விலைவாசி உயர்வு, விவசாயிகள், மீனவர்கள் பிரச்னை, மணல் திருட்டால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவக்க- ண்டித்து அ.தி.மு.க., சார்பில், திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதா -வது:நான் அரசியலுக்கு வந்து 28 ஆண்டுகளாகின்றன. இதுபோல மக்கள் கூட்டத் -தை நான் என் வாழ்நாளில் எங்கும் பார்த்ததில்லை.தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு காலம் முடிந்து விட்டது. இப்போது தேர்தல் ஆண்டில் உள்ளோம். ஒன்பது மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். ஜனநாயக நாட்டில் ஓட்டு போடுவது மக்களின் கையில் உள்ள சிறந்த ஆயுதம். முதல் -வர் கருணாநிதி, உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளார். அவரது சொத் -துக்கணக்கை பார்த்தால், கால்குலேட்டருக்கும் கிறுக்கு பிடித்து விடும். கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த, அரசு எதையும் செய்யவில் -லை. கேட்டால், மத்திய அரசு மீது பழிசுமத்துகிறார். மத்திய, மாநில ஆட்சி -யில் இருப்பது தி.மு.க., தான். மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு, இல்லை என்கிறார். கர்நாடகாவை விட, தமிழகத்தில் குறைவு தான் என்கிறார். மின் கட்டண உயர்வு, ஆந்திராவை விட இங்கு குறைவு தான் என்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தை விலை -யைக் காட்டி, கருணாநிதி ஏமாற்றுகிறார்.
தமிழக விவசாயத்தை, காவிரியைக் கழித்து விட்டு கணக்கிட முடியாது. மொத்த பாசனத்தில் 85 சதவீதம் காவிரியை நம்பித் தான் உள்ளது. வறண்ட காவிரியை வற்ற வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. 1924ம் ஆண்டு கர்நாடகா - தமிழகத்துக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து ஒப்பந்த -ம் போடப்பட்டது. 50 ஆண்டுகள் அமலில் இருந்த அந்த ஒப்பந்தத்தை, 1974ம் ஆண்டு புதுப்பிக்க தவறி விட்டார் கருணாநிதி. ஒப்பந்தம் காலாவதியாவ -தை உணர்ந்த கர்நாடகா அரசு, அணைகளைக் கட்டியது. அதை தடுக்க கரு -ணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, காவிரி விஷய -த்தில் அவர் செய்த முதல் துரோகம். அதன்பின், இது சம்பந்தமாக ஐகோர்ட் -டில் வழக்கு தொடர்வது என 1971ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறை -வேற்றப்பட்டது. ஒரே ஆண்டில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இது, இரண்டாவது துரோகம். 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது மூன்றாவது துரோகம். ஐகோர்ட் உத்தரவின்படி 1990ம் ஆண்டு நடுவர் நீதிம -ன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், தமிழகத்துக்கும், புதுச்சேரிக் -கும் சேர்த்து 192 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என, 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது நான்காவது துரோகம்.
அதற்குக் காரணம், கர்நாடகாவில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான வணிக சம்ராஜ்யங்களை பாதுகாக்க, கர்நாடகாவை விரோதிக்க விரும்பா -மல், தமிழக விவசாயிகளின் உரிமைகளை துளியும் கவலையில்லாமல், தாரை வார்த்துள்ளார். நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சை, பாலைவனமாக மாறியுள்ளது. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்துக்கு காவி -ரி நீரை பெற்றுத் தர, கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.இடையில், பல முறை பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கே அம்மாநில முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், காவிரி நீரைக் கேட்கவில் -லை. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு, காவிரியில் நீர் திறந்து விடக் கேட்டு, கர்நாடகா முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆர்ப்பாட்ட -ம் அறிவித்த பிறகே, மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இல்லா -விட்டால், தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இருந்திருக்காது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு : ஜெயலலிதா சூசகம் :
காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு குறித்து ஜெயலலிதா பேசியதாவது: "தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு' என்று நான் சொல்வதற்கு கருணாநிதி கோப -ம் அடைகிறார். தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி முறையில் ஆட்சி அமைக்க மொத்தம் 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆனால், சபாநாயகர் தவிர தற்போது தி.மு.க.,விடம் 99 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பா -ன்மை இல்லாத தி.மு.க., தான் அரசு அமைத்து ஆட்சி நடத்துகிறது. இதை எப்படி மெஜாரிட்டி அரசு என்று சொல்லமுடியும்? காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதால் தான் கருணாநிதி அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிர -சை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடிய "பரந்த' மனம் கருணாநி -திக்கு இல்லை. ஆகையால், காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. ஆனால், தி.மு.க., வினருக்கும் மட்டும் அமைச்சர் பதவிகளை அவர் மத்திய அரசிடம் வற்புறுத்தி பெற்றுக் கொண்டுவிட்டார். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.ஜெயலலிதா தன் பேச்சில், "பரந்த மனது கருணாநிதிக்கு இல்லை' என்று குற்றம்சாட்டியுள்ளார். அப்படி பரந்த மனது உள்ளவர் தான், பரந்த மனது இல்லாதவர் பற்றி குறைகூற முடியும் என்ற அடிப்படையில் பார்த்தால், "கண்டிப்பாக இது காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியி -ல் பங்கு என்ற அழைப்பு தான்' என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கருணாநிதியை எப்படி அழைப்பது? திருச்சியில் ஜெயலலிதா விளக்கம் :திருச்சியில் அ.தி.மு.க., சார்பில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்ற -ன. இந்தியாவில் பெருமை மிக்க மாநிலமாக விளங்கிய தமிழகம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு கீழாக மாறிவிட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்ற -ம் வேண்டும், அதை மாற்றும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. 1,000 ரூபாய் கொடுக்கிறார்களே என ஏமாந்து ஓட்டு போட்டு விட வேண்டாம். குடும்ப ஆட்சியை வீழ்த்தி புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆளும் கட்சியை கண்டி -த்து தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எங்காவது எதிர்க்கட்சியை கண்டித்து ஆளும் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு கேவலம் இங்கு நடந்துள்ளது. 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபோது என்மீது ஏராளமான பொய் வழக்குகளை போட்டனர். 12 வழக்குகளில் இருந்து வெளிவந்து விட்டேன். நீதிமன்றமே தீர்ப்பு அளித்து விட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று கருணாநிதியால் போடப்பட்டது. பெங்களு -ரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை ஏழு ஆண்டுகளாக இழுத்தடித்த -து கருணாநிதி தான். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால், வழக்கை நான் தாமதப்படுத்துவதாக கூறி வருகிறார். நான் ஆமாம் என்று சொல்ல வேண்டும், சிறைக்குள் சென்று தண்டனை அனுபவி -க்க வேண்டும், தேர்தலில் போட்டியில்லாமல் ஜெயித்து விடலாம் என கருணாநிதி நினைக்கிறார். இப்படிப்பட்டவர் முதல்வராக இருக்கலாமா? கருணாநிதி பெயரை சொல்லுவதால் வேதனைப்படுகிறாராம்.
கோவையில் அ.தி.மு.க., கூட்டத்தை கண்டு மிரண்டு போய், பிரியாணி, மதுபாட்டில் கொடுத்து கூட்டத்தை கூட்டினார். 30 சதவீத அளவு கூட்டம் கூட அங்கு இல்லை. ஜெயலலிதா என்ற பெயரை என் பெற்றோர் எனக்கு வைத்த -னர். நேரு, இந்திரா, காமராஜர் பெயரை எல்லாம் பெயர் சொல்லி தான் அழைக்கிறோம். ஜெயலலிதா சொல்லும் போது கோபம் வருகிறது. எம்.ஜி.ஆர். அழைத்த பட்டப்பெயர் சொல்லித் தான் இனி கூப்பிடப்போகிறே -ன். அது தான் தீயசக்தி. இனி, "திருக்குவளை தீயசக்தி' என்று தான் அழைப் -பேன்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார். தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியை கண்டித்து ஜெயலலிதா கண்டன கோஷங்கள் முழங்க, கட்சியினர் அவற் -றை திரும்பக் கூறினர்.அ.தி.மு.க., ஆர்ப்பாட்ட துளிகள் வருமாறு:
ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர், புதுக்கோட் -டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் -கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெ -ல்வேலி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் என, பல்வேறு மாவ -ட்டங்களிலிருந்தும் அ.தி.மு.க.,வினர் வந்திருந்தனர்.
நேற்று முன்தினமே அ.தி.மு.க.,வினர் திருச்சிக்கு படையெடுத்தனர். ஜெய -லலிதா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட- தோ, இல்லையோ போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆர்., இளைஞரணியினர் வெள்ளை நிற சட்டை, பேன்ட், தொப்பி அணிந்தும், ஜெயலலிதா பேரவையினர் பச்சை நிற சட்டை, பேன்ட், தொப்பி அணிந்தும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை அண்ணா தொழிற்சங்க பேரவையினர் 350 பேர் சபாரி உடையணிந்து மேடை -யை சுற்றி பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட் -டனர்.
மைதானத்தை சுற்றியிருந்த மரங்கள், ப்ளக்ஸ் போர்டுகளில் தொண்டர்கள் ஏறி அமர்ந்திருந்தினர். சிலர் ஸ்பீக்கர் மீது ஏறிநின்று மேடையை பார்த்துக் கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் பாலகங்கா மேடையில் இருந்தப -டி அவர்களை கீழே இறங்கும்படி கூறினார்.
மதியம் ஒரு மணியிலிருந்தே குழந்தைகள், முதியவர், பெண்கள், ஆண்கள் என லட்சக்கணக்கானோர் மைதானத்தில் குவிந்தனர். கடும் வெயில் வாட்டி வதக்கியதையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா வரும் வரை மைதானத்தில் காத்திருந்தனர். ஜெயலலிதா பேசத் துவங்கிய சிறிது நேரத்தில் மேடை பின்புறம் இருந்த தொண்டர்கள் கலைந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்யப்படவில்லை. நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததாலும், குடிநீர் இல்லாததாலும் மேடை அருகே மூன்று பேர் மயங்கினர். கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட பெண்கள், முதியவர்களை போலீசாரும், ஜெ., பேரவையி -னரும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவி செய்தனர்.
ஜெயலலிதாவை காண மேடையைச் சுற்றியிருந்த வீடு, வீட்டு மாடி, ப்ளக்ஸ் போர்டு, மரங்களில் தொண்டர்கள் ஏறிநின்றிருந்தனர். மேடையின் இடதுபுறம் பெரிய அளவில் ஜெயலலிதாவின் ப்ளக்ஸ் போர்டு வைக்கப்ப -ட்டிருந்தது. அதில், சிலர் ஏறிநின்றனர். அப்பகுதியில் தான் பத்திரிகையா -ளர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ப்ளக்ஸ் போர்டு லேசாக ஆடியதால் நிருபர்கள் அதிர்ச்சியடைந்து, சத்தம் போட்டனர்.
No comments:
Post a Comment