Sunday, January 29, 2012

இப்போது ஆந்திரா, பீகாரை சேர்ந்த திருடர்களும் இங்கு வந்துள்ளதால் செயின் பறிப்பு அதிகரித்து விட்டது ?

பயணிகளிடம் செயின் பறிப்பு தொடர்வதால் நகைகள் அணிந்து ரயிலில்
பயணம் செய்ய பெண்கள் அஞ்சுகின்றனர்.


கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள செயின் பறிப்பு பின்னணியில் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட வெளிமாநில கும்பலின் கைவரிசை உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, ஆவடி மத்திய சிறப்பு காவல் படை குடியிருப்பை சேர்ந்தவர் நிர்மல். இவரது மனைவி ஆனந்தி(31). இவர் மூன்று நாட்களுக்கு முன் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். பின்னர் திருத்தணியில் இருந்து மின்சார ரயில் மூலம் ஆவடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ரயிலில் பொதுப்பெட்டியில் ஆனந்தி அமர்ந்திருந்தார். இரவு 7 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த ரயில், நிற்பதற்காக வேகம் குறைக்கப்பட்டது. அப்போது ஒரு ஆசாமி ஆனந்தியின் செயினை பறித்துள்ளான். ஆனந்தி சத்தம் போட்டார். அதற்குள் அவன் ரயிலில் இருந்து குதித்து தப்பிவிட்டான். ஆனந்தி பறிகொடுத்த 3 சவரன் செயின் மதிப்பு 45 ஆயிரம்.

இதேபோல் 2 நாட்களுக்கு முன்பு பிரியா என்பவர், திரிசூலம் ரயில் நிலையத்தில் 5 சவரன் செயினை பறிகொடுத்தார். இப்படி கடந்த இரு மாதங்களாக ரயில் பயணிகளிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கிறது. பெரும்பாலும் அதிகாலை, இரவு நேரங்களில் செல்லும் பெண்களிடமே செயின் பறிக்கப்படுகிறது. ரயில் நிலையத்திற்கு தனியாக நடந்து வரும் பெண்களிடமிருந்தும், ரயில் வந்து நிற்கும் போது ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கும் பெண்களிடமிருந்தும் செயினை பறிக்கின்றனர்.




கடந்த மாதம் திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் ஒரே நாளில் நடந்த 2 சம்பவங்களில், பெண் காவலர் ஒருவரும் நகை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. செயின் பறித்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போல் இருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். ஆந்திரா, பீகார் என வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களே செயின் பறித்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் செயின் பறித்துக் கொண்டிருந்தவர்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பயந்து போய் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்த திருடர்களும் இங்கு வந்துள்ளதால் ரயில் நிலையங்களில் மட்டுமில்லை, பொது இடங்களிலும் செயின் பறிப்பு அதிகரித்து விட்டது. செயின் திருட்டு குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து வருவதால் கால் சவரன் தங்கம் கூட 4, 5 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அதனால் செயின் பறிப்பு திருடர்களுக்கு அதிக லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டது. ஒரே திருட்டில் ஆயிரக்கணக்கில் கிடைப்பதால் செயின் அறுப்பதில் திருடர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


திருட்டு நகைகளை வாங்க வட இந்திய ஏஜென்ட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் அடகு கடை என்ற பெயரில் ஊருக்கு ஊர் வைத்துக் கொண்டு திருட்டு நகைகளை வாங்குகின்றனர். வழக்கமாக திருடி வருபவர்களை தவிர, புதிதாக திருடுபவர்களிடம் மிரட்டியே குறைந்த விலைக்கு வாங்கி விடுவார்கள். திருட்டு நகைகள் கணிசமாக சேர்ந்ததும் வட சென்னையில் உள்ள வடமாநில வியாபாரிகளிடம் விற்கின்றனர். செயின் பறிப்பு திருடர்கள் கிடைத்தால்தான் எங்கு, யாரிடம் விற்றார்கள் என்று தெரிந்து பறிமுதல் செய்ய முடியும். அவர்கள் சிக்காத வரையில் திருட்டு நகை வாங்குபவர்களும் சிக்குவதில்லை. திருட்டு நகைகள் வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும்Õ’ என்றார்.

http://www.gnanamuthu.com/2011/07/blog-post_5058.html

No comments:

Post a Comment