Monday, January 24, 2011

இந்திய தேசிய கொடிக்கு சொந்த மண்ணில் அனுமதி இல்லை

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

சிதம்பரத்தின் சதி வேலைகள்:

சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவர்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் அந்தர்-பல்டி அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடிட்யும் தோய்ந்து தேந்து விட்டார் போலும்! இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது. 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.

பக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம்? லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது?

உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட்? லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூன்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.

உமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்:

சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே? இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே? ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு:

உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே? ஏன் அவ்வாறு செய்வதில்லை? காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை? காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி:

காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே?

இந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்:

மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான். இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்:

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன் என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

சொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்:

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-01-2011

https://secularsim.wordpress.com/2011/01/20/why-oppose-hoisting-tricolour-at-lalchouk/

No comments:

Post a Comment