First Published : 15 Nov 2010 03:11:23 AM IST
Last Updated : 15 Nov 2010 04:15:28 AM IST
புதுதில்லி, நவ. 14: 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையிலிருந்து தில்லி திரும்பிய அவர், பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவரிடம் ராஜிநாமா கடிதம் கொடுத்ததாகத் தெரிகிறது.
பிரதமர் இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது ராசா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காவும் அவை நடவடிக்கைகள் சுமுகமாகவும் அமைதியாகவும் நடைபெற உதவிடும் நோக்கிலும் எனது தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் பதவி விலகுகிறேன் என்று அப்போது ராசா கூறினார்.
அமைச்சர் ஆ.ராசா பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை முடக்கி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஏற்கெனவே ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவற்றால் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டன. அப்போது அலைக்கற்றை ஊழலும் எழுப்பப்பட்டது.
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் பதவி விலகினார். காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, போட்டி அமைப்புக் குழு தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு செயலர் பதவியிலிருந்து விலகினார். இதில் ஓரளவு சமாதானமடைந்த எதிர்க்கட்சிகள், அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பாக திமுக அமைச்சர் ராசா பதவி விலக வலியுறுத்தி வந்தன.
ஆனால் ராஜிநாமா செய்வதில்லை என்பதில் ராசா உறுதியாக இருந்தார். ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று அவர் பலமுறை கூறிவந்தார். திமுக தலைவர் முதல்வர் கருணாநிதியும் ராசா குற்றமற்றவர், அவர் ராஜிநாமா செய்யத் தேவையில்லை என்று கூறிவந்தார்.
இந்த நிலையில் ராசா ராஜிநாமா செய்யும்வரை நாடாளுமன்றத்தை முடக்குவது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்தன. அதோடு அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
மேலும் அலைக்கற்றை ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும்போது ராசா அமைச்சர் பதவியில் நீடிப்பது குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்பட்டது. ஏற்கெனவே ராசா பதவியில் நீடிப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டுமானால் ராசா பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த முடிவு திமுக தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது.
ராசா பதவி பறிக்கப்படுவதை திமுக தலைமை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நிலைமை கையை மீறிப் போய்விட்டதால் வேறு வழியில்லை என்பதை காங்கிரஸ் மேலிடம்திமுக தலைமைக்கு உணர்த்தியதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் மேலிடத் தகவலை அடுத்து முதல்வர் கருணாநிதி ராசாவை அழைத்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் சென்னையிலிருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமரைச் சந்தித்து ராஜிநாமா கடிதம் கொடுத்தார்.
தொலைத் தொடர்புத் துறை மூலம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவே பொறுப்பு. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
ஆனால் "நான் தவறேதும் செய்யவில்லை. அரசின் கொள்கை முடிவுப்படியே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1999-ம் ஆண்டு முந்தைய அரசு மேற்கொண்ட கொள்கையின்படி லைசென்ஸ் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது' என்று அவர் கூறினார்.
அதற்கும் மேலாக, "அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் யாவும் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டன' என்றும் அமைச்சர் ராசா கூறினார்.
பிரதமரிடம் விளக்கம் கேட்க...
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை இந்தப் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இப்போது ராசா ராஜிநாமா செய்தாலும் இந்தப் பிரச்னையில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் யாவும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலே செய்யப்பட்டது என்று அமைச்சர் ராசா கூறி வருவதால் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், அலைக்கற்றை ஊழல்தான்.
இந்த விஷயத்தில் பிரதமரின் மெüனம் கலைய வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக குற்றச்சாட்டு கூறும்போதெல்லாம், பிரதமருக்கு தெரிந்தே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலே செயல்பட்டுள்ளேன் என்று ராசா கூறி வருகிறார். எனவே இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. ராசா சொல்வதைப்போல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிரதமர் நேரடியாக ஒப்புதல் தந்தாரா என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கோர உள்ளனர்.
ராசா பதவி விலகுவது என்பது இரண்டாம்பட்சம்தான். முதலில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த் திவாரி கூறினார்.
அரசுக்கு தலைமையேற்பவர் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா கூறினார்.
ஏற்கெனவே கடந்த வாரம் ஊழல் பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்து தணிக்கை தலைவர் வினோத் ராய் புதன்கிழமை தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தார். அதில் தொலைத் தொடர்பு அமைச்சகம் சிலருக்கு சாதகமாக நடந்து கொண்டதால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை பூதாகரமாக்குவது எதிர்க்கட்சிகளின் திட்டம்.
கனிமொழி மறுப்பு
ராசாவுக்குப் பதில் கனிமொழி தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்கப்படுவார் என்று வெளியான செய்தியை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மறுத்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவே தொடர்வேன் என்று அவர் கூறினார்.
அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ்-திமுக உறவில் விரிசல் ஏதுமில்லை. எனக்கு தெரிந்து இதுவரை காங்கிரஸ்- திமுக இடையே உறவு சிறப்பாக உள்ளது என்றார்.
Courtesy: www.dinamani.com

No comments:
Post a Comment