Sunday, August 22, 2010

Vinayagar Temple in Kumari Dist - A Story told by Ghost

வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை உடலுடன் எடுத்த படி சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள். அந்த கதை முடிந்ததும் நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு பதில் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் உன் தலையை சுக்கல் நூறாக சிதறடிப்பேன்.”.என்று சொல்லி ஆரம்பித்தது.

vikram_and_vetal

புண்ணியமிக்க பாரத தேசத்தின் தட்சிண பகுதியின் இறுதியிலே கன்னியாகுமரி மாவட்டம் என்றொரு மாவட்டமுண்டு. அங்கு இறைச்சகுளம் என்றொரு கிராமம் உண்டு. அந்த கிராமத்திலே ஒரு மலைக்குன்று உண்டு. அதிலே தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னாலே அரசாங்கம் நிலம் பட்டா போட்டு கொடுத்து இந்திரா காலனி என்றொரு குடியிருப்பை உண்டாக்கியதுண்டு. அந்த குடியிருப்பிலே 85 இந்துக்குடும்பங்கள் இருந்துவந்தனர். இரண்டே இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள்.

அப்போது அந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இந்து மக்கள் அனைவருமாக தமக்கு சாமி கும்பிட ஒரு சின்ன பிள்ளையாரை அங்கு பிரதிஷ்டை செய்தனர். இதனை அந்த இரண்டு கிறிஸ்தவ குடும்பத்தாரும் எதிர்த்து அருகே இருக்கக் கூடிய பூதப்பாண்டி என்கிற கிராமத்திலே புகார் அளித்தனர். இதை அறிந்த எண்பத்தைந்து இந்து குடும்பங்களும் தாசில்தாரிடம் சென்று நிலைமையை விளக்கி கூறினர். தாசில்தாரும் தாம் வந்து மக்களுக்கு ஆவன் செய்து அங்கு கோவில் கட்ட ஏற்பாடு செய்வதாகச் சொல்லி சென்றார். இதனை நம்பி மக்கள் தாசில்தார் ஆபீசிலிருந்து கிராமத்துக்கு வந்தனர். அந்த மக்கள் இரவும் பகலுமாக தம் குட்டி பிள்ளையாரை பாதுகாத்தனர். அந்த ஊர் தாய்மார்கள் கர்ப்பிணி சகோதரிகள் உட்பட இரவு பிள்ளையார் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று தெருவில் படுத்து பிள்ளையாரை பாதுகாத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் அந்த பெண்களை தாக்க ஆரம்பித்தனர். கற்களை எறிந்து கை கால்களை உடைத்தனர். ஒரு நாள் தாசில்தார் போலீஸ் பட்டாளத்துடன் இறங்கினார், அங்குள்ள மக்களைக் கதற கதற அடித்து அந்த பிள்ளையார் சிலையை உடைத்து எறிந்தார், பெண்களை காவல்துறையினர் தரக்குறைவாக பேசினர். கிறிஸ்தவர்களோ இந்துக்களின் தாழ்த்தப்பட்ட சாதியை சொல்லித் திட்டினர்.

அந்த ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகுதான் அவர்களுக்கு புரிந்தது தாசில்தார் கிறிஸ்தவர் என்பதால் கடமையை விட அவருக்கு அவரது மதம்தான் முக்கியம் என்று. அவர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்திருந்த பஞ்சாயத்து தலைவி, திமுக அமைச்சர், அஇஅதிமுக மாஜி அமைச்சர் என அனைவரையும் அழைத்தனர். எவருமே கண்டு கொள்ளவில்லை. அவர்கள் கிராமத்துக்கு தொலைவே புத்தேரி என்றொரு கிராமம் உண்டு. அதன் பஞ்சாயத்து தலைவரான மாரி முத்து என்பவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் அவர் உதவுவார் என கேள்விப்பட்டு அவர்கள் அவருக்கு தொலைபேசினர். அவர் உடனே கட்சி காரர்களுடன் அங்கு வந்தார், இன்றைக்கு மூன்றாவது நாளாக தங்கள் உரிமைக்காக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கையில் அவர்களுக்கு இன்று வேறெந்த அரசியல் கட்சியும் ஆதரவளிக்கவில்லை. அரசு அதிகாரிகள் கடமையை விட மதத்தை முக்கியமாக நினைத்தனர். எனவே அவர்கள் இப்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இது யூடியூபில் வீடியோவாக இருக்கிறது:

பாகம் 1:

பாகம் 2:

இவ்வாறு சொன்ன வேதாளம் கதையை நிறுத்தி மன்னனை பார்த்து கேட்டது -

“மன்னா இதில் இந்திரா காலனி மக்கள் செய்த தவறு என்ன? இரண்டு கிறிஸ்தவர்கள் வாழும் போது அவர்களுக்கு பிடிக்காத பிள்ளையாரை கும்பிடத் துணிந்தது தவறா? கிறிஸ்தவர்களின் அரசியல் பலம் பண பலம் ஆகியவற்றை அறியாமல் பிள்ளையாரை கும்பிடத் துணிந்தது தவறா? தாசில்தாரை நம்பியது தவறா? சத்தியாகிரகத்தையும் அகிம்சையையும் நம்பி தங்கள் உரிமைக்காக போராட்டத்தில் இறங்கியது தவறா? எது அவர்கள் செய்த தவறு? இந்த கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலையை சுக்கு நூறாக சிதறடிப்பேன் என்று சொன்னது.”

அதற்கு விக்கிரமன், “வேதாளமே! இந்திரா காலனி மக்கள் செய்த தவறு என்னவென்றால் கிறிஸ்தவர்களும் இந்துக்களாகிய தங்களைப் போல பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்பியதும், ஒரு கிறிஸ்தவ அதிகாரிக்கு தனது மதத்தைவிட கடமையில் பற்று இருக்கும் என நம்பியதும், எல்லாவற்றுக்கும் மேலாக மதச்சார்பின்மை பேசும் அரசியல்வியாதிகள் உண்மையிலேயே மதச்சார்பற்றவர்கள் என நம்பி அவர்களுக்கு வாக்களித்ததும்தான். இனியாவது இந்துக்கள் இந்த நிலைகளைக் கண்டு பாடம் கற்றும் சமூக ரீதியிலும் அரசியியல் ரீதியிலும் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் விழிப்புணர்வும் பெற வேண்டும்.” என்று கூறினான்.

அவனது சரியான பதிலால் அவன் மௌனம் கலையவே வேதாளம் மீண்டும் முருங்கைமரம் சென்றது.

Source: http://www.tamilhindu.com/2009/09/vethalam-story-kanyakumari/

No comments:

Post a Comment