
இல்லாததைப் பற்றி பெருமையடிப்பதில் மனிதனுக்கு ஒரு தனி சுகம். மதம், ஜாதி என்பவைகள் இல்லாத ஒன்றை, இருக்கின்றது என்றுச் சொல்லி, மனிதர்களுக்கு அதன் முலம் மனக்கோட்டை கட்டி பெருமைப்பட்டு சுய இன்ப சந்தோஷப்படுவதற்கு வகைச்செய்கிறது.
பெருந்தலைவர்  காமராஜரை, நாடார் சங்கத் தலைவராக உருமாற்றிய பெருமைக்கு சொந்தக்காரரான ஒரு  “அண்ணாச்சி”யை சந்திக்க நேர்ந்தது. சந்திப்பின் போது அவரின்,  அத்தருணத்தின், அவரின் ஜாதி பெருமை “மீட்டார்” பற்றி வினவியபோது “கருணாநிதி  நம்மாளு” என்று அவரின் “பெருமை” சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு  ஆச்சரியமுட்டினார். அதனால் அந்த பெருமையின் வேரை தேடி ஒடவேண்டிய நிலை  ஏற்ப்பட்டது. 
விஷயம்  இதுதான். சி.பி.ஐ கனிமொழி மீது கூடுதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்ததை  பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டபோது, கருணாநிதி இப்படிப் போட்டு  தாக்கினார்  - கனிமொழி நாடார் ஜாதியை சேர்ந்தவர். மாலைமுரசு, மாலை மலர்  போன்ற பத்திரிக்கைகளின் முதலாளிகள் நாடார் ஜாதியை சேர்ந்தவர்கள்  அவ்வாறிருக்கையில் நாடார் ஜாதியை சேர்ந்த கனிமொழியை நாடார் முதலாளிகள்  இழிவுப்படுத்துவது நியாயமா??????
மேற்கூறிய  சாரம்சத்தை வைத்து கருணாநிதி தன்னுடைய “இன”த்தை சார்ந்தவர் என்று  அண்ணாச்சி புரிந்துக்கொண்டு சந்தோஷமடைந்து பெருமைபட்டுள்ளார்.  கருணாநிதியின் வசனம் சிறுவசனமாக இருந்தாலும் அது பெரிய வஷயங்களை நமக்கு  உணர்த்துகின்றது.
கருணாநிதி  இசை வேளாளர் ஜாதியை சேர்ந்தவர் என்பதை அவரே பலமுறை உணர்த்தியுள்ளார்.  ஆனால் சிலரோ அவரை தெலுங்கர் என்கிறார்கள். அதனால் கருணாநிதி முலம் கனிமொழி  நாடாராக வாய்பில்லை. அவரின் தாயார் இராஜாத்தியம்மாள் முலம் தான் நாடாராக  ஆகியிருக்க முடியும்.
நம்  நாட்டில் ஜாதி அடிப்படிடையில் நடக்க வேண்டிய காரயங்களில் தலையாய அவிழ்க்க  வேண்டிய முடிச்சு, பிரச்சனை, கலப்புத் திருமணத்தின் முலம் பிறக்கும்  குழந்தைகளை எந்த ஜாதியில் சேர்ப்பது என்பது இந்த விஷயத்தில் அரசாங்கம்  தங்கள் கடமைகளை ஆற்றாமல் மௌனசாமிகளாக இருந்த காரணத்தினால் நீதிமன்றங்கள்  தலையிடவேண்டிய நிலை ஏற்பட்டது.
நமது  உச்ச நீதிமன்ற இந்த விஷயத்தில் என்னச் சொல்லுகின்றது என்றால் கலப்பு  திருமணத்தின் முலம் பிறந்த குழந்தைகளை எந்தச் சாதி முறையில்  வளர்க்கப்பட்டதோ, அந்தச் சாதியை சார்ந்ததாக கருதப்படும். ஜாதி சான்றிதழ்  பற்றி விசாரிக்க, அளிக்க மாவட்ட கமிட்டி, மாநில கமிட்டி விசாரணை கமிட்டி  என்ற பல வழிமுறைகளை அறிவித்துள்ளது. நீதிமன்றம் தீர்ப்புகளின் எளிதாக்கம்  தான் மேற்சொன்னது. ஆனால் அதில் பல சிக்கலான விஷயங்கள் இருக்கின்றன.
இதன்முலம்  அறிவது ராஜாத்தியம்மாள் முறையில் தான் கனிமொழி வளர்க்கபட்டாள். அப்பாவழி,  அதுவும் திராவிட வழியில் வளர்க்கப்படவில்லை. அதனால் கனிமொழிக்கு அப்பாவின்  தந்திரம் போதாமல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார்.  ஆனாலும் அப்பாவைப் பார்த்துதான் பின்பற்றிதான் வளர்ந்ததாக கனிமொழி  கூறுகின்றார். திராவிடம், அண்ணா, பெரியார் வழியில் கனிமொழியை கருணாநிதி  வளர்க்கவில்லை என உறுதியாக தெரிகிறது. கருணாநிதிக்கு தனது அரசியல்  சாணக்கியததன விளையாட்டில். ஜாதியும் ஒரு அங்கம்.
கருணாநிதியின்  கூற்றுப்படிப் பார்த்தால் ஒவ்வொரு குற்றவாளிக்கும் அவரவர் ஜாதி மக்கள்  அவரை குற்றமற்றவர் என நம்பி அவருக்கு  ஆதரவு அளிக்கவேண்டும், மற்ற  ஜாதியினர் அவரை குற்றபுரிந்தவர் என நம்பி எதிர்க்கவேண்டும் ஜாதி  படுத்தும்பாடு இருக்கே…….. சே……. வருத்தம் என்னவென்றால் தமிழினத்தின்  ஒப்பற்ற தலைவன், அப்பழுக்கற்ற ஊழலற்ற அரசியல்வாதி, தப்பே செய்யாத குடிமகன்.  தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒப்பற்ற நாயகன், சோழ, சேர, பாண்டிய  வம்ச மன்னர்கள் போல் கருணாநிதி வம்சம் என்று உருவாக்கிய ஒப்பற்ற மனிதன்,  தன் வாழ்நாளில் நான்கு முறை சீறிய முறையில் தமிழினத்திற்கு முதலமைச்சர்  என்ற முறையில் தொண்டு செய்தும் ஜாதியை தமிழினத்திலிருந்து ஒழிக்க  முடியவில்லை.
தன்  மகள் தனித்துவிடபட்டுவிட்டார் என்ற எண்ணத்தில் அவளுக்கு ஒரு குழுவுடன்  ஐக்கியப்படுத்தினால் பாதுகாப்பு இருக்கும் என்ற பொய்யான எண்ணம் ஏற்பட,  கனிமொழி விஷயத்தில் ஜாதியை கருணாநிதி கையாண்டாரோ என தோன்றுகிறது.
கருணாநிதி  தமிழ் இன தலைவராக இருப்பதாலும், திராவிட கொள்கையின் கிடங்காக  இருப்பதாலும், பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு “கனிமொழி ஒரு தமிழர், மாலை  முரசு மற்றும் மலர் பத்திரிக்கை முதலாளிகள் தமிழர்கள், ஒரு தமிழரை  தமிழர்கள் அவதூறுச் செய்யலாமா என்று, மட்டையை அடித்திருந்தால், அவர்  பின்பற்றும் ஆரிய திராவிட கொள்கைக்கு பொருந்தியிருக்கும். என்னச் செய்வது  புத்திரி பாசம் ஒரு இனத் தலைவனை என்னவெல்லோமோ பேசச் செய்கிறது.
ஜாதியின் தரத்திரம் ஆடும் ஆட்டம்தான் என்ன…
http://narenpaarvai.blogspot.in/2011/10/blog-post.html
No comments:
Post a Comment