பெண்கள் முக்கியமாக வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனை. எல்லோரு -க்கும் வெளிநாட்டில் முடி கொட்டுகிறது என்பார்கள்.
நான் படிக்கும் போதும் என் பிரண்ட்ஸ் புலம்புவார்கள்.சிலருக்கு முக்கியமாக பாராஷூட் ஒத்துக்கொள்ளாது.ஆனாலும் அதைப்பற்றி தெரியாமல் நான் சுத்தமான எண்ணெய்தான் உபயோகிக்கிறேன் ஆனாலும் கொட்டுகிறது என்பார்கள்.
முக்கியமான ஒன்று,அதிக வாசனை உள்ள எதுவும் சருமத்துக்கோ, தலைக்கோ நல்லதல்ல.VVD தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தினால் முடிக்கு மிகவும் ஏற்றது.மேலும் இதனால் முடிக்கு ஒவ்வாமை ஏற்படாது. இதைவிட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணேய். அதற்காக வீட்டில் தென்னை மரம் வளர்க்க முடியுமா என்று கேட்காதீர்கள்.நாம் கடையில் வாங்கும் ஒரு தேங்காயை கொண்டே வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.செய்முறையை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கிய காரணம் எண்ணெய்யை தேய்க்கும் போது தலையில் அழுத்தி தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.முடி வளர அதுவும் அவசியம். எண்ணெய்யை வெளியில் தேய்த்தாலும் அது வேர்க்கா -ல்களில் ஊடுருவி உள்ளே செல்லும். அதனால் தான் சில எண்ணெய்களை, கிரீம்களை முடியில் தேய்க்கும் போது முடி கொட்டி விடுகிறது.
என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும் நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம்.ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள். இதனால் சாதம் எடுத்து கொள்ளும் அளவும் குறையும்.உடம்பும் குறையும் எந்த கஷ்டமும் இல்லாமல். மலேஷியாவில் கீரையை மிக எளிதாக சமைப் -பார்கள்.கீரை இல்லாமல் அவர்கள் உணவு இல்லை.ஒரு ஸ்பூன் எண்ணெய் -யில் 3 பல் பூண்டுகளை அரிந்து போட்டு வதக்கி,கீரையை போட்டு வதக்கி 1 சிட்டிகை உப்பு போட்டு ஒரு தட்டு வைத்து மூடி 3 நிமிடம் கழித்து இறக்கவும்.So Simple.
இதைவிட அனைவருக்கும் உகந்த மருந்து பேரிட்சை பழம்.குழந்தை பிறந்தவுடன் சிலருக்கு மிகவும் அதிகமாக முடி கொட்டும்.அல்லது புது ஊரில் குடியேறும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உண்டு.தினமும் 10 பேரிட்சை பழத்தை சாப்பிடுங்கள்.முடி கொட்டுவது நிற்கும் வரை சாப்பிடுங் -கள். அப்படியே சாப்பிட பிடிக்காட்டி பாலில் நன்றாக ஊற வைத்து மிக்ஸி -யில் அடித்து மில்க் ஷேக் போல சாப்பிடுங்கள்.எனக்கு தெரிந்த வரையில் இது நிச்சயம் பலன் தரும்.இதில் முக்கியமான ஒன்று எந்த இரும்பு சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.எனவே மற்ற உணவுகளை அதற்கு தகுந்தாற்போல் சாப்பிடுங்கள். வாழைப்பழம், தயிர், கொய்யாப்பழம் முதலியவற்றை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு முக்கியமான ஒன்று,என்னதான் முடி கொட்டுவதற்கு பரம்பரை ஒரு காரணமென்றாலும் நீங்கள் முடியை பராமரிக்கும் விதமும் ஒரு காரணம். தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பது,அதுவும் மிக அதிகமா உபயோகப்படுத்துவது, தலை குளித்தால் சரியாக துவட்டாமல் இருப்பது, சுடு தண்ணீரில் குளிப்பது, அதிகம் தலைக்கு தொப்பியை உபயோகப்படுத் -துவது (புதிதாக ஹெல்மேட் வேறு), தலைக்கும் வியர்த்தால் அப்படியே துடைக்காமல் விடுவது,வாரம் ஒரு முறை கூட தலையில் எண்ணெய் தேய் -த்து விடாமல் இருப்பது அல்லது மசாஜ் செய்து விடாமல் இருப்பது,லேசாக முடி கொட்டினாலும் உடனே கண்டதையும் வாங்கி உபயோகிக்கத் துவங்கு -வது என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.தினமும் ஷாம்பூ போடாதீர்கள்.இரண்டு முறை போதும்.அதுவும் மிகவும் மைல்டான ஷாம்பூ பயன்படுத்துங்கள்.தலைக்கு தனித் துண்டு உபயோகியுங்கள். Anti Dandruff ஷாம்பூ அடிக்கடி உபயோகிக்காதீர்கள்.வாரம் ஒரு முறை போதும்.வாரம் ஒரு முறை தலையில் எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.ஆண்கள் வெளியில் அதிகம் செல்வதால் மண்,தூசும் ஒரு காரணம். வெளியில் சென்றுவிட்டு வந்தால் தலையை நன்கு உலர விடுங்கள்.தூங்கும் முன் தலையை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுங்கள் அல்லது பிரஷ்ஷால் வாரி விடுங்கள். தலையணை உறையை அடிக்கடி புதுசாக மாற்றுங்கள்.ஒரு முறை பொடுகு வந்து போக்குவதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்தால் அன்றே சீப்பு,தலையணை உறையை புதிதாக அல்லது துவைத்து உபயோகியுங்கள்.
இப்படி செய்தால் முடிக்கொட்டுவது நிற்கும்.
Source: http://92.48.112.50/tamil/node/3956
No comments:
Post a Comment