Wednesday, November 3, 2010

வங்கிக் கடன் எட்டாக் கனியா?

First Published : 13 May 2010 11:11:00 AM IST

Last Updated : 13 May 2010 11:19:26 AM IST

தேனி பஸ் நிலையத்தில் வடை விற்கும் குப்புசாமியின் மகன் காத்தவரா -யன். பிளஸ் டூ தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றரர். டாக்டருக்கு படிக்க ஆசை. ஆனால் அப்பாவால் செலவு செய்ய முடியாது. வங்கிகளில் கடன் கிடைக்கும் என்று பக்கத்துவீட்டுக்காரர் சொன்னதில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் துரதிருஷ்டம் வங்கி மேலாளருக்கு நம்பிக்கை இல்லை. வடை விற்கும் குப்புசாமிக்கு கடன் கொடுக்கவா என்று நினைத்தாரோ என்னவோ மறுத்துவிட்டார். பின்னர் தன்னார்வ அமைப்பு எடுத்த முயற்சியில் ரிசர்வ் வங்கி தலையிட்டு கடன் கிடைக்க வழி ஏற்பட்டது.

இந்த கசப்பான அனுபவம் மாணவர்கள் பலருக்கு உண்டு. கடவுளின் கருணை கூட கிடைத்துவிடும். ஆனால் வங்கி மேலாளரின் கருணை கிடைப்பதில்லை.

ஆண்டொன்றுக்கு சுமார் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்குச் செல்கின்றனர். பி.இ. படிப்புக்கு மட்டும் 1.5 லட்சம் பேர் செல்கின்றனர். மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் ஆயிரக்கணக்கா -னோர் சேருகின்றனர். மற்றவர்கள் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு 27 அரசுத்துறை வங்கிகள் கடன் உதவி அளித்து வருகின்றன. தாராளமாக கல்விக் கடன்களை வழங்க வேண்டும் என்று வங்கிகளை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நிதியமைச்சராக இருந்தபோது ப. சிதம்பரம் இதற்காக பல்வேறு முயற்சிக -ளை எடுத்தார். இருப்பினும் நடைமுறை சிக்கல்களால் எளிதில் கடன் கிடைப்பதில்லை.

பல வங்கிகள் கடன் தந்த போதிலும், அந்தந்த வங்கிகளின் மேலாளர்கள் -தான் கல்விக் கடன் வழங்குவதை இறுதி செய்கின்றனர். சில கிளை மேலாளர்கள் கடன் வழங்குகின்றனர். சிலர் வழங்குவதில்லை. ஒரே மதிப்பெண் பெற்றுள்ள மாணவர் சென்னையில் வங்கிக் கடன் பெற முடிகி -றது. ஆனால், அதே மதிப்பெண் பெற்றுள்ள திருச்சியைச் சேர்ந்த மாணவ -ருக்கு கல்விக் கடனை மறுக்கப்பட்டுள்ளது.

இப்படி கல்விக் கடன் கிடைக்காமல் சிரமப்படும் மாணவர்களை அடையா -ளம் கண்டு, அவர்களுக்கு கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து, கல்விக் கடன் பெற்று தருவதற்கு ஆலோசனைகளை வழங்கும் பணியில் தன்னார்வ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 33 தன்னார்வ நிறுவனங்களை உள்ளடக்கிய கல்விக் கடன் ஆலோசனை சிறப்பு குழு -இஎல்டிஎப் என்ற அமைப்பு இதற்கான சேவை -யில் ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவிஷன் 2020 அமைப்பின் ஒரு அங்கமா -கும்.

இதுகுறித்து இஎல்டிஎப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

கிராமப்புறங்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள், வறுமையின் காரணமாக உயர்கல்வி பெற முடியாமல் போகிறது. அவர்களில் சிலர் வங்கி கடன் பெற முயற்சிக்கின்றனர். ஆனால் சிலருக்கு வங்கி கடன் கிடைக்காமல் போய்விடுவதால், அந்த மாணவர்கள் மேலும் தொடர்ந்து படிக்காமல் போகும் நிலை உள்ளது.

மாணவர்கள், பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்விக் கடன் ஆலோசனை சிறப்புக் குழு (எஜுகேஷன் லோன் டாஸ்க் போர்ஸ்-இஎல்டிஎப்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாணவர்களுக் -கும், பெற்றோர்களுக்கும் வங்கி கடன் பெற ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

சட்டத்துக்குட்பட்டு ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறாமல் வங்கி கடன் பெற ஆலோசனைகளை வழங்குகிறோம். சில கல்லூரிகள் கவர்ச்சி விளம்பரம் செய்து மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இந்தக் கல்லூரிக -ளில் பல லட்சம் கட்டணம் செலுத்தி மாணவர்களை, பெற்றோர்கள் சேர்த்துவிடுகின்றனர். ஆனால் வங்கி கடன் பெறும்போது தான், அந்தப் படிப்பு அனுமதி இல்லாத (அப்ரூவல்) படிப்பு என்று தெரியவருகிறது.

எனவே அனுமதி இல்லாத படிப்புகளில் மாணவர்கள் சேரக்கூடாது.

வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளுக்கு மட்டும் வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. ரூ.4 லட்சம் வரை எவ்வித பிணைத் தொகை இல்லாமல் வங்கி கடன் பெறலாம். இந்தக் கடன் தொகை பெற முன்பணமும் செலுத்தத் தேவையில்லை. இதற்கான கடன் தொகையை கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அதாவது வேலை கிடைத்து ஓராண்டுக்குப் பிறகே செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி விதி கூறுகிறது.

வட்டி செலுத்த நிர்பந்திக்க முடியாது:

ஆனால் சில வங்கிகள், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை நடைமுறைப்படுத் -துவதில் உள்ள சிக்கல்களால், கடன் தொகைக்கு மாதந்தோறும் வட்டி தொகைச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறது. வட்டி தொகையைச் செலுத்த வேண்டும் என்று வங்கிகள், மாணவர்களை நிர்பந்திக்க முடியாது. வட்டி தொகைக்கு மானியம் தருவதாக மத்திய அரசு அளித்துள்ளது. இது -பற்றி எவ்வித அரசு ஆணையும் இதுவரை வரவில்லை. கடன் தொகையை 5 ஆண்டு முதல் 7 ஆண்டு வரையில் வட்டி மற்றும் அசல் தொகையுடன் தவணையாகச் செலுத்தலாம் என்றார்.

வட்டி எவ்வளவு?

வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரூ. 25 ஆயிரத்துக்குக் குறைவாக இருப்பின் 12 சதவீதமும், ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சம் வரையான தொகைக்கு 14 சதவீத வட்டியும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 16 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும்.

Courtesy: http://dinamani.com

No comments:

Post a Comment