Sunday, September 26, 2010

அடடே.....உலக தலைஞர் !

(நன்றி: தினமணி, மதி - அடடே .. ) கீழே நன்றி முரசொலி, கல்கி இருக்கிறது :-)

இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரி கையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால் - "கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப் பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்" என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு. அந்தப் பத்திரிகையைப் படித்தவர் கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். "அடடே .....!" என்ற தலைப்பில் வெளி வந்து ள்ளது இது.

என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு

பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத் திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?

அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா விலே பிரிதிவி ராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர். நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், அவருடைய சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும் மைசூரில் "நாம்" திரைப்படத் திற்காக சென்று பணியாற்றிக் கொண்டிருந்த போது - மைசூரில் பிரிதிவி ராஜ் கபூரின் நாடகம் "பதான்" என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம். பிரிதிவி ராஜ் கபூர் நடித்தார். அவர் பல படங்களில் நடித்தார். "அக்பர்" அவர் நடித்த படம் தான். நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் பார்த்த "பதான்" நாடகத்தில், முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது - வாய் நிறைய தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு - சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல், அதை படுக்கை அறையிலேயே துப்புவார். அந்தக் காட்சியை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக் கூடிய அளவிற்கு கையொலி செய்து வரவேற்பார்கள். அதை அவ்வளவு பெரிய நடிப் பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு - அவ்வளவு பெரிய மகத்தான நடிகர் பிரிதிவி ராஜ் கபூர் - அவருடைய மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்கள வையிலே உறுப் பினராக இருந்தவர் அல்லவா? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசீ கபூர் அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரந்தீவ் கபூர் இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ள வில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை.

ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே - மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம் - என்னு டைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்; - அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது. ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடு பட்டுக் கொண்டிருக் கிறான், அவன் திராவிடச் சமுதாயத் திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். (கைதட்டல்) என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். நான் ஏதோ அவர் மீது கோபத் தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை.

ரஜினி காந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத் துறையிலே எனக்கு இருக்கின்ற ஈடுபாடு தான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள், கலைத் துறை நண்பர் களை எப்படி நேசிக்க முடியும்? கலைத் துறையிலே எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கலைத்துறையிலே உள்ள யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல், நட்புணர்வும், நேச உணர்வும் கொண்டிருக் கின்ற காரணத்தால் தான் தம்பி பாரதிராஜா இங்கே சொன்னதைப் போல இன்று நேற்றல்ல - ஆண்டாண்டு காலத்திற்கும் அவர்கள் என்னை நினைக்கின்ற அளவிற்கு - நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு அந்த இனிய தொடர்பு எங்க ளிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அதை யாரும், எவரும் எந்த வகை யிலும் தடுக்க முடியாது என்பதையும் அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத்தான் பையனுhரில் 15 ஆயிரம் பேருக்கான வீடுகள் கட்டப்பட்டு, திறக்கப்பட வுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
( நன்றி: முரசொலி, 23/8/2010 )

கலைஞர் குடும்பத்தின் சினிமா துறை ஆதிக்கம் பற்றி தினமணியில் மதியின் கேலிச்சித்திரம், கலைஞர் கருணாநிதிக்கு எரிச்சலாகிவிட்டது. பிருத்விராஜ் கபூரின் குடும்பத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் நடிக்கவில்லையா? சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் நடிக்கவில்லையா? ரஜினியின் மருமகனும் மகள்களும் சினிமாவில் ஈடுபட வில்லையா ? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலா நிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது என்று பொரிந்திருக்கிறார்.

நண்பர் மதி, கலைஞர் சொல்லும் குறுக்கே போடும் நூலான பூணூலைப் போட்டிருப்பவர் அல்ல. விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொ ல்ல முடியாத போதெல்லாம் பூணூலில் சரணடைவது கருணாநிதியின் வழக்கம். கலைஞர் குடும்பத்தில் இனியும் பிறக்கக்கூடிய அன்புநிதி, பண்புநிதி, குணாநிதி, தமிழ்நிதி, தேன்மொழி, கவிமொழி, லெனின், ஜீவா என்று யாரானாலும் சினிமாவில் ஈடுபடட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. இந்த நிதிகளுக்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது என்பதுதான் தமிழ் மக்களின் கவலை.

கல்லூரிப் படிப்பை முடித்ததுமே பல கோடி ரூபா பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வல்லமை கலைஞர் குடும்பத்தில்தான் இருக்கிறதே தவிர, பிருத்விராஜ் கபூர் குடும்பத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை. போட்டி கம்பெனிகளின் கேபிள்களை வெட்டிப் போட்டு அராஜகம் செததற்காக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செயப்படவேண்டுமென்று கபூர் குடும்ப வாரிசுகள் யாருக்கும் எதிராக எந்த அரசு அதிகாரியும் பரிந்துரை எழுதும் அவலம் நிகழவில்லை.


ஒரு படத்தின் ரிலீஸ் தேதி, எந்தெந்த தியேட்டரில் எத்தனை நாள் என்பதையெல்லாம் கட்டுப்படுத்தி முழு திரையுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தில் எந்தக் கபூரும் இருந்ததில்லை. திரையுலக சங்கத் தேர்தல்களில் ஜெயித்த அணியை மிரட்டி, தோற்றதாகக் கையெழுத்து போடச் சொல்லி தன் ஜால்ராக்களைப் பதவியில் உட்காரவைக்கும் வேலையை ஒரு கபூரும் செததில்லை.

கலைஞர் கருணாநிதி இப்போதெல்லாம் வசனம் எழுதும் ஒரு படம் கூட மக்கள் ஆதரவைப் பெற்று அமோகமாக ஓடுவதில்லை. ஆனால் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்துக்கு வசனத்துக்காக 50 லட்ச ரூபா சம்பளம் அவருக்கு மட்டும் தரப் படும் மர்மம், எந்தக் கபூருக்கும் புரியவே புரியாது. ராஜ்கபூரின் வசனகர்த்தா கே.ஏ.அப்பாஸ் முதல் இன்று வசூலைக்குவிக்கும் படங்களின் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி வரை யாருக்கும் இப்படிச் சம்பளம் கிடைத்ததில்லை.

பரம்பரை மிராசுதாரரான ஜி.கே வாசனின் அறிவிக்கப்பட்ட சொ த்து மதிப்பு மூன்று கோடி 78 லட்சம். எந்த சினிமாவுக்கும் கதை வசனம் எழுதி ஒரு நாளும் சம்பாதிக்காத கனிமொழியின் சொத்து எட்டுக் கோடி 56 லட்சம்; அழகிரியின் சொத்து மதிப்பு 19 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருப்பதன் மர்மங்கள் கபூர்களுக்குத் தெரியாது. கபூர்கள் முழு நேரம் நாடகமேடையில் நடிகர்களாக உழைத்து சினிமாவுக்கு வந்து ¦º¡ந்தக் காசில் ஜெயித்தவர்கள். அரசியலுக்காக சினிமாவையும், சினிமாவை ஆதிக்கம் செöய அரசியல் அதிகாரத்தையும் கலைஞரும் அவர் வாரிசுகளும் பயன்படுத்துவதால்தான் விமர்சனங்கள் எழுகின்றன. இனியும் எழும்.

இனி இந்தக் குறுக்கே நூல் போடும் விவகாரத்துக்கு வரலாம். கலைஞர் கருணாநிதியின் கணக்குப்படி தமிழகத்தில் பூணூல் போடும் பார்ப்பன சாதியினரின் எண்ணிக்கை மூன்று சதவிகிதம்தான். ஆனால் மொத்த வாக்காளர்களில் கலைஞர் கருணாநிதியை ஆதரித்து வோட்டுப் போடுபவர்கள் எப்போதும் சுமார் 25 சதவிகிதம்தான். மொத்தப் பூணூலார் மூன்று சதவிகிதம் பேரும் எதிர்த்ததாக வைத்தாலும், கருணாநிதியை விரும்பாத இதரர் 72 சதவிகிதம். மக்கள் இன்னமும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டுதான் வோட்டுப் போடுகிறார்கள். ஜாதி அடிப்படையில் மட்டுமே வோட்டுப் போட்டார்கள் என்றால் கருணாநிதியின் ஜாதியும் பூணூலார் ஜாதியும் ஏறத்தாழ ஒரே சதவிகிதம்தான். அவருக்கு 25 சத விகித ஓட்டு கூட வந்திருக்க முடியாது.

குறுக்கே நூல் போட்டவர்களை நம்பித்தான் கருணாநிதியின் மீடியா வியாபாரங்களே நடந்து வந்திருக்கின்றன. குங்குமம் பத்திரிகையைத் தொடங்கியபோது அவர் ஆசிரியராக அழைத்து வந்தது, பூணூல் போட்ட சாவியைத்தான். நிர்வாகத்தை கவனிக்க நியமித்தது, பூணூல் போட்ட டி.கே.தியாகராஜனைத்தான். பத்திரிகையின் முதல் இதழின் அட்டைப் படத்தில் கண்ணாடியில் முகம் பார்த்து பொட்டு இட்டுக் கொள்ளும் பெண்ணுக்குப் பக்கத்தில் சுவரில் தொங்கவிடப்பட்டது காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேநதிரர் படத்தைத்தான். மறைந்த முரசோலி மாறனின் நெருங்கிய நண்பரும் இன்றளவும் தி.மு.க அரசின் ஆதரவுடன் கிரிக்கெட் வாரியப் பதவியில் இருப்பவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், கலைஞரின் ஒரு பேரனுக்குப் பெண் கொடுத்த வீட்டார், வக்கீல்கள், ஆடிட்டர்கள் பலரும் குறுக்கே நூல் போட்ட பார்ட்டிகள்தான். பேரன்கள் கம்பெனியின் பெயரான சுமங்கலி என்ற வார்த்தைப் பிரயோகமே ‘அவாளு’க்குரியதுதான்.

மீண்டும் சொல்கிறேன். கலைஞர் நேரடியாக விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். முடியாவிட்டால், ஜாதியம் பேசுவது முனைமழுங்கித் துருப்பிடித்த ஆயுதம். அது உதவாது. இன்றைய புதிய வர்ணாஸ்ரமத்தில் ஆதிக்க ஜாதி,கண்ணுக்குத் தெரியாத அதிகாரப் பூணூலை அணிந்திருக்கும் புதிய பார்ப்பனரான கருணாநிதி வகையறாக்களே.
( நன்றி: கல்கி, ஓ - பக்கங்கள் )

பூணூல் பற்றி அவணி அவிட்டம் அன்று ஸ்பெஷலாக பேசிய கலைஞருக்கு நன்றி

http://idlyvadai.blogspot.com/2010/08/blog-post_29.html

No comments:

Post a Comment