சென்னை: 2ஜி ஸ்பெக்டிரம் ஊழலில் கருணாநிதியின் நெருங்கிய நண்பருக்கு தொடர்பு இருப்பதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்டிரம் ஊழல் குறித்த ஆதாரங்கள் நாளுக்கு நாள் ஊடகங்கள் மூலம் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஸ்பெக்டிரம் ஊழல் மூலம் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் ஆதாயம் அடைந்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாய் நாட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார் இடியே நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த சலாவுதின் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுவதாகவும், இவர் 2ஜி ஸ்பெக்டிரம் ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பல ஆயிரம் கோடி ரூபாய் பயனடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் நெருக்கத்தை பயன்படுத்தி இந்த நிறுவனம் தமிழக அரசின் பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு அதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியதை ஏற்கனவே பல ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. புதிய தலைமை செயலகம், கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூலகம் உள்ளிட்டவற்றின் கட்டக் கட்டுமானப் பணிகளை இந்த நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. மேலும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் காப்பீட்டுத் திட்டத்தில் பெரும் தொகையை ஈட்டுவதற்காக கருணாநிதியின் குடும்பத்தினருக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை இந்நிறுவனம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10947#10947 |
Sunday, December 5, 2010
2ஜி ஸ்பெக்டிரம் ஊழலில் கருணாநிதியின் நெருங்கிய நண்பருக்கு தொடர்பு : அம்பலப்படுத்தியது தனியார் தொலைக்காட்சி நிறுவனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment