"இந்து மதத்தை சேர்ந்த ஏழை மாணவர் -களுக்கும், கல்வி உதவித்தொகை வழங்க கோரி, ஆக., 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் சார்பில் போராட்டம் நடக்கும்,'' என பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதா -கிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போல், இந்து மதத்தை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தை கடந்த மாதம் நடத்தினோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் போராட் -டம் நடத்தப்படும். சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை, நாங்கள் எதிர்க்கவில்லை. கல்வி உதவித்தொகை பாகுபாட் -டைத் தான் எதிர்க்கிறோம். தி.மு.க., கேட்டு கொண்டதன் பேரில், இலங்கை -த் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரி -யை, மத்திய அரசு இலங்கைக்கு அனுப்புகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறுவது பொய்யான தகவல். இலங்கை அதிபர் கேட்டுக் கொண்டதன் பேரில் தான், மத்திய அரசு சிறப்பு அதிகாரியை அனுப்புகிறது. பலத்த எதிர்ப்பையும் மீறி, மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு, மற்ற மாநிலத்தை விட, தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்று திசை திருப்பும் போக்கை முதல்வர் கைவிட வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53339
No comments:
Post a Comment