‘உலகப் பந்தில் தமிழை உயர்த்தவா அல்லது கோவை மண்டலத்தில் தி.மு.க-வைவளர்க்கவா?’ எனச் செம்மொழி மாநாடு தொடங்கும் முன்னரே, அரசியல் களத்தில் விமர்சன அம்புகள் பாய்ந்தன. இப்போது, மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சி களிலும் முதல்வர் கருணாநிதி -யின் உறவு முகங்களே தெரிய… ‘இது செம்மொழி மாநாடா… இல்லை குடும்ப விழாவா?’ என்ற முணுமுணுப்பை கோவை ஏரியாவில் கேட்க முடிந்தது!
போதாக்குறைக்கு, தி.மு.க. பிரமுகர் தரப்பில் இருந்தே, ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – சூரியக் குடும்பம் அழைக்கிறது’ எனத் தலைப்பிட்டு கருணாநிதியின் படம் நடுவில் இருக்க, அதனைச் சுற்றி அழகிரி, ஸ்டாலின், துரை தயாநிதி, தயாளு அம்மாள், கனிமொழி உள்ளிட்ட உறவுகளின் படங்கள் இருப்பதுபோல வைக்கப்பட்ட பேனர்கள் வேறு! ‘அடேங்கப்பா’ ஸ்டாலின்… அசத்தல் கனிமொழி!
செம்மொழி மாநாட்டில் பலருடைய பார்வைகளையும் தங்கள் பக்கம் திருப்பிய இருவர் – ஒருவர், துணை முதல்வர் ஸ்டாலின். அடுத்தவர், கனிமொழி எம்.பி.!
நள்ளிரவு, அதிகாலை என்று எல்லா நேரங்களிலும் இருவரும் மாநாட்டு வளாகத்தில் வலம் வந்தபடியே இருந்தார்கள். அதிலும், மாநாட்டின் துவக்க நாளன்று விழா மேடையில் நாற்காலிகளை ஒழுங்குபடுத்துவது, மைக்கைத் தட்டிச் சரிபார்ப்பது என்று மு.க.ஸ்டாலின் சுற்றிச் சுழன்றதைப் பார்த்து மாநாடே ‘அடேங்கப்பா’வானது! கனிமொழி, வி.வி.ஐ.பி-க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்று ஒவ்வொருவரையும் ‘வாங்க… வாங்க…’ என்று அசத்தல் கும்பிடு போட்டு உபசரித்தார். முன் வரிசையில் உட்கார்ந்திருந்த காந்தி அழகிரியின் கன்னம் தட்டிச் சிலாகித்த கனிமொழி, அருகில் கணவர் சகிதம் அமர்ந்திருந்த கயல்விழி -க்கும் ஒரு ‘ஹாய்!’ முக்கியமான விருந்தினர்களு -க்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் பொறுப்பும் கனிமொழிக்கே!
குழுமிய குடும்ப உறவுகள்!
முதல்வர் கருணாநிதியின் கொள்ளுப் பேரன்கள் வரை குடும்ப உறவுகள் மாநாட் -டில் எங்கும் தென்பட்டன. ‘அவங்கதான் ஸ்டாலின் மருமகள்… இவங்கதான் அழகிரி மருமகன்…’ என சுட்டிக்காட்டி உள்ளம் பூரித்தனர் உடன்பிறப்புகள். மொத்தமாக, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 84 பேர் மாநாட்டுக்கு வந்திருந்ததாகச் சொல்கிறார் குடும்ப உறவுகளை நன்கு அறிந்த பத்திரிகையாளர் ஒருவர். அரங்கின் இடப் பக்கம் அவர்களுக்கென்று இடம் ஒதுக்கப்பட்டிருக்க… அவர்களோ அரங்கின் முன் பகுதியில் பரவலாக அமர்ந்து நிகழ்வுகளை ரசித்தனர். இதனால், சில மாண்புமிகுக்களுக்கே இடம் கிடைக்கவில்லை!
காலையில் ஸ்டாலின்… மாலையில் அழகிரி!
ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தொடங்கிவைத்தபோது, மேடையில் இருந்து எல்லோரையும் வரவேற்றார் துணை முதல்வர் ஸ்டாலின். மேடைக்கு எதிரே கீழே அழகிரிக்கு நாற்காலி போட்டிருந்தார்கள். ஸ்டாலின் உரையாற்ற அழைக்கப்பட்டபோதும், விருந்தினர்களுக்கு அவர் சிறப்பு செய்யும்போதும் ‘தளபதி வாழ்க’ என்ற கோஷம் பெரிதாக எதிரொலித்தது. அதைக் கவனித்தாரோ என்னவோ… தன் பக்கத்தில் இருந்த துரைமுருகன், தயாநிதி மாறன் ஆகியோரிடம் சிரித்துப் பேசியபடி இருந்தார் அழகிரி.
அன்று மாலையில் நடந்த ஊர்வலத்தைப் பார்வையிடுவதற்காகப் போடப்ப -ட்ட மேடையில் அழகிரி அமரவைக்கப்பட்டார். கவர்னர், ஜனாதிபதி, முதல் -வர், பேராசிரியர் வரிசையில் ஸ்டாலின் அமர்வதற்காக இருக்கை போட்டு இருந்தார்கள். அந்த இருக்கையில் அழகிரி அமர்ந்துகொள்ள… ஸ்டாலின் பர்னாலாவுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டார். ஊர்வலம் தொட -ங்குவதற்கு முன்பு ஸ்டாலினும் அழகிரியும் குலுங்கிச் சிரித்துப் பேசியபடி இருந்தார்கள்.
மேடையில் கோபாலபுரம்… பாவம் தமிழறிஞர்கள்!
‘இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் அமைந்திருந்த அட்டகாசமான அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பைப் பார்வையிடுவதற்காக ஊர்வலப் பாதையில் மேடைகள் போடப்பட்டிருந்தன. மேடைக்கு வலது பக்கத்தில் அமைச்சர்களுக்குத் தனி மேடை…இடது பக்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக -ளுக்கு மேடை. இதற்குக் கொஞ்சம் தள்ளி ‘சிறப்பு அழைப்பாளர்கள்’ என்று பெயர் போட்டு அமைந்திருந்த மேடையில்… தயாளு அம்மாள், செல்வி, காந்தி அழகிரி, கயல்விழி, துர்கா ஸ்டாலின், கிருத்திகா, ராசாத்தி அம்மாள், கனிமொழி, தமிழரசு, செல்வம் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று கோபாலபுரம் உறவுகளின் கூட்டம். தமிழ் அறிஞர்களும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் அங்கே உட்கார இடம் இல்லாமல் நின்றபடி இருந்தனர். மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன், பின்னால் நின்றுகொ -ண்டு எக்கி எக்கிப் பார்த்தபடி இருந்தார் ஊர்வலத்தை!
வீணையும் கவிதையும்!
24-ம் தேதி, மாலை செல்வியின் மகள் எழிலரசி ஜோதிமணியின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. 25-ம் தேதி, கவிஞர் வைரமுத்து தலைமையிலான கவியரங்க -த்தில் அழகிரி மகள் கயல்விழி கலந்துகொள்வாரா… மாட்டாரா என்கிற பட்டிமன்றமே நடந்தது. காரணம், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கவிஞர்கள் பட்டியலில் அவருடைய பெயர் மாறிக்கொண்டே இருந்தது -தான். இதற்கிடையில், ‘முரசொலி’யில் வெளியான மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் கயல்விழியின் பெயர் விடுபட்டுப்போக, இது தி.மு.க. பெருந்தலை -கள் கவனத்துக்குப் பறந்தது. அவர்கள் சிலரை அழைத்துச் சத்தம் போட… கயல்விழியின் பெயர் கவியரங்க நிகழ்ச்சியில் உறுதியானது!
அழகிரி ஆப்சென்ட்… மாநாடு அப்செட்!
தமிழர் பண்பாடு, நாகரிகம், தமிழ்மொழிபற்றி அமைக்கப்பட்ட வண்ணமய -மான கண்காட்சியை மத்திய அமைச்சர் அழகிரி திறந்துவைப்பார் என்று அழைப்பிதழில் போட்டிருந்தார்கள்.
ஆனால், இரண்டாவது நாள் மாநாடு துவங்கியபோதே, அழகிரி டெல்லிக்குச் சென்றுவிட்டார். போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவாம். இதைப் புரிந்துகொள்ளாத அண்ணன் ஆதரவாளர்கள் மொத்தமாக அப்செட்! அழகிரி திறந்து வைக்க வேண்டிய பொது அரங்க கண்காட்சியை தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்!
சூரிய மாநாட்டில் இரட்டை இலை?!
மாநாடு நடைபெற்ற கொடிசியா அரங்கம் அமைந்திருக்கும் அவினாசி ரோட்டையே புதுசாக மாற்றி இருந்தார்கள். அதில், சாலையின் நடுவே அமைக்கப்பட்ட இரட்டை மின் விளக்குகளும் அடக்கம். பகலில் பார்ப்போரு -க்கு மாடர்ன் மின் கம்பங்களாகத் தெரிந்த அவை, விளக்கு எரியத் துவங்கிய -போது, ‘இரட்டை இலை’களை நினைவூட்டும் வகையில் இருக்க… இதைப் பார்த்து தி.மு.க-வின் அதி முக்கியப் பிரமுகர் செம டென்ஷன் ஆனாராம். ‘இவ்வளவு சிரமப்பட்டு மாநாடு நடத்த வந்தா, ஊரெல்லாம் இரட்டை இலை -க்கு விளம்பரம் கொடுக்கிறீங்களா? டிசைனை செலக்ட் பண்றதுக்கு முந்தி கொஞ்சமாச்சும் யோசிக்கிறது கிடையாதா?’ என்று அதிகாரிகளுக்கு செம டோஸ் விழுந்ததாகக் கேள்வி!
http://www.eelamwebsite.com/?p=4925
No comments:
Post a Comment