ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக்.1 என்று தொலைத்தொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசித் தேதி என்று எந்த முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,650 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், ஏலத்தில் பயன் பெற்ற சில நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் தங்கள் பங்குகளை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்தன.
ராசா மூலம் உரிமத்தை தரைக் கட்டணத்திற்கு வாங்கிய ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன்னனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி ரூ. 4,200 கோடி கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.
தற்போது நடந்துவரும் விசாரணையில் மேலும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று…
‘ஸ்வான் டெலிகாம்’ என்ற பெயரில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்ற எடிசலாட் டிபி நிறுவனத்திற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2ஜி ஏலம் நடந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் அதில் பங்கேற்றது. இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தவிர, தன்மீதான புகாரை அனில் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். சிஏஜி அறிக்கையில் “ஸ்வான் நிறுவனத்திற்கு தேவையே இல்லாமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.2008, ஜனவரி மாதம் 2ஜி உரிமத்தைப் பெற்றது ஸ்வான் டெலிகாம். அடுத்த 9 மாதங்களில் துபாயைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட், ஸ்வான் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பெயரை எடிசலாட் டிபி என்று மாற்றியது.
2008, செப். 17ம் தேதி சென்னையில் ‘ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ்’ என்ற நிறுவனம் வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, டிச. 17ம் தேதி, இந்த ஜெனெக்ஸ் நிறுவனம், எடிசலாட் நிறுவனத்தின் ரூ. 300 கோடி மதிப்புள்ள பங்குளை வாங்கியுள்ளது. வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்தை மட்டு் கொண்டிருந்த ஜெனெக்ஸ் நிறுவனத்திற்கு எப்படி திடீரென ரூ.300 கோடி அளவுக்கு வசதி வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை.ஜெனெக்ஸ் எக்ஸிம் நிறுவனத்தின் சார்பில் எடிசலாட் டிபி நிறுவன இயக்குனர் குழுவைச் சேர்ந்தவர் அகமது சையத் சலாஹுதீன். இவர் துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடைய மகன் ஆவார். இடிஏ ஸ்டார் குழுமம் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் பல அரசு திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது எடிசலாட் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட 2ஜி உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் யாருடைய பினாமியாக செயல்பட்டது என்பது தான் இப்போதைய பலகோடி ரூபாய் கேள்வி. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விரைவில் நியமிக்கப்படலாம். அப்போதுதானே மூடி மறைக்க முடியும்?http://www.tamilhindu.com/2010/11/congress-upa-spectrum-2g-scandal/
Tuesday, November 23, 2010
1: யாருடைய பினாமிகள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment