Saturday, November 27, 2010

ஊடகங்களின் லாலு மனப்பான்மை

nitish_lallu

பீகார் தேர்தல் முடிவுகளை வெளியிட்டபோது தங்கள் பாரபட்ச அணுகுமுறையை பெரும்பாலான ஊடகங்கள் மீண்டும் வெளிக்காட்டின. இந்த மகத்தான வெற்றி குறித்த செய்திகளை வெளியிடும்போதுகூட, ஊடகங்கள் குசும்பு செய்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் தேர்தல் பிரசாரத்திற்கு வராததால் தான் வெற்றி கிடைத்தது என்று பிரசாரம் செய்த ஊடகங்கள், பீகாரிலேயே உள்ள சுஷில்குமார் மோடியின் அரும்பணியைக் கூறாமல் தவிர்த்தன.

பா.ஜ.க.வைக் கட்டுக்குள் வைத்த நிதிஷ், மதச்சார்பின்மையைக் காத்ததால்தான் இந்த வெற்றி கிடைத்ததாம். ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றிச் சதவிகிதம் 82%; உடனிருந்த பா.ஜ.க.வின் வெற்றி விகிதமோ 89%. இதைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாரில்லை.

சில ஊடகங்கள் ‘சரியான தலைமையின்றித் தள்ளாடும் தே.ஜ.கூட்டணிக்கு புதிய தலைவர் கிடைத்துவிட்டார்’ என்று பா.ஜ.க.வை பக்கவாட்டில் குத்தின. ஆனால், அதிலுள்ள விஷமத்தைப் புரிந்துகொண்ட நிதிஷ் குமார், ‘பிரதமர் பதவியை நோக்கி நான் பயணிக்கவில்லை’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி, ஊடகங்களின் திருக்கல்த்தனத்தை மட்டுப்படுத்தினார்.

நிதிஷும் பா.ஜ.க.வும் சேர்ந்து நிகழ்த்திய அரசியல் அற்புதத்தை நிதிஷின் தனிப்பட்ட சாதனையாகவே பல ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. தேர்தல் முடிவுக்குப் பிறகு வாய் திறந்த லாலு, ”நிதிஷுக்கு வாழ்த்துக்கள்; ஆனால் பா.ஜ.க.வுக்கு வாழ்த்துக் கூற மாட்டேன்” என்று சொன்னதுதான் நமது ஊடகங்களைக் காணும்போது நினைவில் இடறுகிறது.

http://www.tamilhindu.com/2010/11/good-roads-take-nitish-kumar-home/

No comments:

Post a Comment