Sunday, February 19, 2012

வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவல்: காங்கிரஸ்-மார்க்ஸீயக் கூட்டு சதி!

முஸ்லீம்கள் இந்தியாவில் நுழைவது – அரசியக் கட்சிகள் உதவி செய்வது: சமீபகாலத்தில் மேற்கு வங்காளத்தில் மார்க்ஸீய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் (சோனியா), திரணமூல் காங்கிரஸ் முதலியவை முஸ்லீம்கள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து ஆதரித்து வருகிறார்கள். அந்த கட்சிகள் ஒருவரையொருவர் மீது சொல்லிக்கொள்ளும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் மூலமே அத்தகைய சதி வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அவை அவ்வாறு இல்லை என்று மறுக்கவில்லை. மாறாக மற்றவர் மீது குற்றாஞ்ச்சாட்டுகிறது, ஏனெனில், தேர்தல் வருவதால், யார் அளவிற்கு அதிகமாக அவர்களுக்கு ஆதரவாக உள்ளார்கள் என்று காண்பிக்த்துக் கொள்ள போட்டிப்போட்டுக் கொண்டு உழைக்கின்றனர், தங்களது விசிவாசத்தைக் காண்பித்துக் கொள்கின்றனர். மேலும் பாகிஸ்தானில் அச்சிடப்படும் போலி இந்திய பணத்தை / கள்ள நோட்டுகளை இந்தியாவில் பரப்பும் வேலையினையும் இவர்கள் செய்து வருகின்றனர். சென்ற வருடத்தில் பெங்களூரில் அத்தகையோர் பலர் பிடிபட்டுள்ளனர்[1].

உள்ளே நுழையும் முஸ்லீம்களுக்கு அடையாள அட்டைக் கொடுத்து ஓட்டுவங்கியை உண்டாக்கிப் பலப்படுத்துவது: தினமும் பங்களாதேசத்திலிருந்து, இந்தியாவிற்கு வந்து வேலைசெய்துவிட்டுச் செல்ல பாஸ் அளிக்கப் படுகிறது. ஆனால், பெரும்பாலான உள்ளே நுழையும் முஸ்லீம்கள் அப்படியே தங்கிவிடுகின்றனர். பிறகு அவர்களுக்கு ரேஷன்கார்ட், தேர்தல் அடையாள அட்டை முதலியவைக் கொடுக்கப்பட்டு, சட்டரீதியில் உள்ளே நுழைந்தவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் பாதுகாக்கப் படுகின்றனர். பதிலுக்கு எல்லா மாநில அரசு, போலீஸ், செக்போஸ்ட் அதிகாரிகள் என எல்லோருமே நன்றாக கவனிக்கப் படுகின்றனர். அரசியல்வாதிகளுக்கு மொத்தமாக ஓட்டுக் கிடைக்கிறது[2]. இதே மாதிரித்தான் இப்பொழுது தென்னிந்தியாவிலும் நுழைய ஆரம்பித்துள்ளது தெரிகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் எல்லைப்புற மாகாணங்களில் முஸ்லீம்களின் ஜனத்தொகை கனிசமாக உயர்ந்துள்ளதையும் கவனிக்கலாம்[3]. இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது[4]. முன்பு தீவிரவாதி உருவன் பங்களாதேச எல்லையில் அகப்பட்டதும் நினைவுகூரத்தக்கது[5].

முஸ்லீம் ஓட்டுவங்கி வளரும் விதம் (ஆகஸ்ட் 2008)[6]: பிறகு, உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ரேஷன்கார்ட் முதல் வாக்காளர் அட்டைவரை வங்கிவிடுகின்றனர். அதாவது, இந்திய பிரஜைகளாகிவிடுகின்றனர். புகாரின் அடிப்படையில், கேந்திரபாரவில், துணை கலெக்டர் முரளிதர மாலிக் என்பவர் ஆணையில் கடந்த சென்ஸஸ் போது, சோதனையிட்டபோது, 30,000 பங்களாதேச மக்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு, அவை நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

ஜகசிங்கபூர் கடற்கரைப்பகுதிகளில் பங்களாதேஷ வாக்காளர்எண்ணிக்கை உயருகிறது (மார்ச் 2009)[7]: 2004ல் இந்தியக் கொடியை எரித்த முஸ்லீம்களை எப்படி அரசியல்வாதிகள் ரேஷன்கார்ட், வாக்காளர் அடையாள அட்டைக் ஒடுத்து வளர்க்கிறார்கள் என்று பார்த்தால், மேற்கு வங்காளத்தில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் வளர்த்தனரோ, அதே மாதிரியான வழியை ஒரிஸாவிலும் பின்பற்றியூள்ளனர் என்று தெரிகிறது. ஒரிஸாவில் அளவிற்கு அதிகமாக போய்விட்டதால், அது வெளிப்பட்டுவிட்டது. தலைக்கு ஆயிரம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு, இரண்டு இடங்களில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்தபோது, உள்ளூர் மக்களே புகார் கொடுத்ததால், வசமாக மாட்டிக் கொண்டனர். உண்மை வெளிவந்து விட்டது.

பெங்களூரில் எட்டு பங்களாதேச முஸ்லீம்கள் கைது (ஜனவரி 2011): பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த ரபிமுல்லா, மொய்னா என்ற இருவரை, பெங்களூரு தேவர்ஜீவனஹள்ளியில் போலீசார் கைது செய்தனர்[8]. இவர்களுடன் மேலும் எட்டு பேர் அத்துமீறி இந்தியாவிற்குள் வந்துள்ளனர் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் எதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளனர்; அவர்களின் திட்டம் என்ன என்பது குறித்து போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வேதபிரகாஷ்

http://islamindia.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

1 comment:

  1. முஸ்லிம்களாக மதம் மாரும் ஹிந்துக்கலை பங்ளாதேஷ் ஊடுருவிகல் என்ரு கூறீ திசை திருப்பும் பார்பன சதி இந்தியாவில் எடுபடாது.

    ReplyDelete