வடமதுரை : வடமதுரை அருகே நடுரோட்டில் விட்டு செல்லப்பட்ட இரு பெண் குழந்தைகள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை - திண்டுக்கல் ரோட்டில், ஆண்டிமாநகர் அருகே நள்ளிரவில் நின்ற கார் அருகே, இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் இருந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், கார் அருகில் சென்றபோது, அவர்கள் காரை எடுத்துக் கொண்டு சென்றனர். கார் நின்ற இடத்தில் சந்தியா(2) பிரியா(4) என வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் நின்று கொண்டிருந்தன. அந்த குழந்தைகள் வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டன.
போலீசார் துறை சார்ந்த நடவடிக்கையாக, காந்திகிராமம் சவுபாக்யா காப்பகத்தில் குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர். குழந்தைகளை தேடி இதுவரை யாரும் வரவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து குழந்தைகளை யாரேனும் கடத்தி வந்தபோது, எதிர்பாராமல் விடப்பட்டவர்களாக என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53340
No comments:
Post a Comment