Thursday, February 20, 2014

எங்கும் எதிலும் ந-மோவே முதல் !!!


குஜராத்தில் மட்டுமல்ல - முக நூலிலும் முதல்வர் நமது "நாளைய பிரதமர்"
ந-மோ

தினமலர் செய்தி:

அரசியல் தலைவர்களை பேட்டி காண ஏற்பாடு

கோல்கட்டா: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, "பேஸ்புக்' சமூக வலைதளம், புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது. 

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் உட்பட நாட்டின் பிரபல அரசியல் தலைவர்களுடன், பேஸ்புக் வாடிக்கையாளர்கள், பேட்டி காண, அந்த இணையதளம் வாய்ப்பு வழங்குகிறது. குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ், டில்லி முன்னாள் முதல்வரும், "ஆம் ஆத்மி' கட்சித் தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் போன்றோரிடம், பேஸ்புக் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கலாம். 

இதற்கான கேள்விகளை, பேஸ்புக் இணையதளத்தின், 'Facebook Talks Live' என்ற பிரிவில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட அளவு கேள்விகள் சேர்ந்ததும், வாடிக்கையாளர்களின் சார்பில், பேஸ்புக் நிறுவனம், குறிப்பிட்ட நாளில், அந்தந்த அரசியல் தலைவர்களை சந்தித்து, பேட்டி காண உள்ளது. 

முதற்கட்டமாக, வரும், மே மாதம், 3ம் தேதி, நரேந்திர மோடியிடம், பேஸ்புக் பேட்டி காண உள்ளது. அதன் பிறகு, பிற தலைவர்களிடம், பேட்டி காணும் தேதி அறிவிக்கப்படும் என, அந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய இயக்குனர், ஆங்கி தாஸ் கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=920340

No comments:

Post a Comment