Thursday, February 16, 2012

மின்வெட்டைக் கண்டித்து பிப்ரவரி 24-ல் லாந்தர் விளக்குகளுடன் ஆர்ப்பாட்டம்:

பொன். ராதாகிருஷ்ணன்

First Published : 17 Feb 2012 02:46:13 AM IST


சென்னை. பிப். 16: மின்வெட்டைக் கண்டித்து பிப்ரவரி 24-ல் லாந்தர் - அரிக்கேன் விளக்குகளுடன் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், திமுக ஆட்சியில் 6 மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 8 மணி நேரமாக அதிகரித்துள்ளது. பல மணி நேர மின்வெட்டினால் விவசாயமும், சிறு, குறுந் தொழிற்சாலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை அமல்படுத்தும் அரசு, வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கி வருகிறது.தொழிற்சாலைகள் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆனால், இது பற்றி அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடுபவர்களுக்கு இதுவரை தமிழக அரசு சிறு எச்சரிக்கை கூட விடுக்கவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. அணுமின் நிலையம் இயங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.மின்வெட்டைக் கண்டித்து பிப்ரவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் லாந்தர் - அரிக்கேன் விளக்குகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆண்டுக்கு 9.2 லட்சம் லேப்-டாப் வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 லட்சம் லேப்-டாப்கள் மட்டுமே வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது மாணவர்களை ஏமாற்றும் செயலாக்

பள்ளிக்கூடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நல்ல பண்புகளை வளர்க்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்கியுள்ளது. இதனைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக 5 -வது மாநில மாநாடு ஏப்ரல் 28, 29 தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ளது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=

No comments:

Post a Comment