Saturday, January 29, 2011

அப்துல்கலாம் காப்பாற்றப்பட்டார்


அரசியல்வாதிகளை பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் மிகவும் விழிப்போடு இருப்பார்கள். விழிப்புணர்வு இல்லாத அரசியல் வாதிகள் இந்தியாவின் முளை முடுக்குகளில் போய் தேடினால் கூட கிடைக்க மாட்டார்கள் இதை படிப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும். தேசிய கீதத்தை கூட தப்பு இல்லாமல் பாடத் தெரியாத அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வா? இது என்ன இந்த ஆள் எதாவது பகல் கனவு கண்டு அது கலையாமலே பேசுகிறானா என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுய உணர்வோடு தான் பேசுகிறேன், எழுதுகிறேன்.

எந்ததொரு விஷயத்தையும் உடனடியாக தீர்த்து விட்டால் தங்களது பிழைப்பு நடக்காது என்பதில் நமது அரசியல்வாதிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வை பற்றி தான் சொல்கிறேனே தவிர எதோ அவர்களுக்கு பொருளாதாரம் சர்வதேச பிரச்சனைகள் சாக்கடையை ஒழித்து கட்டுவது போன்றவற்றில் விழிப்புணர்வு வந்துவிட்டதாக நான் கருதியதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


ஒரு நாற்பது, ஐம்பது வருஷயங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் தரையை பெருக்கும் அளவிற்கு தோளில் துண்டு போட்ட உடன்பிறப்புகள் வடக்கிலிருந்து இந்திமொழி வருகிறது, தமிழ் மொழியை கொன்றுவிட்டு தான் மத்திய அரசு மறு காரியம் பார்க்கும். தமிழை காப்பாற்றுவதற்கு கழகத்தை விட்டால் வேறு நாதியில்லை எங்களுக்கு ஒட்டு போடுங்கள், பதவியில் அமர்ந்தோமோ இல்லையோ எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கொண்டு வந்துவிட்டு தான் மறுகாரியம் பார்ப்போம் என்றும் குதிகுதியென குதிப்பார்கள். கரகரப்பான கழகத்தின் பேச்சுக்கு அறிவை கடன் கொடுத்து ஒட்டுகளும் போட்டு விட்டோம். 1967-ல் அரியனை ஏறியவர்கள்

2010 முடிய போகும் இந்த காலம் வரை தமிழக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லையென்பது வேறு விஷயம், எங்கே தமிழ், எங்கே தமிழ் என்று தேட வைத்து விட்டார்கள்.

தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்துபடுத்த தானை தலைவர்கள், தனது பேரன் பேத்திகள் ஆங்கிலத்தில் உரையாடுவது கண்டு ஆனந்த கடலில் முழ்கி தத்தளிக்கின்றனர், ஒட்டு போட்ட அருமை தமிழனோ தங்களது பிள்ளைகளின் அறிவை ஆங்கில பீடத்தில் பலிகொடுத்து விட்டு மொழியற்ற அனாதையாக ஆக போவது கூடத் தெரியாமல் செம்மொழி மாநாட்டிற்கு வண்டியேறி கொண்டிருக்கிறார். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினால் பலநாட்டு அறிஞர்கள் வந்து நல்ல கருத்துக்களை சொல்வார்கள் அதை காதார கேட்போம் என்ற ஆசையினாலா? அல்லவே அல்ல. கழக கண்மணிகள் தமிழ் வளர்க்க ஊற்றி கொடுக்கும் மதுக் கோப்பைகளுக்காகவும், பிரியாணிக்காகவும் தான் எங்கள் ஊர் தமிழன் கொங்கு மண்டலம் புறப்படுகிறான்.

இந்தி தமிழகத்திற்குள் வந்தால் இங்கிருக்கும் நல்ல இயல்புகள் எல்லாம
போய்விடும். வடபுலத்து பண்பாரடுகள் கலச்சாரம் தமிழ் பண்பாட்டை சிதைத்துவிடும். தமிழ்நாட்டை தமிழன் ஆள முடியாது. தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இரண்டாம் தர குடிமக்களாகி விடுவார்கள் தமிழக வளமெல்லாம் சுரண்டிக் கொண்டு போகப்பட்டு விடும். தமிழன் என்ற இனமே பூண்டற்று அழிந்துவிடும் என்று மேடை தோறும் பேசிய உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் தமிழனை தமிழ்மொழியை காப்பாற்ற தனிப்படை அமைப்போம் என்று நெற்றி நரம்பு புடைக்க கத்தினார்கள். அத்தோடு மட்டும் நின்றார்களா? இந்தி ஆதிகத்தை ஒழிக்க வேண்டுமென்றால் வடபுலத்து ஆக்கிர மிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தமிழன் தனிநாடு காண வேண்டுமென்று போர் முரசு கொட்டினார்கள்.


தின்ணையில் படுத்தேனும் திராவிடநாடு வாங்குவோம் என்றார் ஒருவர். அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றார் வேறொருவர். தமிழன் நம்பினான் எந்த காலத்திலும் நடைபெறவே முடியாத பச்சை பொய்களை கொட்டி வித்த வியாபார தலைவர்களை இன்றும் நம்புகிறான். நாளையும் நம்பி ஏமாறத் தயாராக இருக்கிறான். ஆடுகளே வந்து கழுத்தை நீட்டி என்னை வெட்டு என்று சொல்லும் போது கசாப்பு கடைக்காரன் என்ன செய்வான். பாவம் மேடை பேச்சாளர்களையும், திரைப்பட நடிகர்களையும். பகல் வேடதாரர்களையும் தங்களது ரச்சகர்கள் என்று தமிழன் நினைக்கும் வரை இந்த நாடு உருப்படாது.

ராஜ்வ் காந்தி அனுப்பிய இந்திய அமைதி காப்புபடை இலங்கையில் தமிழர்களை ரத்த சிந்த வைத்ததாம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவமானம் படுத்தியதாம் அதனால் அந்த படை அந்நிய நாட்டில் பணி முடித்து தாயகம் திரும்பிய போது தமிழகத்தின் முதல்வராக இருந்த திருக்குவளை தந்த திருமகனார் ராணுவத்தை வரவேற்க கூட போக மறுத்தார். நான் இந்திய அரசியல் சானத்திற்கு கட்டுப்பட்ட முதலமைச்சர் என்பதை விட சக தமிழனின் துயரத்தில் பங்கெடுத்து கொண்ட சாதாரண தமிழனாக இருப்பதே பெருமை என்பது போல் நடந்து கொண்டார்.

இன்று இலங்கையில் தமிழ்மக்கள் அனைவரும் நயவஞ்சக முறையில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். உரிமைக்கு குரல் கொடுத்த வீர மறவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டது. லட்ச கணக்கான தமிழ் பிணங்கள் காக்கைக்கும் கழகுக்கும் இரையாக்கப்பட்டு விட்டன. பசியாலும் நோயாலும் பண்பாடுமிக்க தமிழர்கள் மிருகங்களை விட கேவலமாக முள்வேலிகளுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள் அமைதிப்படையை வரவேற்க மறுத்த, தமிழர்களுக்காகவே வாழ்வேன், தாழ்வேன் என்ற வீர உரையாற்றிய முதுபெரும் அரசியல் சாண்க்கியர் முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் என்று தனக்கு தானே பட்டம் வழங்கி கௌரவித்து கொண்ட தமிழகத்தின் முதல்வர் சினிமா கலை விழாக்களில் தன்னை மறந்து உறங்கி கொண்டிருக்கிறார்.
உறங்குபவனை எழுப்பாதே, அவன் அந்த நேரத்தில் மட்டுமாவது பாவம் செய்யாமல் இருப்பான் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ஆனால் கலைஞர் அவர்கள் தனக்கும், தன் குடும்பத்திற்கும் தன் பதவிக்கும் இடைஞ்சல் வந்து விடக் கூடாது என்பதில் அக்கறையோடு இருக்கிறார். அந்த அக்கறையின் வெளிபாடுத் தான் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வயோதிக தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த போது ஆகாயவிமான நிலையத்திலே திருப்பியனுப்ப சாணக்கிய திட்டம் வகுத்தது.

தம்பி பிரபாகரனை வீரன், சூரன், தியாகி என்றுயெல்லாம் போற்றி புகழ்ந்தவர் விடுதலை புலிகளின் தனிநாடு கோக்கைக்கு போர் பரணி பாடியவர் புலி உறுப்பினர் இறந்த போது தனியொரு இரங்கற்பாவே வடித்துச் கொடுத்த சங்க தமிழ்றிஞர் தனது பதவிக்காக புலிகளின் போராட்டம் நியாமற்றது என்றதையும்

சிங்கள அரசுக்க அடி பணிவதில் தவறில்லை என்றதையும் காதார கேட்ட பின்பும் தமிழர்கள் இவரை தலைவர் என்று ஏற்று கொண்டிருப்பதும் விதியின் விளையாட்டு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது.

இன்று கூட தமிழுக்காகவும், தமிழர்காகவும் அயராது பாடுபடுவதாக சொல்லும் கருணாநிதி நமக்காக என்ன செய்திருக்கிறார். என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட அனைகட்டுகள் எத்தனை தரமான பாலங்கள் எத்தனை, ஆயிரகணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழில் கூடங்கள் எத்தனை, புதிய பல்கலை கழகங்கள், கல்லுரிகள், பள்ளி கூடங்கள் எத்தனை நாற்பத்தி முன்று வருடங்களில் விரல் விட்டு எண்ணி விடலாம் முன்னேற்ற திட்டங்களின் பலனை.

புண்ணுக்கு புனகு புசுவது போல் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்படுகிறதே தவிர மற்றப்படி நடப்பதெல்லாம் வெறும் கேலி கூத்துகள் தான் காமராஜன் மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. அது என்னவோ பெரிய கொடைவள்ளல் தனமாக விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர உண்மையா பலன் அதில் எதுவுமில்லை கலைஞர் புதிதாக கெட்டுபோன அரிசி சாதத்தில் வாரம் இரண்டு முட்டை தருகிறார். அந்த முட்டை சத்துணவு பொறுப்பாளர் ஆயா மற்றும் ஆசிரியர்களின் வயிற்றை நிரம்பிய பிறகு தான் குழந்தைகளின் தட்டுகளில் வந்து விழகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பெயளவில் விளம்பரம் உண்மையில் நடப்பது என்ன ஒரு ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருப்பவருக்கு தான் இலவச சலுகை அதுவும் மின்சார இணைப்பு பெற வருட கணக்கில் காத்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வெல்ல கட்டிகளை கணக்கில்லாமல் கொடுத்தால் கூட விண்ணப்பம் நகராது. மேஜைக்கு மேஜை கப்பம் கட்டி கை சலித்து போன விவசாயிகளின் எண்ணிக்கை தான் அதிகமே தவிர உடனடியாக பலன் பெற்றது ஆயிரத்தில் ஒருவர் தான். இலவச மின்சாரம் என்பது எல்லாம் சரி வெயில் காலத்தில் வயிலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் எங்கே வருகிறது.

மின்சார தட்டுபாடு அதனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் கரண்ட் வரும் என்று மின்சார இலாக்கா அறிவிக்கிறது, வருடந்தோறும் இந்த அறிவிப்பை தான் பார்க்கிறோமே தவிர மின்சார உற்பத்தியை அதிகரிக்க இவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கை என்னவென்று சல்லடை போட்டு தேடினாலும் ஒன்றும்
கிடைக்கவில்லை மின்சார உற்பத்தியை தனியார் வசம் ஒப்படைக்க போகிறார்களாம். ஒரு அரசாங்கத்தாலேயே உற்பத்தியை அதிகக்க முடியாத போது தனியாரால் எப்படி முடியும்? முடியும். தனியாரிடம் ஒப்படைத்தால் தானே இவர்களின் மிக நீண்ட சட்டைப் பை நிரம்பும் அரசாங்க உற்பத்தி செய்தால் பரதேசி மக்கள் தானே பயணடைவார்கள் தமிழ்நாட்டிற்காக உயிரையும் கொடுக்க சித்தமாக இருக்கும் இந்த உத்தமர்களுக்கு என்ன பயன்.

இவையெல்லாம் கூட கிடக்கட்டும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக ஆட்சிக்கு வந்த இவர்கள் மொழி வளர்ச்சிக்காக செய்தது என்ன. தமிழ் கற்பிக்கும் பள்ளி கூடங்கள் வருடத்திற்கு ஆயிரத்திற்கு மேல் முடப்படுகிறது. தமிழை பயிற்று மொழியாக கொண்ட படித்த இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

சட்டம், மருத்துவம், பொறியியல், கணினிதுறை போன்றவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உள்ளது, தமிழ் குழந்தைகள் பச்சை நிற பென்சிலை எடுத்து வா என்றால் புரியாமல் விழித்து க்கிரின் (green) பென்சிலை எடு என்றால் மட்டுமே எடுக்க கூடிய அளவிற்கு மொழி தேய்ந்து கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது ஆனால் செம்மொழி தகுதியை தமிழ் பெற்று விட்டது என்று பல ஆயிரம் கோடியை கழக தமிழ் ஆர்வலர்கள் சுருட்டி கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தது. அந்த விழாவிற்கு அப்துல்கலாமல் அழைக்கப்படவில்லை என்று சில அப்பாவிகள் வருத்தப்படுகிறார்கள். விஞ்ஞானி ஆனாலும் கூட தமிழை மறக்காத தூயவர் தமிழிலேயே பதவி பிராமணம் எடுத்துக் கொண்ட தலைமை குடிமகன் தமிழையும் தேசத்தையும் சுவாசமாக கொண்ட நல்லவர் தமிழக்கு செம்மொழி தகுதியை வாங்கித் தந்த உண்மை தொண்டர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தால்.

செவ்வாயழை தோட்டத்தில் சீட்டாடும் குரங்குகளான வாலி வைரமுத்து கூட்டத்தார்கள் இடையில், வட்டமிடும் கழகுகளான அழகிரி, தயாநிதிமாறன் கும்பலுக்கு மத்தியில், வாய்பிளந்து நிற்கும் ஒநாய்களான கனிமொழி, கயல்விழி போன்ற அரைவேக்காட்டு மேதாவிகளுக்கு இடையில் சுற்றி வளைக்கும் மலை பாம்புகளான ஸ்டாலின், ராசாத்தி அம்மாள் நெருக்குதலுக்கு இடையில் பாவம் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடி போயிருப்பார், ஜெயலலிதா இரவோடு இரவாக கலைஞரை கைது செய்த போது ஐய்யோ காப்பாற்றுங்கள் என்று கத்தினாரே அதே போல அப்துல்கலாம் கத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நல்ல வேளை கலைஞர் புண்ணியத்தில் நல்லவர்களின் நகைப்பிற்கு இடம் தராமல் செத்து போன இலங்கை தமிழர்களின் சாபத்திற்கு ஆளாகாமல் செத்து கொண்டிருக்கும் உலக தமிழர்களின் கோபத்திற்கு இறையாகாமல் அப்துல் கலாம் காப்பாற்றப்பட்டார். அதுவரையில் உலக தமிழர்களின் ஒரே தலைவருக்கு நன்றி.




No comments:

Post a Comment