திண்டிவனத்தில் கைதான பாதிரியார் லோன் வாங்கி தருவதாக பலபேரிடம் மோசடிபோலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
பிரம்மதேசம், அக்.14-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பேரணி கிராமத்தை சேர்ந்த மார்கி என்கிற தருமன் மகன் ஐசக்டேனியல்(வயது 38). இவர் பேரணியில் உள்ள கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். வெளிநாட்டில் உள்ள வெள்ளைக்காரர்களிடம் இருந்து கிறிஸ்தவ சபைக்கு நிதி வருவதாகவும், ரூ.2500 கட்டினால் ரூ.1 லட்சமும், ரூ.1250 கட்டினால் ரூ.50 ஆயிரமும் லோன் வாங்கி தருவதாக பெருமுக்கல்லை அடுத்த அருங்குணம் கிராமத்து பெண்களிடம் கூறியுள்ளார். அதன்படி அந்த கிராமத்தை சேர்ந்த 26 பெண்களும் மொத்தம் ரூ.40 ஆயிரத்து 750 கட்டியுள்ளனர். ஆனால் ஐசக்டேனியல் லோன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திண்டிவனத்திற்கு வந்த ஐசக்டேனியலை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். உடனே பிரம்மதேசம் போலீசார் ஐசக்டேனியலை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டிவனம், நெய்வேலி, கும்பகோணம் உள்ளிட்ட பல ஊர்களில் பலபேரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த செய்தி கேள்விப்பட்டதும் பல்வேறு ஊர்களில் இருந்து பெண்கள் நேற்று பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
http://saintthomasfables.wordpress.com/2010/10/18/cheating-pastor-isac-daniel/
No comments:
Post a Comment