Monday, August 9, 2010

Priests are fielded to induce religious clash in Erode - ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

ஈரோட்டில் ஜூலை-24ம் தேதி நடந்த உள்ளூர் மோதல் சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வந்திருந்தது.

மொத்தமாக இந்துக்கள் வாழும் பகுதிகளில் சென்று பொதுமக்களின் கடுமையான ஆட்சேபத்தையும், எச்சரிக்கையையும் புறக்கணித்து கிறிஸ்தவப் பாதிரிகள் மதமாற்றப் பிரசாரத்தைத் தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் இந்து வர்த்தக நிறுவனம் ஒன்றும், இந்து இயக்கத் தலைவர்களும் கடுமையாகத் தாக்கப் பட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்த, கிறிஸ்தவ அமைப்புகளும், த.மு.மு.கவும் அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்தனர். காவல்துறையினர் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் செயல்பட்டனர். பாதிக்கப் பட்ட பொதுமக்களுக்கு உதவாமல், வன்முறையாளர்களின் கையாட்களாகச் செயல்பட்டு, பாதிக்கப் பட்டவர்களையே கைது செய்து துன்புறுத்தும் அவலமும் நடந்தேறியது..

இது பற்றிய நேரடி செய்தியினை ஈரோடு கனிவை சீனு அவர்கள் நமக்கு அனுப்பியுள்ளார். கீழே உள்ள இரு படங்களில் செய்தியும் அதைத் தொடர்ந்து சம்பவம் பற்றிய புகைப்படங்களும் உள்ளன.

செய்தி: பக்கம் 2

erode-studio-incident-july-2010-1

படம் 1 - தாக்குதலுக்கு உள்ளான போட்டோ ஸ்டுடியோ

erode-studio-incident-july-2010-2

படம் 2 - பொதுமக்களை மிரட்டும் காவல்துறையினர்

erode-studio-incident-july-2010-3

படம் 3 - ஆயுதங்களைக் கொண்டுவந்த காரும் ஓட்டுநரும்

erode-studio-incident-july-2010-4

படம் 4 - தாக்குதலுக்கு கொண்டுவந்த உருட்டுக் கட்டைகள்

erode-studio-incident-july-2010-5

படம் 5 - ஆயுதங்களைக் கொண்டுவந்த கார் பொதுமக்களால் சேதப்படுத்தப் பட்டது

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-6

படம் 6 - தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்ட வாகனம்

erode-studio-incident-july-2010-7

படம் 7 - ஆயுதங்களைக் கொண்டுவந்த காரை சேதப்படுத்தும் பொதுமக்கள்

erode-studio-incident-july-2010-8

படம் 8 - உடைக்கப் பட்ட கம்ப்யூட்டர் மற்றும் பொருட்கள்

erode-studio-incident-july-2010-9

படம் 9 - திரண்டிருந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர்

கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சினை என்பது ஈரோட்டில் தொடர் கதையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற மத பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண எந்த ஒரு முயற்சியும் செய்யாத அரசின் போக்கு பொது மக்களுக்கு ஒட்டுமொத்தத நம்பிக்கையின்மையையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: http://www.tamilhindu.com/wp-content/uploads/erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-1.jpg

You can read more information from the above site as how the priests are engaging themselves to create uncongenial atmosphere where every faith can live peacefully according to their own beliefs and traditions.


No comments:

Post a Comment