி”, “விகடன்” மற்றும் “தினமணி” ஆகிய பத்திரிகைகளின் மீது “பார்ப்பன இதழ்கள்” என்றும் அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை “பூணல் போட்ட பார்ப்பனர்கள்” என்றும், ”அய்யர்”, “அவாள்”, “இவாள்” என்றும் “செம்மொழியில்” அவதூறு செய்து வருகிறது.

ஆகவே, இந்த இரட்டைவேடக் கலைஞரின் நாத்திக மற்றும் பகுத்தறிவுக் கொள்கையையும், பிராம்மண துவேஷத்தையும், தஞ்சைப் பெரிய கோவிலி -ன் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் பின்னணியில் அலசிப் பார்ப்பது பொருத்தமானது.

tanjore-temple

2007-ஆம் அண்டு பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்பிரமணியம் அவர்கள் பரதக் கலையைத் தோற்றுவித்த பரத முனிவருக்கு ஒரு கோவில் கட்டுவதற்காக அடித்தளம் அமைக்க விழா எடுத்தார். அழைப்பிதழ் அனுப்பி -யும் வாழ்த்து தெரிவிக்க விரும்பாத கலைஞர், “பரதக் கலையின் அழகை -யும் நுணுக்கங்களையும் சிலப்பதிகாரத்தில் அருமையாக விளக்கி எழுதி -யவர் இளங்கோ அடிகள். அவர் அளவிற்குப் பரத முனிவர் ஒன்றும் செய்ய -வில்லை. மேலும், பரத முனிவருக்கு நினைவுக் கோவில் எழுப்புவதென்- பது திராவிடர் மீதான ஆரிய ஆக்கிரமிப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதாகும்” என்று தான் வாழ்த்துத் தெரிவிக்காததற்கு சிறிய பகுத்தறிவு விளக்கமும் அளித்தார்.

இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் பரத நாட்டியக் கலையைப் பற்றி அருமையாக எழுதியிருப்பது உண்மைதான். அதில் யாருக்கும் எந்த மாற்றுக் க்ருத்தும் இல்லை. ஆனால் தெய்வீகமான பரதக் கலையைத் தோற்றுவித்தவர் பரத முனிவர் என்பதிலும் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மாற்றுக் கருத்து இருப்பவர்கள் பரதக் கலையி -ன் வரலாற்றை அறியாதவர்களாகத்தான் இருக்க முடியும். மேலும், இளங்கோ அடிகள் ஏற்கெனவே பழக்கத்திலும், பயிற்சியிலும் இருந்த பரதக் கலையின் நுணுக்கங்களைப் பற்றித்தான் எழுதியிருந்தாரே ஒழிய பரதக் கலையைத் தோற்றுவித்தவர் கிடையாது.

padma

அப்போது கலைஞர் வாழ்த்துச்செய்தி அனுப்பாததற்கு உண்மையான கரண -மாக வேறு ஒன்று சொல்லப்பட்டது. பத்மா சுப்பிரமணியம் பரத முனிக்கு கோவில் கட்ட ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்தது ஜெயலலிதா தலைமையிலா -ன அ.இ.அ.தி.மு.க அரசு என்பதாலும், இருவரும் நெருக்கமான தோழிகள் என்பதாலும், மேலும் இருவரும் பிராம்மண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும்தான் கலைஞர் வாழ்த்துச் செய்தி அனுப்பவில்லை என்ற விளக் -கம் அரசியல் களத்தில் சொல்லப்பட்டது.

அவருக்கே உரிய சுயநல குணத்தின்படி, சமீபத்தில் ‘உலகத் தமிழ்ச் செம் -மொழி மாநாடு” என்ற பெயரில் நடந்து முடிந்த தி.மு.க. மாநாட்டின்போது, பத்மா சுப்பிரமணியம் குழுவினரின் “பூவிதழும் போர்வாளும்” என்ற நாட்டி -ய நாடகத்தை அரங்கேற்றி மகிழ்ந்தார் கலைஞர். தற்போதுகூட, தஞ்சைப் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பத்மா சுப்பிரமணியம் தலமையில்தான் 1000 பரத நாட்டியக் கலைஞர்கள் சேர்ந்து வழங்கும் மாபெரும் நட்டிய நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், தனக்கு வேண்டும் என்று வரும்போது பிராம்மணர்களின் சேவைகளைப் பெறுவதில் கலைஞர் தயங்குவது கிடையாது என்பதும், தனக்கு வேண்டாத போது அவர்களை அவமதித்து தூற்றுவது உண்டு என்ப -தும் தான். ஆகவே, நான் பிராம்மணர்களுக்கு எதிரி கிடையாது, பிராம்ம -ணியத்திற்குத்தான் எதிரி, என்பதெல்லம் பொய்யன்றி வேறில்லை.

தஞ்சைப் பெரிய கோவில் ஒரு சாபம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது அக்கோவிலுக்கு “கேரளந்தான்” என்று சொல்லப்படும் அதன் பிரதான வயில் வழியே சென்று வரும் முக்கியப் பிரமுகர்களின் பதவிக் -கோ, ஆயுளுக்கோ, உடல்நலத்திற்கோ கேடு விளைந்து விடுவதாக நம்பப்படுகிறது. அதற்கு சாட்சியாக 1984-ல் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு வந்து சென்ற பின்னர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட்தும், எம்.ஜி.ஆர் தீவிரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதும் சொல்லப்படுகிறது.

இந்தச் சாபம் சம்பந்தமக ஒரு முக்கியமான விஷயமும் நடந்தது. 1997-ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலின் கும்பாபிஷேகச் சமயத்தில் யாகசா -லையில் தீ விபத்து ஏற்பட்டபோது 45 பேர்கள் இறந்ததும் 200 பேருக்கும் மேலானவர்கள் காயப்பட்டதுமான ஒரு துன்ப நிகழ்ச்சி நடந்தது. அப்போது விபத்து நடந்த யாக சாலையைக் காண்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும் தஞ்சை வந்த பல முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பிரதான வாயில் வழியைத் தவிர்த்தனர். அவர்களில் அப்போ -து முதல்வராக இருந்த கலைஞரும் ஒருவராவார். அவர்கள் அனைவரும் பிரதான வாயில் வழியே செல்லாமல் பக்கவாட்டில் உள்ள “சிவகங்கைப் பூங்கா” வாயில் வழியாகச் சென்றனர்.

தற்போது, கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா நிகழ்சிகளுக்காகவும் பக்கவாட்டில் உள்ள அதே சிவகங்கைப் பூங்கா வாயிலே ஏற்பாடு செய்யப் படுகிறது. அந்த வாயிலை ஒட்டியிருக்கும் சுவர் இடிக்கப்பட்டுப் பூங்காவில் உள்ள செடிகள் அகற்றப்பட்டு முக்கியப் பிரமுகர்கள் செல்லப் பாதை அமை -க்கப் படுகிறது. இவையெல்லம் திராவிட நாத்திகத்திற்கும் கழகப் பகுத்தறி -விற்கும் அத்தாட்சி!

இந்தப் பகுத்தறிவுவாதிக்கு ராமரும் விநாயகரும் நம்பகத்தன்மை இல்லாத கட்டுக் கதைகளில் வரும் கற்பனைப் பாத்திரங்கள். ராமர் பாலமும் கற்பனை. ராமாயணமும் கற்பனை தான். ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் தொடர்பான சாபம் மட்டும் கற்பனையல்ல, உண்மையென நம்பத்தகுந்தது!

கலைஞர் ஈ.வெ.ராவின் உண்மையான சீடனாக இருந்தால் பிரதான வாயி -ல் வழியே கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

கலைஞர் அண்ணாதுரையைப் பின்பற்றும் உண்மையான தம்பியாக இருந் -தால் கோவிலுக்குப் பிரதான வாயில் வழியே செல்ல வேண்டும்.

கலைஞர் பிரதான வயில் வழியே ஆலயத்தில் நுழைந்து, தான் ஒரு உண்மையான நேர்மையான பகுத்தறிவுவாதி என்றும், ஈ.வெ.ராவின் சீடர் என்றும், அண்ணாதுரையின் மாணவன் என்றும், தன் கட்சித் தொண்டர்களு -க்கு நிரூபிக்க வேண்டும்.

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகச் சொல்லிக்கொள்ளும் கலைஞர் ஆலயத்தின் பிரதான வாயிலை உபயோகித்துத் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

தஞ்சைப் பெரிய கோவிலுக்குள் பிரதான வயில் வழியே நுழைந்து சென்றா -ல் தான், கலைஞர் “வீரத் தமிழர்” என்று மதிக்கப் படுவார்.

மூடநம்பிக்கையை முறியடிக்க முன்வாயிலில் நுழைவாரா முதல்வர்?

http://www.tamilhindu.com/2010/09/psuedo-secularist-and-rationalist/

No comments:

Post a Comment