
ராமநாதபுரம் : இலங்கை பொதுத் தேர்தலுக்காக வாக்காளர்களை கவரும் விதமாக எம்.ஜி.ஆர்., பாடல் களை பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. அவரது மறைவுக்கு பின், அவரது பெயர், படத்தை வைத்து இன்று வரை அரசியல் நடந்து வருகிறது. தற்போது, இலங்கை பொதுத் தேர்தலிலும் எம்.ஜி.ஆர்., படங்கள், பாடங்கள் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. அங்குள்ள தமிழர்களின் ஓட்டுகளை பெற, அரசியல் கட்சியினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக எம்.ஜி.ஆரின் துடிப்புள்ள பாடல்கள் மூலம், தங்கள் வேட்பாளர்களை வாக்காளர்கள் மத்தியில் அடையாளம் காட்டுவதில், முக்கிய கட்சிகள் தீவிரமாக உள்ளன.
'நான் ஆணையிட்டால், உழைக்கும் கைகளே, நான் உங்கள் வீட்டு பிள்ளை, ஒன்றே குலமென்று பாடுவோம்' என, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்கள் தான், தற்போது இலங்கை தேர்தல் களத்தில் ஒலிக்கிறது. அந்நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் அனைத்து எப்.எம்.,களிலும், கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகவும் இப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர்களை கவர்ந்திழுக்க எம்.ஜி.ஆர்., தான் சரியான தேர்வு என்பதில், தமிழகத்தையே மிஞ்சிவிட்டது இலங்கை அரசியல்.
Source: http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7094
No comments:
Post a Comment