சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு
எழுதியவர்: வி. சண்முகநாதன், பாராளுமன்ற இணைச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி, நியூ டெல்லி. மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ யை அரசியல் ஆயுதமாக ஆக்கியுள் -ளது காங்கிரஸ் கட்சி. எதிர்க்கட்சித் தலைவர்களைப் பயமுறுத்திப் பணிய -வைக்க சி.பி.ஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே எதிர் -க்கட்சிகளைக் காயப்படுத்தும் நடவடிக்கையே. சி,பி.ஐ யின் சுதந்திரத்தை -யும் நடுநிலையையும் அழித்து விட்டார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்க -ட்சிகளால் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதில் சி.பி.ஐ பயன்படுத்தப்பட்டது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தொல் -லைதரும் வகையில் சி.பி.ஐ. பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நம் நாட்டின் சாதாரண குடிமக்கள், ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் பிரத -மர் மன்மோகன்சிங்கின் அமைதியான, சீரியசான, சிந்தனையில் ஆழ்ந்த முகத்தைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். இப்படிப்பட்ட அப்பாவித்தனமா -ன தோற்றத்துக்குப் பின்னே சி.பி,ஐ யினை துஷ்பிரயோகம் செய்யும் கையு -ம் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சாதமாக சி.பி.ஐ எவ்வாறு செயல்பட்டு -ள்ளது என்பதை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும்.
1. சி.பி.ஐ யினைத் தவறாகப் பயன்படுத்தியே போபர்ஸ் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சி.பி.ஐ யின் தேடப்படும் பட்டியலி -ல் நீண்டகாலமாக இருந்தவ இத்தாலிய வர்த்தகரான ஓட்டாவோ குத்ரோ -ச்சியை திடீரென நீக்கினார் மன்மோகன் சிங். போபர்ஸ் ஆயுத பேர ஊழல் வழக்கில் 12 வருடங்களாக சர்வதேச இண்டர்போல் அமைப்பால் சந்தேகப் பேர்வழியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு எதிரான ரெட்கார்னர் நோட்டிஸ் விலக்கிக்கொள்ளப்பட்டது.
2. காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் 1984ம் ஆண்டு சீக்கியர்கள்மீது நடந்த பயங்கர தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். சிபிஐ ஜெகதீஷ் டைட்லரை அந்த வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது.
3. மாநில சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்ற அஜித் ஜோகியின் மீதான வழக்குகள் அனைத்தும் மிகவும் சாதுர்யமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
4. லாலு பிரசாத் யாதவ் வருமானத்துகு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை பலவீனப்படுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை மாற்றியபடி இருந்தது.
வருமான வரித்துறை மேல்முறையீடு செய்ய ஏற்றவகையில் நீதிமன்றத் -தின் சிறப்பு பெஞ்ச் ஏற்படுத்திக் கொடுத்து குற்றச்சாட்டிலிருந்து விடுபடும் வகையில் வரிக் கட்டுப்பாட்டிலிருந்தும் விலக்கி, அவருடைய சொத்துக்க -ளைக் காப்பாற்றி, குற்றவியல் வழக்கில் இருந்து அவர் விடுபட வழியை -யும் ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி நடந்தபோது உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று சி.பி.ஐ யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநில அரசு மேல்முறையீடு செய்தபோது, அவ்வாறு அப்பீல் செய்ய வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சி.பி.ஐ பரிந்துரை செய்தது.
5. 2007 ஆம் ஆண்டில் பி.எஸ். பி. யின் ஆதரவு அரசுக்குத் தேவைப்பட்ட -போது, பி.எஸ்.பி. தலைவி செல்வி மாயாவதி மீதான தாஜ் காரிடார் வழக்கு ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. எனினும் 2008ஆம் ஆண்டில் மத்திய ஐ.மு.கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்தபோது அதனை ஆதரித்த மாயாவதியை அடக்குவதற்காகவே அவருக்கு எதிரான அளவுக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஏப்ரலில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி -களால் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தின் போது, மாயாவதியின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கினை நீர்த்துப்போகச்செய்தது.
6. முலாயம் சிங் யாதவ், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலை எடுத்தப்போதும் பிறகு ஆதரவு தெரிவித்தபோதும் வழக்குகளைக் கூட்டியும் குறைத்தும் நிலைமைக்குத் தக்கவாறு சி.பி.ஐ செயல்பட்டது.
7. பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது பொய்யான வழக்கினைப் பதிவு செய்தது. அதுவும் நீதிபதி புக்கான் தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரித்து, அவருக்கு எதிராக வழக்கு எதுவும் தேவையில்லை என்று அறி- த்தும் கூட வழக்கு பதிவு செய்யப்பட்டது.
8. சி.பி.ஐ யின் கொடுங்கோன்மைக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது, இன்றைய குஜராத் மாநில விவகாரம், குஜராத் அரசின் சீரிய நடவடிக்கைகளை முடக் -கும் வகையில், மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக, கட்டாயப்ப -டுத்தியும் அச்சுறுத்தியும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ ஈடுபட்டு வருகிறது. அதுவும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு- க் குழு பல்வேறு கட்சிகளில் இந்த வழக்குகளின் மீது விசாரணை நடத்தி முடித்த நிலையில்.
கடந்த ஆறுவருட ஐ.மு. கூட்டணி ஆட்சியில், அத்தியாவசியப் பொருட்க -ளின் தாறுமாறான விலையேற்றத்தை கட்டுக்குள் வைப்பதில், அரசு தோல்வி கண்டுள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகளை அடக்குவதிலும் தாக்குதல்களைக் கண்டறிந்து தடுப்பதிலும் இந்த அரசு தன் இயலாமையையே வெளிப்படுத்தியுள்ளது.
மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான ஊழல்களில் இந்த அரசின் அமைச்சர்கள் பலருடைய கை வெளிப்படையாகத் தெரிகிறது. 2ஜி அலை -வரிசையை மிகக் குறைவாகக் காட்டி, ஒதுக்கபட்டதில் நடந்த ஊழலால், அரசின் கஜானாவுக்கு 60,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் எல்லாம் சி.பி.ஐ யினை தங்களுக்கு சாதகமாகக் கையாண்டு, ஆளும் காங்கி -ரஸ் தன் ஐ.மு. கூட்டணி தலைவர்கள் தொடர்புடைய வழக்குகளை ஒன்று -மில்லாமல் ஆக்கிவிட்டது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களின் தலைக்கு மேலே தொங்கும் கூடிய கத்தியாக, சி,பி.ஐ யினை முறைகேடாகப் பயன்படு -த்துகிறது. எதிர்க்கட்சியினை பயமுறுத்தி, பலவீனப்படுத்தி, நாடாளுமன் -றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கூட்ட பேரம் பேசுகிறது. எல்லா வகை -யிலும் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் இவர்களுக்கு எதிராக மக்கள் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
Source: http://www.tamilhindu.com/2010/07/congress-misuse-of-cbi/
No comments:
Post a Comment