Monday, January 30, 2012

பாரத நாட்டின் மாதர் குல மாணிக்கங்கள் ( GEMS OF INDIAN WOMEN)


திருமதி இந்திரா காந்தி:முதல் இந்திய பெண் பிரதமர்.தன் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசை உடைத்தவர்.மந்திரிசபையில் உள்ள ஒரே "ஆண்மகன்" என்று வர்ணிக்கபட்டவர். "எமர்ஜென்சி" கொண்டுவந்து மீண்டும் தன்னை நிலைநிருத்திகொண்டவர்.கீழ் கோர்ட் தீர்ப்புகளை சட்ட திருத்தம் மூலம் உடைக்கலாம் என்று சொல்லி கொடுத்தவர். ஊழல் ஒன்றும் புதியதல்ல உலகம் முழுவதும் உள்ளது என்று நியாயம் கற்பித்த புண்யவதி.

அதிகாரம் தன்னிடம் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசில் கோஷ்டிகளை உருவாக்கியவர்.தன்னை அடித்தவர்களை மன்னித்து அவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்த பண்பாளர்.







திருமதி சோனியா காந்தி: திருமதி இந்திரா காந்தியின் முதல் மருமகள்.இத்தாலியர். எந்தவித அரசு பொறுப்பும் இல்லை ஆனாலும் அதிகாரம் செலுத்திகொண்டிருக்கிறார். சுயமரியாதை புலி கருணா முதற்கொண்டு இவருடைய கடைக்கண் பார்வைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.இன்று காங்கிரசையும்,நாட்டையும் ஆட்டிவைத்துக் கொண்டு இருக்கும் ஒரே பெண்மணி. யாருக்கும்,எதற்கும் பதில் சொல்லுவதில்லை. எத்தனை குற்றச்சாட்டு வந்தாலும் பதில் மௌனம்.தேர்தல் பிராசாரத்தில் பேசுவதுதான், மற்றபடி அனைவருக்கும் பெப்பெப்பே.
பி ஜே பி இந்தியாவில் இவர் 'சம்பாதித்த'பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியுள்ளார் என்று குற்றம் சாட்டியபோது வருத்தப்பட்டு அத்வானிஜிக்கு கடிதம் எழுதினார்.உடனே அவருக்கு பதிலும் வந்தது.இப்பொழுது ஊழலுக்கு எதிராக பயணம் செய்த அவரும் எந்த குற்றச்சாட்டையும் யார் மீதும் சொல்லவில்லை.பொதுப்படையாக கருப்பு பணம் உள்ளது என்றெல்லாம் பிராச்சாரம் செய்துவிட்டு பயணத்தை முடித்துக் கொண்டார்.

செல்வி ஜெயலலிதா:'சோ சார்'சொல்வது போல் மிகுந்த தைரியசாலி.சட்டம்,மக்கள்,கூட்டணி கட்சி தோழர்கள்,எவரையும் மதிப்பதில்லை.இவரைவிட பல லட்சம் மடங்கு உயர்ந்தவர்களான திருவாளர்கள் வாஜ்பாய்,அத்வானி ஆகியோரை சிறுமைப் படுத்தியவர். ."நான் உத்தரவிட்டுள்ளேன்" "எனது ஆட்சியில்" என்று சொல்வது இவருடைய ஸ்பெஷாலிட்டி.முதல் முறை ஆட்சியில் அமர்ந்தபோது மக்களுடய எதிர்பார்ப்புகளை பொடிப் பொடியாக்கி ஒரு ஆட்டம் போட்டார் பாருங்கள்,தமிழகமே இவர் எப்பொழுது ஆட்சி இழப்பார் என்று பிரார்த்தனை செய்ததது.இரண்டாவது முறை அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறேன் பேர்வழி என்று பழிவாங்கினார்.காஞ்சி மடம் ஜெயேந்தர சரஸ்வதியை ஒரு பயங்கரவாதி போல் சித்தரித்து கைது செய்தார்.தனக்கென்று குடும்பம் இல்லை என்பதால் தோழியின் குடும்பம் வாழ வழி செய்துள்ளார். இப்போது மூன்றாவது முறை முதல் மந்திரி.வந்தவுடன் அதை இடிக்கிறேன் இதை இடிக்கிறேன் என்று கடப்பாரையும் கையுமாக அலைகிறார்.

மம்தா பானர்ஜி: மே.வங்க முதல்வர். என்.டி.ஏ அரசில் ரயில்வே துறை மந்திரியாக பதவி வகித்து தனக்கென்று எந்த திறமையும் இல்லை என்று நிரூபித்த புண்ணியவதி.மற்ற பெண்மணிகள் 'அம்மா' என்றால் இவர் 'அக்கா'.எப்பொழுது பார்த்தாலும் 'காச் மூச்' என்று கத்துவார். மே.வங்க கம்யூனிஸ்ட் அரசை போகவைக்க வேண்டுமென்று 'நக்ஸ்லையிட்' ஆதரவு நிலை எடுத்து இப்பொழுது அவர்களால் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார். இவருடைய கட்சிக்காரர்கள் அரசு மருத்துவ மனை அருகில் வெடி வெடித்து அராஜகம் செய்தனர்.காவல் துறை கைது செய்தது. உடனே இவரே,ஆம் முதல்வரான இவரே, நேரே காவல்நிலையம் சென்று வழக்கம் போல் 'காச் மூச்' என்று கத்தி கலாட்டா செய்து அவர்களை விடுவித்தார்.சீறும் வங்க பெண் புலி அல்லவா அதனால்தான் அப்படி செய்தார் போலும்.அடடா என்ன ஒரு பண்பு
பாவம் மே வங்க மக்கள்.



செல்வி மாயாவதி: முதன் முறை முதல்வர் ஆனபோது ஊழலில் கை தேர்ந்தவர்களே நோகும் அளவிற்கு கொள்ளை.இப்பொழுது கோடிகணக்கான பணத்தை கொட்டி உ.பி முழுவதும் சிலை வைத்துள்ளார்.யாருக்கு? தனக்கும் தன் தலைவருக்கும் மட்டும்.தலித் மக்களின் தலைவராக போற்றபட்டவர் இன்று ஏழை எளிய மக்களை சுரண்டி சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
மீண்டும் முதல்வராக ஆகவேண்டும் என்பதற்காக உ.பி மாநிலத்தை துண்டு துண்டாக வெட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி 'வடக்கு தெலுங்கானா' உருவாக வழி செய்துள்ளார்.



திருமதி சுஷ்மா ஸ்வராஜ்: பாரளுமன்ற எதிர் கட்சி தலைவர்.'ட்விட்டரில்' தனது கட்சி முடிவுகளை விமர்சிப்பார்.இரும்பு தாது சுரண்டி கோடி கோடியாக கொள்ளை அடித்துள்ள ரெட்டி பிரதர்ஸ் இவரது ஆதரவாளர்கள். அவர்களை கண்டிக்கவும் இல்லை,விமர்சிக்கவும் இல்லை. காந்தி சமாதிக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கிறேன் பேர்வழி என்று நடனம் ஆடியவர். ஏன் இப்படி என்று கேட்டதிற்கு இசை இசைத்தால் ஆடாமல் என்ன செய்வது என்று பதில் அளித்தார்.மத்திய மந்திரியாக இருந்த பொழுது அவர் வகித்த துறைகளில் பெரிய மாற்றம் எதுவும் செய்யவில்லை.சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுக்கவும் இல்லை.இருந்தாலும் மனதில் பிரதமர் ஆசை உள்ளது.


இந்த பெண்மணிகளின் துணையோடு அடுத்த பாரத அரசு அமைந்தால்?

No comments:

Post a Comment