Thursday, July 15, 2010

Vande Mataram

வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!


இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரம்பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வந்தே மாதரம்: மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்

உலகின் ஒளியாக, ஞானமும், செல்வ வளங்களும் நீதியும் நிறைந்தவளாக பாரத மாதாவை சித்தரிக்கும் ஓவியம். இதனை வரைந்தவர் மகாகவி தாகூரின் சகோதரரும் பெரும் கலைஞருமான அவனீந்திரநாதத் தாகூர்.

வந்தே மாதரத்திற்கு எதிரான முஸ்லிம் உலமா நிறுவனம்

செப்டம்பர் 2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டின்போது, தியோபாண்டைச் சேர்ந்த ”தருல் உலூம்” (Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய “ஜமாத் உலமா-இ-ஹிந்த்” (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அமைப்பின் அழைப்பின் பேரில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் ஜன்மஸ்தானத்தின் மீது இருந்த பிரச்சனைக்குறிய கட்டிடம் பதினேழு வருடங்களுக்கு முன்னால் இடிக்கப் பட்டடதைக் கண்டித்துப் பேசினார். அந்தப் பிரச்சனைக்குறிய கட்டிடம் சும்மா கிடந்திருந்தாலும், அங்கே தொழுகைகள் எதுவும் நடக்காதிருந்தாலும், போலி மதச்சார்பின்மை பேசும் பொய்யர்கள் அதை “மசூதி“ என்றே கூறிவந்தனர். அதே பொய்யை மீண்டும் கூறிய சிதமபரம், அக்கட்டிடம் இடிக்கப் பட்டதை, “தீவிர துவேஷத்துடன் கூடிய மத வெறிச் செயல்“ என்று வர்ணித்துள்ளார்.

chidambaramஃபிப்ரவரி 2008-ல் பயங்கரவாதத்திற்கு எதிராக கட்டளை இட்ட இதே ‘தருல் உலூம்’ அமைப்பைப் பாராட்டிப் பேசிய சிதம்பரம் அதற்குப் பின்னால் நடந்த ஜெய்பூர், பெங்களூரு, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க (வேண்டுமென்றே) தவறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தருல் உலூம் அமைப்பின் கட்டளை “தகியா“ (Taqiya) என்கிற ”இஸ்லாத்திற்காக நடத்தப்படும் நாடகம்” (Telling lies for the sake of Islam) என்பதை, அக்கட்டளைக்குப் பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளான “ஜிகாத்“ போராட்டங்கள் நிரூபித்தாலும், அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவ்வமைப்பின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் சிதம்பரம். ஜமாத்-இ-ஹிந்த் அமைப்பு தன் பங்கிற்கு, தற்கொலைப் படையினர் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதை “மன்னிக்க முடியாத பாவச் செயல்“ என்று வன்மையாகக் கண்டித்தாலும், “ஜிகாத்“ என்பதை “உபயோகமுள்ள செயல்பாடு“ (constructive phenomenon) என்று வர்ணிக்கத் தயங்கவுமில்லை, தவறவுமில்லை. அதே சமயத்தில் “ஜிகாத்“ எந்த விதத்தில் உபயோகமுள்ள செயல்பாடாக இருக்கின்றது என்பதை அவ்வமைப்பு விளக்கவுமில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து ‘ஜிகாத்’ செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் இறக்கமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப் படுவதையும், ‘தகியா’ செயல் பாடுகளால் மக்கள் ஏமாற்றப் படுவதையும், இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், வரும் நாட்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படுவது, பொதுவாக அரசாங்கத்தின் பொறுப்பாகவும், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கடமையாகவும் இருக்கின்றது. இந்தக் கடமையை உணர்ந்து சிதம்பரம் செயல்படுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே தற்போது வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளையை உறுதி செய்துள்ள செயல், இந்தியாவை ”தருல் இஸ்லாமாக” (இஸ்லாமிய தேசம் – Darul-Islam) மாற்றுவதற்கான ‘ஜிகாத்’ மற்றும் ‘தகியா’ ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்பதால், அத்தீர்மானத்தை நேர்மையான முறையில் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத் சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று சிதம்பரம் கூறினாலும், அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனைக்குறிய கட்டிடத்தை ‘மசூதி‘ என்று பொய் சொல்வதற்கும், அது இடிக்கப்பட்டதை ‘மதவெறிச் செயல்‘ என்று வர்ணிப்பதற்கும் இருந்த தைரியம், தேசியப் பாடல் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைக் கண்டிப்பதற்கு அவரிடம் இல்லை.

1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலை தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்க பயன்படுத்தப்பட்ட நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின் “போலி மதச்சார்பின்மை“ மற்றும் “சிறுபான்மையினருக்கு காவடி தூக்கல்“ ஆகிய கொள்கைகளின் வெளிப்பாடு, சிதம்பரம் அவர்களின் பேச்சிலும், செயல்பாடுகளிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

indian-national-flagவந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: - ஸ்ரீ பங்கிம் சந்திர சாட்டர்ஜீ (1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ’வந்தே மாதரம்’ பாடலை எழுதி ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய ‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: - கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்சியாகும் அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: - ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில் நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: - கர்சன் பிரபுவின் ’வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர் 1905) மற்றும் ’சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது ’வந்தே மாதரம்’ பாடல்.
ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில், ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்ற போது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கிய படியே உயிர் நீத்தார்.

1906: - ’பஞ்சாப சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் “பரிசல் பரிஷத்” துவக்கப்பட்டு வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர். அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த மாநாடு பாதியிலே நின்று போனது.
ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ’வந்தே மாதரம்’ தினசரியைத் துவக்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது.

1907: - ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905-ல் வடிவமைத்த அம்மூவர்ணக் கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ’வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: - ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில் தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: - லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில் இருபத்தியாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார். வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: - ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: - வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: - தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச் சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’ சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ’தடங்கல்‘ போன்று அவர்களால் பார்க்கப் பட்டது. அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக “ஜன கன மன” இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் முகம்மது இக்பாலின் “சாரே ஜஹான் ஸே அச்சா” வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு இணைப்பு தேசிய கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல் நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப் பட்ட பாடலை, அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், ந்ம்முடைய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாக இச்சபை அங்கீகரிக்கிறது. இது அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று உறுதியிட்டு கூறினார். அரசியல் நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின் திரு.சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையை சேர்ந்த திரு தங்க காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, ருமதி.பத்மா சுந்தரம் அவர்களின் ’என்னபடம் எஜுகேஷனல் பப்லிஷர்ஸ்’ (Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள “வந்தேமாதரம் ஆல்பம்” (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து. இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான வார்த்தைகளை விளக்கி திரு கே.தேஜேந்த்ரகுமார் மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.

நேருவின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக ஆனதால், ’வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம் அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில், நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்கு காவடி தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள் இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரி சமமாக அவர்களை எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம்.

bharat_mata_tshirtசுதந்திரம் பெற்ற பின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் “தேசியம்” (Nationalism) குறைந்து “மதச்சார்பின்மை” (Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டு பெரும்பான்மை சமுதாயம் இரண்டாம் தரக் குடிமக்களாக அவர்களின் சொந்த மண்ணிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குக் காவடி தூக்கி, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி, ஆகிய கொள்கைகளை கையாண்டு சமூகத்தைக் கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம் ”வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்து போனது. ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது. வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன - வும் தன்னுடைய தேசிய கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்க காரணமாக பல மாநிலங்கள் தங்களின் சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக “தமிழ்தாய் வாழ்த்து” அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில் கூட இசைக்கப் படுவது நின்று போனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும், எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது என்பதில் ஐயமில்லை. இதே போன்று தான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியது தான் கொடுமையிலும் கொடுமை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசப்பற்றும்

lalu-insults-national-anthemசில வருடங்களுக்கு முன்னால் பிஹார் மாநிலத்தில் ஒரு அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமானப் படுத்திய லாலு பிரசாத் யாதவ் சென்ற ஐ.மு.கூ. அரசில் ரயில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியப் பாட நூல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளிக்கொணர்ந்த பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை மனநிலை சரியில்லாதவர் என்றும் பால கங்காதிரத் திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரைத் தீவிரவாதிகள் என்றும் கூறப்பட்டிருந்தது.

2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றண்டு விழா கேவலமான முறையில் கொண்டாடப்பட்டது. தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைக் கட்டாயமாக நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய அர்ஜுன் சிங், முஸ்லிம் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஏனொ தானோ என்று கொண்டாடிய வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பங்கு பெறாமல் வந்தே மாதரத்தை அவமதித்தனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல, அவ்விழாவைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் 122-வது தின விழாவில், சோனியா மேடைக்கு நடந்து வரும் வரை, ஏதோ வந்தே மாதரம் அவரைப் போற்றித் தான் பாடப்பட்டுள்ளதைப் போன்று, நேரு குடும்பத்தின் தொண்டர்கள் (காங்கிரச் கட்சியினர்) தங்கள் தன்மானமற்ற அடிமைத்தனத்தை அறுவறுக்கத்தக்க விதத்தில் காட்சிப் பொருளாக ஆக்கும் விதமாக, வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.

2005-ல் உப்பு சத்தியாகிரகத்தின் ஆண்டு விழாவை அனுசரிப்பதாகக் கூறிக்கொண்டு, சோனியாவும் அவரின் பரிவாரத்தினரும் காந்திஜியின் தண்டி யாத்திரையை கொச்சைப் படுத்தினர். 2006-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்ற ஊரில் நடந்த அரசு விழாவில் சோனியா, மன்மோகன் மற்றும் காங்கிரஸ் பரிவாரத்தினர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே விழா மேடையை விட்டு வெளியேறினர்.

’தேசிய வளர்ச்சி மையம்’ அனுமதியளித்த 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தது ஐ.மு.கூ அரசு. அந்தத் திட்ட அறிக்கை “மதரஸாகளும் / மக்தப்களும்” (Madarasas / Maktabs) என்ற தலைப்பின் கீழ், “சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களைக் கொண்டாடுவதற்கு மதரஸாக்களுக்குச் ’சிறப்பு நிதி’ அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தது. வந்தே மாதரம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் யாரும் அந்தப் பாடலைப் பாடக்கூடாது என்று தருல் உலூம் கட்டளையிட்ட பிறகு காங்கிரஸ் அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டது தான் முரணானது. மதரஸா போன்ற மத நிறுவனங்கள், மதச் சுதந்திரம், சிறுபான்மையர் உரிமை, போன்ற சலுகைகளை அனுபவிக்கும் அதே நேரத்தில் தேசிய விழாக்களைப் புறக்கணிப்பது, தேசியக் கொடியை ஏற்றாமல் இருப்பது, வந்தே மாதரம் பாட மறுப்பது போன்ற செயல்களில் இறங்குவது கண்டிக்கத் தக்கது. மேலும் இந்த மாதிரியான தேசிய நீரோட்டத்தில் சேராத மதவெறியைத் தூண்டும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்நாட்களில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஐ.மு.கூ அரசாங்கம் இந்த மாதிரியான நிறுவனங்களை இழுத்து மூடாமல், அல்லது அந்த நிறுவனங்களை கையகப் படுத்திக் கொண்டு அவற்றை தேசிய நீரோட்டத்தில் சேர்க்காமல், அதற்குப் பதிலாக, அரசியல் சட்டத்தின் படி இன்றியமையாத கடமையான தேசிய விழாக்களைக் கொண்டாட அவைகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கியளிப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. தேசியக் கொடியை ஏற்றுவதையும், தேசிய விழாக்களைக் கொண்டாடுவதையும், வந்தே மாதரம் பாடுவதையும் ஏன் அரசாங்கம் கட்டாயமாக்கக் கூடாது? எதற்காக அதற்கு நிதியும் வழங்கி பின்னர் அந்நிறுவனங்களிடம் பிச்சையும் எடுக்க வேண்டும்? தேசத்திற்குச் சிறிதும் பயன்படாத அந்நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தானே?

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஜமாத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கண்டுகொள்ளாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததிலும் வியப்பில்லை. இந்த நாள் வரை நம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இயக்கங்களும் வந்தே மாதரம் பாடலை ஆராதித்தே வந்திருக்கின்றன. வந்தே மாதரம் பாடல் இன்னும் இந்த தேசத்தில் பற்றுடனும், பக்தியுடனும் போற்றப் படுகிறது என்றால் அதற்கு தேசிய இயக்கங்களே காரணம்.

ஆர்.எஸ்.எஸ். vs. ஐ.மு.கூ

dr_hedgevar1ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் அமைப்பைத் தொடங்கிய டாக்டர் கேஷவ் பல்ராம் ஹெட்கேவார் தன்னுடைய சிறுவயதில் நாக்பூரில் வந்தே மாதரம் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார். பின்நாட்களில் அவரே 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்க, அவ்வியக்கம் பாரத தேசம் முழுவதும் பரவி தேசப் பற்றையும், தேசியக் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்பியது.

2004-ல் மத்தியில் ஐ.மு.கூ அரசு ஆட்சியமைத்த பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு, அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது. அவ்வரசாணையை எதிர்த்து சோனியா, “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவெறியையும், மதவேறுபாட்டையும் வளர்க்கிறது; மத்தியப் பிரதேச மாநில அரசின் ஆணை, அரசியல் சாஸனத்தின் கொள்கைகளுக்கு எதிராக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவது போல இருப்பது கவலை அளிக்கிறது” என்று அப்போதைய ஜனாதிபதி மண்புமிகு அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஜனாதிபதிக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியுமாதலால், சோனியாவின் “தேசப் பற்று”ம் அரசியல் சாஸனத்தின் மீது அவர்கொண்டிருந்த “அக்கறை”யும் அரசியல் அரங்கத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பதும் உண்மை தான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6, 2006-ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளைப் ”பாடலாம்” என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது அது மரியாதை தானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார். ஷியா சான்றோரும் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் உதவித் தலைவருமான மௌலானா கல்பே சாதிக் அவர்கள் செப்டம்பர் 5, 2006 அன்று முஸ்லிம் சான்றோர்கள் “வந்தே” என்கிற வார்த்தையை ஆராய வேண்டும் என்று சொல்லி, ”அது மரியாதை செய்வதைக் குறிக்கிறதா அல்லது தொழுவதைக் குறிக்கிறதா” என்று கேட்டுள்ளார். (பார்க்க: விக்கிபீடியா)

… தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!..

… வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” - திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? …

பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries is about power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

- ஜடாயு எழுதிய ”வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்” என்ற கட்டுரையிலிருந்து..

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதே போல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டு விழாவின் போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள் என்பதும் உணமையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றண்டின் போது, அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் உண்மையே.

இதில் கேவலமான விஷயம் என்னவென்றால், மற்ற மதகுருமார்களின் கட்டளைகளை அம்மதங்களைச் சார்ந்த மக்களே சட்டை செய்யாமல் தேசப் பற்றுடன் வந்தே மதரம் பாடலைப் பாடும்போது, அக்கட்டளைகளை தேச விரோதச் செயல் என்று கண்டிக்க வேண்டிய அரசாங்கமும் ஐ.மு.கூ அரசியல் வாதிகளும் ”போலி மதச்சார்பின்மை”யுடன் கோழைகளாகத் திராணியின்றி இருப்பது தான்.

தருல் உலூமின் கட்டளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது

ஜமாத் உலேமா-இ-ஹிந்த், “நாங்கள் எங்கள் நாட்டை விரும்புகிறோம். ஆனால் அதற்காக நாங்கள் பெரிதும் தொழுது வணங்கும் அல்லாஹ்வின் நிலைக்கு நாட்டை உயர்த்த முடியாது….தருல் உலூம் வந்தே மாதரத்திற்கு எதிராக இட்ட கட்டளை சரியானதே” என்று குறிபிட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

ஜமாத் மேலும், “தேசத்தை ஒரு அன்னையாகப் பாவித்து, அந்த அன்னையைப் போற்றிப் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது. எங்களின் இந்த நிலைப்பாட்டை வேண்டுமென்றே அரசியலாக்கினால் மத நல்லிணக்கம் கெட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் தான் ஏற்படும்” என்றும் கூறியுள்ளது.

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா, முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த இந்துக் கடவுளும் குறிக்கப் படவில்லையாதலால், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம் தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடி தாய் நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்விடத்தில், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சந்தியா ஜெயின் அவர்களின் கருத்து நினைவுகொள்ளத் தக்கது. அவர் சில தினங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில், “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றால், இருக்கட்டும்; இந்நாட்டின் சட்டங்கள் வேண்டாம், நாங்கள் எங்களின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தான் இருப்போம் என்றால் பரவாயில்லை. எங்கள் பெண்களை மதரஸாக்களில் தான் படிக்க வைப்போம், அவர்களுக்கு 13-14 வயதானவுடன் திருமணம் செய்து விடுவோம், என்று உங்கள் விருப்பபடியே இருக்கலாம். ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்” என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.

இங்கு கவனிக்கப் பட வேண்டியது அரசியல் சாஸனம் தான். மேலும் அரசியல் நிர்ணய சபை, அரசியல் சாஸனத்தின் மூலம் வந்தே மாதரம் பாடலுக்கு ”தேசிய பாடல்” என்று அழைத்து தேசிய கீதத்திற்குச் சரிசமமான அந்தஸ்தும் கொடுத்துள்ளது. அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும்.

தேச பக்தியின் அற்புதம்

நம் தேச விடுதலைப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். நாம் வாழ்வது இந்த மண்ணில்; இம்மண்ணில் விளையும் காய் கனிகளையும், தாவரங்களையும், தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறோம்; இம்மண்ணில் ஊற்றெடுத்து வரும் நீரைக் குடித்து தான் நாம் வாழ்கிறோம்; இம்மண்ணில் தான் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறோம்; இம்மண்ணின் பயன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இம்மண்ணை மதிக்காமல் மிதித்துத் தான் வாழ்கிறோம்; நாம் தரும் அனைத்து விதமான துன்பங்களையும் இம்மண் தாங்கிக் கொண்டு தன்னுடைய குழந்தைகளாக நம்மைப் பேணுகிறதே! அப்பேற்பட்ட மண்ணை நம் தாயக பாவித்து வணங்குவது நம் தார்மீகக் கடமையல்லவா? அவ்வாறு நாம் வாழும் மண்ணைத் தாயாக மதித்து மரியாதை செய்வதில் மதத்திற்கு என்ன சம்பந்தம்?

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்து குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை வணங்கவேண்டும். வந்தே மாதரம் தேச பக்தியின் அற்புதம்!

வந்தே மாதரம்!

Source: http://www.tamilhindu.com/2009/11/vande-mataram-soul-of-nationalism/

No comments:

Post a Comment