வி. சபேசன்
இன்றைக்கு அரசியலில் கொள்கைகளை மாற்றிக் கொள்வது என்பது ஒரு சாதரண விடயம். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் கொள்கையை மட்டும்தான் அரசியல்வாதிகள் மாற்றுவர்கள் என்று அல்ல. மதத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். பெயரை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். இனத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் கொள்கை, மதம், பெயர், இனம் என்று அனைத்தையுமே மாற்றிய அரசியல் குடும்பம் எதுவென்று பார்த்தால், அது இந்தியாவின் நேரு குடும்பமாக மட்டுமே இருக்கிறது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என்பவை அனைவரும் அறிந்த பெயர்கள். ஆனால் காந்தி என்பது மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத்தான் குறிக்கும். காந்தி என்பது குஜாரத்தில் உள்ள பிராமணிய குடும்பப் பெயர். காந்தியோடு குடும்பரீதியாக எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத, காஸடமீர் ஐ சேரந்த நேரு குடும்பத்தில் இருந்து இத்தனை காந்திகள் எப்படி வந்தனர்? இந்தக் கேள்விக்கான பதிலை தேடினால் பல சுவாரஸ்யமான செய்திகள் காணக் கிடைக்கும். பெயர்களை சுற்றி இந்திய அரசியல் சுழல்வது புரியும்.
ஜவகர்லால் நேருவுக்கம் அவருடைய மனைவியான கமலா நேருவுக்கும் பிறந்த ஒரே மகள்தான் இந்திரா பிரியதர்சினி. இவர் இலண்டனில் கல்வி கற்கின்ற போது ஒருவரைக் காதலித்தார். இந்தக் காதலுக்கு இந்திரா பிரயதர்சினியின் தாய் கமலா நேரு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். நேருவும் இந்தக் காதலை அவ்வளவாக ரசிக்கவில்லை.
அதற்குக் காரணம் இந்திரா பிரியதர்சினி காதலித்த பெரொஸ் ஒரு முஸ்லீம். பெரொஸின் உண்மையான பெயர் பெரொஸ்கான். அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான். பெரொஸ்கான் மீதான காதலில் உறுதியாக நின்ற இந்திரா பிரியதர்சினி முஸ்லீமாக மதம் மாறினார். பெரொஸ்கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் வைத்து நிக்கா செய்து கொண்டார்.
இந்தியா திரும்பிய இந்திரா பிரியர்தனியையும் பெரொஸ்கானையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட நேரு அவர்களுக்கு மீண்டும் வேத முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இதன் பிறகுதான் இந்தப் பெயர் மாற்றங்கள் ஆரம்பமானது.
பெரொஸ்கான் ஒரு முஸ்லீம் என்றும் அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான் என்றும் பார்த்தோம். பெரொஸ்கானின் தயார் நவாப்கானை திருமணம் செய்வதற்கு முன்பு பர்ஸி மதத்தை சேர்ந்தவராக இருந்தார். பர்சிகளின் ஒரு சாதிப் பிரிவினருக்கு "கண்டி" என்று பெயர். இந்த "கண்டி" பிரிவைச் சேர்ந்தவராக பெரொஸ்கானின் தாயார் இருந்தார். இந்தக் "கண்டி" என்பதைத்தான் நேரு குடும்பத்தினர் "காந்தி" என்று மாற்றினார்கள்.
முதலில் பெரொஸ்கான் என்ற பெயர் பெரொஸ் காந்தி என்று மாறியது. உண்மையில் அது பெரொஸ் கண்டி என்று மாறியிருக்க வேண்டும். ஆனால் பெரொஸ் காந்தி என்று மாற்றப்பட்டு அப்படியே இந்திரா பிரியதர்சினியின் பெயரும் இந்திரா காந்தி என்று மாற்றப்பட்டது
இந்த இருவருக்கும் பிறந்தவர் ராஜீவ். இந்த நேரத்தில் பெரொஸ் காந்திக்கும் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போய்விட்டார்கள். பெரொஸ் காந்தி பிரிந்து போனதன் பிற்பாடு இன்னும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் சஞ்சீவ். கவனியுங்கள்! சஞ்சய் அல்ல, சஞ்சீவ்.
சஞ்சீவ் பெரொஸ் காந்திக்குப் பிறந்தவர் அல்ல, அவர் முகமது யூனுஸ் என்ற இன்னொரு முஸ்லீமுக்கு பிறந்தவர் என்ற பலமான ஒரு "கிசுகிசு" இந்திய அரசியல் உயர்மட்டங்களில் உண்டு. இதை அறிந்து கொண்ட சஞ்சீவ் தனது தயாரான இந்திரா காந்தியை மிரட்டியதாலேயே, விமான விபத்தில் அவர் இறந்து போக நேரிட்டது என்று சிலர் சொல்வார்கள். பெரொஸ் காந்தியின் மரணம் குறித்தும் சந்தேகம் கிளப்புபவர்கள் இருக்கிறார்கள். இவைகள் ஊகம் கலந்த தனிக் கதைகள்.
இப்பொழுது சஞ்சீவ்; எப்படி சஞ்சய் காந்;தியாக மாறினார் என்பதை பார்ப்போம். சஞ்சீவ் லண்டனில் தங்கியிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சஞ்சீவ் ஒரு காரை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடய கடவுச் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் இருந்த இந்தியத் தூதரகம் சஞ்சீவிற்கு புதிய கடவுச்சீட்டு வழங்கியது. அதில் அவருடைய பெயர் சஞ்சய் என்று மாற்றப்பட்டிருந்தது. இப்படித்தான் சஞ்சீவ் காந்தியாக இருந்திருக்க வேண்டியவர் சஞ்சய் காந்தியாக மாறினார்.
இந்தப் பெயர் மாற்றம் ராஜீவ் காந்தியிடமும் தொடர்ந்தது. ராஜீவ் காந்தி இத்தாலியை சேர்ந்த சானியா மைனோ என்ற பெண்ணை காதலித்தார். சானியா மைனோவை திருமணம் செய்வதற்காக ராஜீவ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தன்னுடைய பெயரையும் "ரொபோர்டோ" என்று மாற்றிக் கொண்டார்.
ரொபோர்டோவிற்கும் சானியா மைனோவிற்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பெண் குழந்தைக்கு "பியங்கா" என்று பெயரிட்டார்கள். ஆண் குழந்தைக்கு "ராவுல்" என்று பெயரிட்டார்கள். இரண்டுமே இத்தாலியிலும் வைக்கப்படுகின்ற ஐரோப்பிய பெயர்கள். இன்றைக்கு இவர்களுடைய பெயர்களும் வழமை போன்று மாறிவிட்டது.
இந்திரா பெரொஸ்கான் அரசியல் நலன்களுக்காக இந்திரா கண்டியாக மாறி அப்படியே இந்திரா காந்தியாக மாறினார். சஞ்சீவ் காந்தி லண்டனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதனால் சஞ்சய் காந்தியாக மாறினார். இந்திய அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை ரொபோர்டோவிற்கு வந்த பொழுது, ரொபோர்டோ மீண்டும் ராஜீவ் காந்தியாக மாறினார். அதே தேவை சானியா மைனோவிற்கு வந்த போது, அவர் சோனியா காந்தியாக மாறினார். அப்படியே பியங்கா பிரியங்கா காந்தியாகவும், ராவுல் ராகுல் காந்தியாகவும் மாறி விட்டார்கள்.
தற்பொழுது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக முடி சூட்டப்பட்டுள்ளார். நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியின் அதிகார பீடத்திலிருந்து மாறாது தொடர்ந்து இருப்பதற்கு அவர்களின் இந்த "பெயர் மாற்றும் அரசியலும்" ஒரு காரணம்.
http://www.orupaper.com/node/186
No comments:
Post a Comment