புதுதில்லி, நவ. 11-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்ட மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை உடனடியாக பதவியிலி ருந்து நீக்க வேண்டும் என்ற குரல் வியாழனன்றும் நாடா ளுமன்றத்தை முடங்கச் செய்தது.
வெள்ளியன்று பீகார், ஜார்கண்ட் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பிர பலமான சாத் திருவிழா கொண்டாட இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து எதிர்வரும் திங் களன்று மீண்டும் நாடாளு மன்றம் கூடும். மொத்தத் தில், காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் களது ஊர்வலத்தால், நாடா ளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் வாரம் எந்த அலுவலும் நடக்கா மல் முற்றிலும் முடங்கிப் போனது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசிவிட்டு சென்ற பின்னர், கடந்த செவ்வா யன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது. இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைவரி சைக் கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்ததில் இந்திய வரலாற்றில் இதுவரையி லும் இல்லாத அளவிற்கு 1.76 லட்சம் கோடி ஊழல், காமன்வெல்த் விளையாட் டுப் போட்டி ஏற்பாடுகளில் இந்தியாவையே தலைகு னியச் செய்த ஊழல்கள், கார்கில் வீரர்களுக்கு ஒதுக் கப்பட்ட வீடுகளில் ஊழல் என மன்மோகன் அரசின் ஊழல்கள், கூட்டத்தொட ரின் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தை ஸ்தம் பிக்கச் செய்தன. அவை கூடு வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், கார்கில் வீடு ஊழ லில் ஈடுபட்ட மகாராஷ் டிரா முதலமைச்சர் அசோக் சவாண் மீதும், காமன் வெல்த் ஊழல்கள் தொடர் பாக அதன் தலைவரும் காங் கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கல்மாடி மீதும் காங்கிரஸ் மேலிடம் வேறு வழியே யின்றி நடவடிக்கை எடுத்தது.
ஆனால் இந்த ஊழல் களையெல்லாம் விட மிகப் பெரும் ஊழலில் ஈடுபட் டுள்ள, இந்திய அரசின் கரு வூலத்திற்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ள, இதுதொடர்பான விபரங் கள் மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி யின் அறிக்கையால் உறுதிப் படுத்தப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மீது மன்மோகன் அரசால் நட வடிக்கை எடுக்க முடியவில்லை.
இது இரண்டாம் நாளாக வியாழனன்றும் நாடாளு மன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. எந்த அலுவலும் நடைபெற முடியாமல் மக்க ளவையையும் மாநிலங்கள வையையும் முடங்கச் செய்தது.
வியாழனன்று மக்க ளவை கூடியதும், சபாநாய கர் மீரா குமார் தனது இருக் கைக்கு வந்தார். அவர் இருக் கையில் அமர்ந்த அடுத்த நொடி, எதிர்க்கட்சி உறுப் பினர்கள் ஒட்டுமொத்த மாக எழுந்து 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் ஆ.ராசாவை உடனடியாக அமைச்சர வையிலிருந்து நீக்க வேண் டும் என்று ஆவேசத்துடன் முழக்க மிட்டனர். இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட் டுக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று தொடர் முழக்கமிட்டனர். பாஜக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதி யில் குவிந்தனர். மத்திய அர சின் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்து அரசிடம் அறிக்கை சமர்ப் பித்த பின்பும், ராசாவை பாதுகாப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதி முக உறுப்பினர்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.
இதற்கு பதில் கூற முடி யாத நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் திடீரென்று எழுந்து ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக கூச்சலிடத்துவங்கி னர். தில்லியில் வெளியாகும் இந்து நாளேடு ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பற்றி ஆர்எஸ் எஸ் தலைவர் கே.எஸ். சுதர் சன் தரக்குறைவாக கூறியது வெளியாகியுள்ளது எனக் கூறி, பாஜகவையும் ஆர்எஸ் எஸ்சையும் கண்டித்து ஜிதின் பிரசாதா, அருண் யாதவ் உள்ளிட்ட காங்கிரசின் அமைச்சர்கள் உட்பட அக் கட்சியின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கூச்சல் போட்டனர்.
இதனால் அவை களே பரமாகக் காட்சியளித்தது. இதையடுத்து 12 மணி வரை அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். மீண்டும் கூடியபோதிலும் தொடர்ந்து அமளி நிலவியதால் மக்கள வை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை
மாநிலங்களவையிலும் இதே நிலைமை நீடித்தது. அவைத்தலைவர் ஹமீது அன்சாரி இருக்கையில் அமர்ந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிக ளின் உறுப்பினர்கள், அதி முக, பாஜக உறுப்பினர்கள், அமைச்சர் ஆ.ராசாவை உடனடியாக நீக்க வேண் டும் என வலியுறுத்தி கோஷ மெழுப்பினர். தொடர்ந்து அமளி நிலவியதால், அவை கூடிய இரண்டாவது நிமி டத்திலேயே ஒத்திவைக்கப் பட்டது.
விசாரணைக்குழு அமைக்க முடியாது: அரசு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த நாடாளு மன்றக் கூட்டுக்குழு அமைக்க முடியாது என்று மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரமும், நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பவன் குமார் பன்சாலும் கூறினர். வியாழனன்று நாடாளுமன்ற ஒத்திவைப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி ஏற் கெனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதை நாடாளுமன்றத் தின் பொது கணக்குக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்பு இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவா திக்கப்பட உள்ளது. எனவே நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருவது ஏனென்று புரிய வில்லை” என்று கூறினர்.
பிரணாப் முகர்ஜியை கனிமொழி சந்தித்தார்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் ஆ.ராசா மீது நட வடிக்கை எடுக்க வேண்டாம் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேட் டுக்கொண்டதாக வியாழனன்று தில்லியில் வெளியான செய்திகள் தெரிவித்தன. அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்த கனிமொழி எம்பி, மத்திய அமைச்சரவையிலிருந்து ஆ.ராசா நீக்கப்படக்கூடாது என்று கூறியதாக அத்தகவல்கள் கூறின.
ராசா ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்: திமுக
“அமைச்சர் ஆ.ராசா ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?” என்று திமுக செய்தித் தொடர்பாளரும் மக்களவை உறுப்பினரு மான டி.கே.எஸ் இளங்கோவன் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது என்றும், அது முடியும் வரையிலும் அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சர் (ஆ.ராசா) என்னவெல்லாம் செய்தாரோ, அவை அனைத்தும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத் தால் வரையறுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே நடந்தது” என்றும் இளங்கோவன் கூறினார். http://www.theekkathir.in/index.asp
|
No comments:
Post a Comment