Monday, January 24, 2011

ஏன் என்று சொல்லுங்கள்

1. உலகத்திலேயே அதிக பரப்பளவில் உணவு தானியம் பயிரிடும் நாடு இந்தியா.

2. உலகத்திலேயே அதிக விழுக்காடு உழவு செய்யும் தரம் கொண்ட நிலப்பரப்பு இருப்பது இந்தியாவில்தான்.

3. இந்திய நிலப்பரப்பில் 50 விழுக்காடு விவசாயம் செய்யும் தன்மையுள்ளது.

4. 80 விழுக்காடு விவசாய நிலத்தில் உணவுதானியங்களும், பயிர்வகைகளும் பயிரிடப்படுகின்றன.

5. உலகிலேயே அதிக அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான்.

6. இவை உழவுத்தொழில், இறைச்சி, பால் இவற்றிற்காக வளர்க்கப்படுகிறது.

7. விவசாய உற்பத்தியில் 26 விழுக்காடு பால் உற்பத்தியில் கிடைக்கிறது.

8. உலக மாம்பழ உற்பத்தியில் 50 விழுக்காடு நம் நாட்டில் உற்பத்தியாகுகிறது.

9. ஆப்பிள், வாழைப்பழம், தேங்காய், காப்பிக்கொட்டை, பருத்தி, ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, ரப்பர், புகையிலை, கோதுமை ஆகியனவற்றையும் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

10. காலிபிளவர், சனல், வெங்காயம் ( !!!!!! ), அரிசி, கரும்பு உற்பத்தியில் இந்தியா 2-ம் இடம் வகிக்கிறது.

11. 60,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் நிறைந்தது இந்தியா.

12. நம் நாட்டில் 65 விழுக்காடுக்கு மேற்பட்டவர்கள் வசிப்பது கிராமங்களில். இவர்கள் தொழில் விவசாயம்.

13. தேசிய உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு விவசாயம் மூலமாக கிடைக்கிறது.

14. வெளிநாட்டு ஏற்றுமதியில் 10 விழுக்காடு விசாயத்தை சார்ந்ததாகும்.

இவ்வளவு பிளஸ் பாய்ண்ட் இருந்தும் நம் நாடு என்ன நிலையில் இருக்கிறது? அதை புள்ளி விபரத்தோடு பார்க்கலாம்.


1.இந்தியாவில் பிச்சைக்காரர்களாக இருப்பவர்களின் உத்தேச எண்ணிக்கை 50 லட்சம்.

2. ஒருவேளை சாப்பாட்டுடன் பட்டினி வாழ்க்கை நடத்துபவர்கள் 10 கோடி.

3. நாளொன்ருக்கு 20 ரூபாய்க்கு குறைவான வருமானத்தில் திரிசங்கு வாழ்க்கை வாழ்பவர்கள் 20 கோடி.

4. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் உணவு கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, திறந்த வெளியில் மழை,வெயிலில் சேமிக்கப்பட்டு நாசமாக்கப்படும் கோதுமையை கொண்டு 10 கோடி பேறுக்கு ஆண்டு முழுவதும் அவர்களின் பசியை நீக்கமுடியும்.

5. ஆண்டுதோறும் இந்திய அரசியல்வாதிகளால் ஊழல் மூலம் சுரண்டப்படும் நம் வரிப்பணம் சுமார் 50,000 கோடி.

6. ஸ்பெக்டிரம் + காமென்வெல்த் கேம் மூலம் ஊழல் செய்யப்பட்ட தொகை சுமார் 2 லட்சம் கோடி.

அனைத்து இயற்கை செல்வங்கள் இருந்தும் ஏன் இந் நிலை?

No comments:

Post a Comment