Saturday, December 11, 2010

அ.தி.மு.கவா? காங்கிரஸா? குழப்பத்தில் அஜித்

Posted at September 28th, 2010 under News | No Comments »


நடிகர் அஜித் சமீபத்தில், ‘சைதை துரைசாமி’ இல்லத் திருமண விழாவில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். ‘அம்மாவின்’ காலில் விழுந்து ஆசி பெற்ற அஜித், அவருடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றுவிட்டார். இதனை கண்ட ஊடகங்கள் ‘அஜித்’ அ.தி.மு.கவில் இணையப் போவதாக செய்தி பரப்பத் துவங்கின.

இதே நிகழ்ச்சியில் நடிகர் விஜயும் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார், இருப்பினும் விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்து அனைவரும் அறிந்திருக்கின்றபடியால் அவரது சந்திப்பு ஊடகங்கள் மத்தியிலோ, மக்கள் மத்தியிலோ அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை. அ.தி.மு.கவின் தலைமையினாலும், கொள்கைகளாலும் கவரப்பட்ட அஜித், அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளும் விருப்பத்துடன் உள்ளதாக ஒரு வார பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இளைஞர் காங்கிரஸார் அஜித்தை தொடர்பு கொண்டதாகவும், காங்கிரஸில் இணையும்படி அஜித்தை கேட்டு கொண்டதாகவும் தற்பொழுது பரவலாக செய்தி பரவி வருகிறது. ஆனால் காங்கிரஸில் இணைய அஜித் மறுத்து வருகிறாராம். இது அஜித் அ.தி.மு.கவில் இணையும் விருப்பத்துடன் உள்ளார் என்பதையே உணர்த்துவதாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தையும் மறுத்துள்ள அஜித், ‘‘சைதை துரைசாமி’ தனது நண்பர் என்றும், அதன் காரணமாகவே அவரது இல்லத் திருமண விழாவிற்கு சென்றதாகவும், இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், அ.தி.மு.க என இரண்டு பெரிய கட்சிகள் அஜித்தை தங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்ப, அஜித்தோ இரண்டு கட்சியிலும் இணைய மறுத்து வருகிறார். இதனால் அஜித், சொந்தமாக கட்சி துவங்கக் கூடும், என ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

எது எப்படியானாலும் அனைத்து ஊடகங்களும் யுகத்தின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பது மட்டும் உண்மை. அஜித் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்!

http://600024.com/ta/congress-or-admk-for-ajith/

No comments:

Post a Comment