எது கவுரவம்?
நம்மை விட உயர்ந்தவரைப் பார்த்து பொறாமைப்படாமலும், நம்மை விட தாழ்ந்தவர் மீது வெறுப்பு, ஏளனம் காட்டாமலும், யாராக இருந்தாலும் சமமாக பாவிப்பது ஒரு வகை பண்பு நலம்.
இத்தகைய இனிய பண்பு நலன்கள் நம் மனதின் அடி ஆழத்தில் நீர் ஊற்று இருக்கிறது. நம் மனதில் நாம் சேர்த்துக்கொண்ட போட்டி, பொறாமை, வறட்டு கவுரவம் போன்றவை அந்த ஊற்றை மூடி விடுகின்றன.
மகாபாரதத்தில் பாரத போர் முடிவடைந்து, பகவான் கிருஷ்ணன் களைப்படைந்து தன் கண்களில் ஒளி இழந்து உடல் கருத்து கிருஷ்ணனுக்கே உரிய அழகு இல்லாமல் காணப்பட்டார். இந்த நிலை கிருஷ்ணனுக்கு வரக் காரணம் என்ன? அவரை சூழ்ந்த பாவம் அவரை தாக்கியது தான். துரியோதனனும் அர்ஜுனனும், கிருஷ்ணனை நாடிய போது தன் சேனைகளை துரியோதனனுக்கு அளித்தார். தன்னையே பாண்டவர்களுக்கு அளித்தார். இறுதியில் வெற்றியும் கண்டார். கிருஷ்ணனின் சேனைகள் சில பாரத போரில் மடிந்தன. அந்த பாவம் அவரை தாக்கியது.
பகவான் கிருஷ்ணன் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். படைவீரர்கள், பாண்டவர்கள், என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோரும் விருந்தில் கலந்து கொண்டனர். விருந்து ஆரம்பமாகும் சமயம்
“எல்லோரும் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்” என்று கிருஷ்ணன் கேட்டார். வரம் தரும் “பரமாத்மாவே வரம் கேட்பதா” என திகைப்பு! அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
விருந்து இனிதே முடிவடைந்தது. எங்கு தேடினாலும் பகவான் கிருஷ்ணனை காணவில்லை. கிருஷ்ணனை தேடும் படலம் தொடர்ந்து நடைபெறுகிறது. பகவான் கிருஷ்ணனோ விருந்து சாப்பிட்டவர் களின் இலையை எடுத்துக் கொண்டு இருந்தார். “கிருஷ்ணா என்ன செய்கிறாய்? நான் இலையை எடுக்கிறேன். நான் இலையை எடுக்கிறேன்” என்று கூக்குரல்கள். கைகூப்பி வணங்கியபடி கிருஷ்ணன் கூறினார். “நீங்கள் எல்லோரும் எனக்கு வரம் கொடுத்திருக்கிறீர்கள், ஞாபகம் இருக்கிறதா” நான் கேட்ட வரம் இதுதான். இங்கு உள்ள எல்லா இலைகளையும் நான் ஒருவனே எடுக்க வேண்டும். மனதில் சங்கடம் இருந்தாலும் மறுபேச்சு பேச முடியாமல் அனைவரும் “கிருஷ்ணருக்கு” கட்டுப் பட்டனர். சாப்பிட்ட எல்லா இலைகளையும் எடுத்து முடித்து கிருஷ்ணன் சபைக்கு வரும்பொழுது மீண்டும் கிருஷ்ணனுக்கே உண்டான அழகு முகத்தில் பொழிவு; கண்களில் ஒளி. தான் இழந்ததை மீண்டும் பெற்றார்
“கிருஷ்ணன்” தன் பாவம் நீங்கியது எப்படி என்பதை அவரே விளக்கினார்.
“சாப்பாடு போடுவது புண்ணியம், சாப்பிட்ட இலைகளை எடுப்பது அதைவிட புண்ணியம்” நான் ஒவ்வொரு இலையை எடுக்கும் பொழுதும் அந்த இலையில் புண்ணியம் மறைந்து இருந்தது. புண்ணியத்தின் தாக்கம் வர பாவங்கள் என்னை விட்டு மறைந்தன என்றார். இது மாயக்கண்ணன் விளையாடிய விளையாட்டு.
“பரமாத்மா” பாவ புண்ணிய எல்லைகளை கடந்தவர் பகவான் கிருஷ்ணன். இப்படி ஒரு சம்பவத்தை உருவாக்கியதே மனிதர்கள் ஆகிய நாம் புண்ணியத்தை எளிதில் பெற கிருஷ்ணன் நம் மீது கொண்ட அன்பினால் தான்!
http://www.indrayamaruthuvam.com/2010/01/14/21/
No comments:
Post a Comment