பேரூர் : மத பிரசாரத்தில் ஈடுபட்ட 28 பேரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். துண்டு பிரசுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
சுண்டக்காமுத்தூர் அருகே, வேலப்ப நாயுடு வீதி உட்பட பல்வேறு பகுதிகளில், நேற்று காலை ஒரு சிலர் வீடு, வீடாகச் சென்று, மத துண்டு பிரசுரங்களை வினியோகித்துள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தைச் சேர்ந்த பலர் அங்கு திரண்டனர். இதையடுத்து, சுண்டக்காமுத்தூர் முழுக்க, ஒவ்வொரு பகுதியிலும் துண்டு பிரசுரங்களை வினியோகித்த, 15க்கும் மேற்பட்டோர், ஐயப்பன் கோவில் அருகில் உள்ள மருத்துவமனைரோடு பகுதியைச் சேர்ந்த, பாஸ்டர் சிஜூஜேக்கப் என்பவரது வீட்டுக்கு சென்றனர். சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்று, துண்டு பிரசுரம் வினியோகித்தவர்கள் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள், துண்டு பிரசுர நோட்டீஸ்களை, பாஸ்டர் வீடு முன் கொட்டி தீ வைத்து எரித்தனர். தகவலறிந்ததும், பேரூர் டி.எஸ்.பி., முத்தரசு, பேரூர் எஸ்.ஐ., பழனிசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக, கேரளா, குனியமுத்தூர், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 19 ஆண்கள், 9 பெண்கள் உட்பட 28 பேரை, பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பயன்படுத்திய பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், “நாராயணன் என்பவருக்கு சொந்தமான வீட்டை,”கேரளாவைச் சேர்ந்த பாஸ்டர் சிஜூஜேக்கப் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவரது வீட்டில் தங்கி, கேரளா உட்பட பல்வேறு பகுதியைச் சேர்ந்த 25க்கு மேற்பட்டோர், ஜெப வழிபாடு மற்றும் மத பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளது’ தெரிந்துள்ளது.
best wishes to ur work by aanmigakkadal
ReplyDelete