Wednesday, November 10, 2010

ராஜாவால் ரூ. 26,685 கோடி நஷ்டம், மத்திய தணிக்கைத்துறை குற்றாச்சாட்டு!

கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, மத்திய தணிக்கைத்துறை அறிக்கை மூலம் குற்றச்சாட்டியுள்ளது! அதற்கு தகுந்த முறையில் பதில் அளிக்கப் படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ராஜா நிபுணர்கள் சொல்லிய அறிவுரைகள் எதுவும் கேட்காமல், 2001ம் வருடத்தில் கூறப்பட்டுள்ள வரைமுறைப்படி 2008ல் ரூ 1651 கோடிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதால் அத்தகைய நஷடம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கைப்பேசி உபயோக விகிதம் ஆதாரம் 45 மில்லியன் என்ற கணக்கீட்டில் இருந்தது. ஆனால், அது 2008ல் 300 மில்லியனாகி விட்டது. ஆக இதன்படி பார்த்தாலே ரூ.11,012 கோடிகளுக்கு கொடுக்க வேண்டியது ரூ.1651 கோடிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது, அதாவது ரூ.9361 கோடிகள் நஷ்டம்! முதல் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில், சி.பி.ஐ சில DoT அதிகாரிகள் மற்றும் தனியார் டெலிகாம் கம்பெனிகள் சேர்ந்து லைசென்ஸ் விதிகள் முதலியவற்றை மீறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

திராவிடர்கள் தங்களது ஊழல்களை மறைப்பதேன்?

WiMax Scam – another murky deal of Indian telecom industry(Reports appeared on ‘The Pioneer’ daily on the blatant corruptions in the WiMax franchise allotment of the state owned telecom company BSNL) May 6, 2008 – The Pioneer

ராஜாவின் நண்பருடைய கம்பெனிகள்:1. WiExpert Communications,2. SV Telecom Systems,3. Digitelco Communications,4. Spectrus Communications and5. Technotial Infoways.

இந்த கம்பெனிகள் கொடுத்துள்ள விலாசங்களில் சென்ரு பார்த்தபோது, அவை வீடுகளாக இருந்தனவாம். அதுமட்டுமல்லாது அவை நவம்பர் 5, 2007 அன்றுதான் பதிவு செய்யப்பட்டதாம்!ரஹ்மான் கானின் ரூ 105 கோடி வங்கி மோசடி: இப்பொழுது, ரஹ்மான் கான் என்ற திமுக அமைச்சரின் ரூ.105 கோடி வங்கி மோசடி பற்றிய செய்திகள் வெளிவருகின்றன.

கருணாநிதியே தனக்கு ரூ. 22 கோடி சொத்துதான் உள்ளது எனும்போது, எப்படி அவருடைய நண்பருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து ஏமாறுகிறார்கள்.பெங்களுர் மர்மமும் மர்மமாகவே உள்ளது: முன்பு, சென்னை பல்கலைக் கழக வங்கிப்பணம் ஏதோ பெங்களூரில் இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு உதவ மாற்றப் பட்டது என்று செய்தி வந்துள்ளது. கருணாநிதி குடும்பத்தினர், ஏற்கெனவே அங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.

கருணாநிதியும் அடிக்கடி பெங்களூர் சென்றுதான் “ஓய்வெடுக்கிறார்”! நெப்போலியனும் சொத்துக்களை வாங்கித் தள்ளுகிறாராம்! ஏற்கெனெவே தொழிற்சாலைகள், மென்பொருள் உற்பத்தி என்றிருந்த நெப்போலியன் அமைதியாக அமைச்சராகி விட்டார்! அவரும் அசையும்-அசையாச் சொத்துகளை வாங்குவதாக செய்திகள் வர்த்தக சுற்றுப்புரங்களில் உள்ளன.

By vedaprakash

http://devapriyaji.activeboard.com/index.spark?aBID=134804&p=3&topicID=35211647


No comments:

Post a Comment