நவம்பர் 16, 2010 3:38:18 PM
சந்தன் மித்ரா | புதுதில்லி
ஸ்பெக்ட்ரம் ஊழலை தோண்டியெடுத்த ஜே. கோபிகிருஷ்ணனுக்கு பயனியர் தரப்பிலிருந்து பாராட்டு
இந்த ஜே.கோபிகிருஷ்ணன் என்பவர் திருவனந்தபுரத்தில் இருந்தவாறு பயனியரின் இப்போது இல்லாமல் போயிருக்கும் கொச்சி எடிஷனில் பகுதி நேர நிருபராக இருந்தார் என்பதுகூட ரொம்ப நாட்களாக எனக்குத் தெரியாது. ஆகவே அவர் 2007ல் கொச்சி எடிஷனை ஏறக்கட்டியதும் தில்லிக்கு வந்து தலைமை ஆஃபீசில் வேலை தருமாறு கோரியபோது எனக்கு அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வரவில்லை. ஆகவே அவரால் கையெழுத்திடப்பட்டு வந்த சில ஸ்டோரிகளை நான் பார்த்திருந்தாலும், அவருக்கு தில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை, ஆகவே இங்கு அவருக்கு உருப்படியான தொடர்புகள் இருக்காது என்று நான் அலுவலக தலைமையதிகாரி நவீன் உபாத்யாயாவிடம் கூறினேன். ஆனால் நவீன்தான் என்னுடன் பேசி ஒரு மூன்று மாதத்துக்கு ட்ரியலாக அவரை எடுத்துக் கொள்ள சம்மதிக்க வைத்தார். அவருக்கு தில்லியின் அளவுகோல்களுக்கு ஒவ்வாத சிறுதொகை ஸ்டைபண்ட் வழங்கப்பட்டது.
அந்த மூன்று மாதங்களில் அவர் ஒன்றும் பிரமிக்கத்தக்க ஸ்டோரீஸ் எதுவும் எழுதவில்லை. இருப்பினும், அவரது உண்மையான உழைப்பு, பிறருடன் இனிமையாக பழகும் தன்மை, விடாமுயற்சி ஆகியவை அவருக்கு முழுநேர வேலையை வாங்கித் தந்தது. சம்பளம் என்னவோ இன்னும் கட்டை சம்பளம்தான். ஆனால் பாரளுமன்றத்தின் மத்திய ஹாலில் அவரது செயல்பாட்டை விதந்தோதினர் இடதுசாரி கட்சிகளில் உள்ள சில நண்பர்கள். தகவல் தொடர்பு விவகாரங்களில் அவரது அறிவின் ஆழத்தைப் பற்றியும் கேள்விப்பட்டேன். ஆனால் அவர் அதிகாரபூர்வமாக இடது சாரிகளை கவர் செய்ததால் நான் அதற்கெல்லாம் ரொம்ப முக்கியத்துவம் தரவில்லை.
பிறகு ஆரம்பித்ததையா அவரது கட்டுரைகளின் ஊர்வலம். 2ஜி பெக்ட்ரம் ஊழலின் பரிமாணங்களை அவர் கவர் செய்ய ஆரம்பித்தார். அந்த பிரச்சினை ரொம்ப சிக்கலானது, இப்போது கூட பலருக்கு அதன் நுட்பங்கள் புரியாது. ஆனால் கோபி ஊழலை வெளியாக்கி புட்டு புட்டு வைத்தார்.
அவரிடமிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பிரத்தியேக கட்டுரைகள் வரவர அவரை நோக்கி தகவல்களும் காந்தத்தை நோக்கி வரும் இரும்பு போல வர ஆரம்பித்தன. நவின் எல்லா இணைப்புகளையும் அவதானித்து, அந்த ரிப்போர்டுகளை நகாசுபடுத்தினார். இணையத்திலிருந்து கோபியும் பலவிவரங்கலை தோண்டி எடுத்தார். 2ஜி ஊழலை அவர் விடாது பின் தொடர்ந்தார். அதிகாரிகலை சந்தித்தார். எல்லா அரசியல் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். கேரளாக்காரர் ஆனாலும் அவர் நடுநிலை அரசியலில்தான் இருந்தார்.
அவர் மேல் கொண்டுவரப்பட்ட அழுத்தங்களை நான் அறியேன், ஆனால் என் மேல் அவை கொண்டுவரப்பட்டன. எனது 27 ஆண்டு வாழ்க்கையில் இது மிக அதிகமாக இப்போது நடந்தது. இருப்பினும் அவர்றை மீறி நான் செயல்பட்டேன் என்பதைப் பெருமையாகக் கூறிக் கொள்வேன். ஆனால் எல்லாவற்றையும் மீறி நான் பெருமை கொள்வது கோபிகிருஷ்ணனுக்கு நான் எல்லா வசதிகளையும் தந்து, தேசீய ஊடகத்தில் அவரை வளையவிட்டேன் என்பது. கோபியின் பெருமைதரும் சாதனையில் இப்போது பயனியரும் ஆனந்தமாக அமர்ந்திருக்கிறது
பயனியரின் புலனாய்வுக் குழு கோபியுடன் இது பற்றி பேசியதிலிருந்து சில வரிகள்:
கேள்வி: 2-ஜி ஊழலை எப்போது கண்டுகொண்டீர்கள்?
விடை: Swan மற்றும் Unitech நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அமோக விலைகளுக்கு விற்றதுமே (4,500 கோடி மற்றும் `6,200 கோடி, செப்டம்பர் 2008-ல்). எங்கள் மூக்கு ஊழலை முகர ஆரம்பித்து விட்டது. அலுவலக தலைவர் நவீன் உபாத்யாயா என்னிடம் மேலும் தகவல்களை தேடி எடுக்குமாறு கூறினார். நல்லவேளையாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உள்ளும் புறமும் நன்றி அறிந்த ஒரு நம்பிக்கையான எட்டப்பர் கிடைத்தார். பிரதமர் ராஜாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்து ராஜாவிடமே என்ன நடக்கிறது எனக் கேட்டதாகவும் ஒருமுறை அந்த எட்டப்பர் கூறினார்.
மெதுவாக எட்டப்பர்மூலம் அமைச்சகத்தின் ஊழல்களின் பரிமாணங்கள் புலப்படத் துவங்கின. அன்னாட்களில் தான் தனக்கு முன்னால் இருந்தவர்கள் செய்ததையே தானும் செய்ததாக ராஜா பொய்யுரைத்து வந்தார். அந்த எட்டப்பரோ ராஜாவும் அவரது உறவினர்களும் பினாமி கம்பெனிகளில் செய்த முதலீடுகளை விளக்கினார். இந்த ஊழலின் பலன்கள் பல பெரிய நிறுவனங்கள், அரசியல்வாதிகள் லயசன் முதலைகள் ஆகியவருக்குத்தான் சென்றது என அவர் என்னிடம் சொன்னார்.
எனது எடிட்டருடன் பேசி அவரது ஒப்புதலைப் பெர்றால் மட்டுமே தான் மற்றத் தகவல்கலை தரவியலும் எனவும் இந்த எட்டப்பர் கூறினார். எடிட்டரும் ஒப்புதலைத் தர தகவல்கள் சரிபார்ப்பு எட்டப்பரது அலுவலகத்திலும் வேறு பல இடங்களிலும் ரகசியமாக நடந்தது.
கேள்வி: எது உங்களது முதல் ஸ்டோரி, அதன் எதிர்வினைகள் என்ன?
பதில்: ஊழலின் அளவைப் பார்த்ததுமே ராஜாவின் ரியல் எஸ்டேட் பினாமிக் கம்பெனிகளின் விவரங்களை எடுத்தோம். ராஜாவின் தகுதிக்கு மீறிய சொத்து சேர்ப்பை வெளிக்கொணர முடிவு செய்தோம். சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் சந்தன் மித்ராவும் நவீன் உபாத்யாயாவும் சரிபார்த்தனர். 11 திசம்பர் 2008-ல் வெளியான முதல் ஸ்டோரியில் ராஜாவின் பிரதான ரியல் எஸ்டேட் கம்பெனியான Green House Promoters பற்றிய விவரங்களை கூறியிருந்தோம். மற்ற பினாமி கம்பெனியின் விவரங்கள் அடுத்துவரும் நாட்களில் வர ஆரம்பித்தன.
கே: எல்லாவற்றையும் நிறுத்துமாறு உங்கள் மேல் அழுத்தம் வந்ததா? எப்படி சமாளித்தீர்கள்?
ப: முதல் ரிப்போர்ட் வந்ததுமே எடிட்டர் சொன்னபடி நான் ராஜாவை சந்தித்தேன். அவரது கட்சியில் உள்ள அவரது விரோதிகள்தான் இதற்கு பின்னால் உள்ளனரா எனக்கேட்டு சில பெயர்களையும் கூறினார். அவரது தனிப்பட்ட சொத்து விவரங்கள் எனக்கு எப்படிக் கிடைத்தன என்று அவர் என்னை கேட்டார். அப்படியே ஆடிப்போயிருந்தார் அவர். எல்லாவற்றையும் நிறுத்துமாறு அவர் கேட்டார். நான் எடிட்டர் சொன்னதாலேயே அவரது வெர்ஷனைப் பெறவே அவரைப் பார்க்க வந்தேன், வேறு எதற்கும் இல்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். ராஜா என்னுடன் பேச ஒப்புக்கொண்டாலும் திரும்பத் திரும்ப நான் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். பல பெரிய நிறுவனங்களும் என்னிடம் அதையே கேட்டன. அதே நேரம் யாரும் என்னிடம் தவறாக நடந்ததாகவோ என்னை பயமுறுத்தியதாகவோ கூற மாட்டேன்.
அச்சமயம் ராஜா 3G ஏலத்தை கேபினட்டின் ஒப்புதல் இன்றி மலிவான விலைக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தார். பெரிய நிறுவனங்களின் ஏஜெண்டுகள் நான் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டன. இல்லாவிட்டால் மத்திய அரசு 3G ஏலத்தை ஒரு EGoM-விடம் ரெஃபர் செய்யும் என அவர்கள் பயந்தனர். அதைத்தானே நாங்களும் விரும்புகிறோம் என நாங்கள் பதிலளித்தோம். அதே சமயம் என்னைக் குறி வைப்பார்கள் என்றும் பலர் எச்சரித்தனர். அதை நான் அலட்சியம் செய்தேன். 3G விஷயத்தை எப்படியாவது EGoM-க்கு கொண்டு போகக்கூடாது என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காக எனக்கு என்னவெல்லாம் ஆசை காட்டினார்கள் என்பதை நான் இங்கே கூறுவது சரியாக இருக்காது. ஆனால் கடைசியில் EGoM வந்தது, ராஜா பிக்சரில் இருந்து விலகினார், நாட்டுக்கு 1.06 லட்சம் கோடிகள் கிடைத்தன.
Q: நீங்கள் இதையெல்லாம் நிறுத்த உங்களுக்கு யாரேனும் பணம் கொடுப்பதாகச் சொன்னார்களா?
A: ஆகா செய்தார்களே. ஆஃபர் செய்த தொகைகள் மிக பெரியன. நிறுவன மற்றும் ராஜாவின் ஏஜெண்டுகளும் நான் எடிட்டரிடம் ஒன்றுமே கூறாது கட்டுரைகளை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் சிலர் டபுள் கேம் எல்லாம் ஆடினார்கள். ஒருவர் ராஜாவைப் பற்றி பல தகவல்கள் தந்து அதே சமயம் ராஜாவுக்கும் பல தகவல்கள் தந்தார். ஆனால் முதல் எட்டப்பர் ஸ்டெடியாக நின்றார் பயமின்றி. பல அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்களும் உதவி செய்தனர்.
கே: ராஜாவின் ராஜினாமாவோடு விஷயம் நிற்குமா அல்லாது மேலும் தலைகள் உருளுமா?
ப: நான் என்ன நினைக்கிறேன் என்றால் சுப்பிரமணியன் ஸ்வாமி மற்றும் சாந்தி பூஷன் தொடுத்த வழக்குகள் அவற்றின் கோர்சை முடித்து, சட்டவிரோதம் என சியேஜியால் அடையாளம் காணப்பட்ட லைசன்சுகள் எல்லாமே கேன்சலாகும். பெட்ரோல் பம்ப் ஊழல் வழக்கில் நடந்தது போல அரசு ஏலம் நடத்தச் சொல்லும். ராஜா போன்ற சிலர் சட்டத்தின் சீற்றத்துக்கு ஆளாகலாம். அதே சமயம் நிறுவனங்களுக்கு ரொம்ப பாதிப்பு இராது. ஏலம் நடந்து அரசுக்கு சுமார் 2-3 லட்சம் கோடி ரூபாய்கள் கிடைக்கலாம்.
கே: Howஸ்பெக்ட்ரம் கொள்கையில் வெளிப்படை தன்மையைக் கொணர்ந்து தில்லுமுல்லு நடக்கதிருக்க அரசு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
ப: ஸ்பெக்ட்ரம் மேலாண்மை ISROவிடம் தரவேண்டும், ஆனால் எந்த அரசியல்வாதியும் இதை விரும்ப மாட்டான், காரணம் தெரிந்ததே. ஸ்பெக்ட்ரம் ஆடிட் இன்னும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது எளிதாக பணம் பண்ணும் பொருட்டு. இஸ்ரோ மாதிரி ஒரு நிறுவனம் ஆடிட் செய்தால்தான் வெளிப்படைத் தன்மை வரும்.
கே: ஸ்பெக்ட்ரமுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?
ப: தெரியவில்லை. ராஜாவின் ராஜினாமா பற்றி தெரிந்ததும் ஒரு களைப்பு வந்துள்ளது. இப்போதைக்கு ஏதும் ஐடியா இல்லை.
முதுகில் ஒரு ஷொட்டு பயனியருக்கும் கோபிக்கும்.
ராஜாவின் ராஜினாமா பற்றித் தெரிந்ததுமே ட்வீட்டுகள் ஆரம்பித்தன. பல ட்வீட்டுகள் ரிபீட்டு என்று ஆயின. கோபி கிருஷ்ணாவுக்கும் பயனியருக்கு பாராட்டு மழை குவிந்தது. பெரிய பேப்பர்களோ பல 24x7 நியூஸ் சேனல்களோ தொடவே பயந்த விஷயத்தை பயனியரும் கோபியும் கையாண்டதை பல ட்வீட்டுகள் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டன. தோல்வி ராஜாவுக்கு மட்டுமல்ல, பெரிய ஊடகங்களுக்கும்தான்!
http://dondu.blogspot.com/2010/11/man-who-felled-king.html
No comments:
Post a Comment