Saturday, February 5, 2011

ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன?

ராஷ்டீரிய ஸ்வயம்சேவ சங்ஹ் என்பது இதன் விரிவாக்கம்.உயிர்துடிப்புள்ள நாட்டிற்காக தானாகவே முன்வந்து வேலை செய்பவர்களின் சங்கம் என அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இதன் தலைமையகம் அமைந்திருக்கிறது.

சுதந்திரம் வாங்கும் முன்பாக, எல்லோரும் எப்படியாவது வெள்ளைக்காரனை இங்கிருந்து துரத்தியாக வேண்டும் என்ற சிந்தனையோடு சுதந்திரப்போராட்டம் நடைபெற்றது.ஒரே ஒரு எம்.பி.பி.எஸ்.முடித்த டாக்டர் மட்டும் இதற்கு மாறுபட்டு சிந்தித்தார்.

இரண்டாயிரம் மைல் நீளம்,இரண்டாயிரம் மைல் அகலம் உள்ள இந்த பாரத தேசத்தில் வீரர்களுக்கும்,தலைசிறந்த மன்னர்களுக்கும்,செல்வ வளத்துக்கும் சிறிதும் குறைவில்லை;எல்லாதுறைகளிலும் தன்னிறவு பெற்றிருந்தோம்.இருந்தும் எப்படி இந்த ஆங்கிலேயன் இந்த நாட்டை அடிமைப்படுத்தினான்?

எப்படியும் நாம் இந்த வெள்ளையனை துரத்திவிடுவோம்.அதில் சந்தேகமில்லை;ஆனால்,மீண்டும் வேறுவடிவங்களில்,வேறு முகமூடி அணிந்து(சோனியா) நமது நாட்டைக் கைப்பற்ற மாட்டான் என்பது என்ன நிச்சயம்.இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன? என்பதை சுமார் 3 ஆண்டுகளாக சிந்தித்தார்.பல அரசியல் தலைவர்களிடம் கலந்து ஆலோசித்தார்;சுவாமி விவேகானந்தரிடமும் ஆலோசனை கேட்டார்.

அதன்படி,இந்த நாட்டின் கடைசி குழந்தை பிறக்கும் வரை நிரந்தரமான தேசபக்தியை ஊட்டக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.அதன்படி 1925 ஆம் ஆண்டு விஜயதசமியன்று பிறந்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.


No comments:

Post a Comment